...

24 views

நவீன காதலுக்கு இது பொருந்தாது...
பேசும் வேளைகளில்
விழிகள் தவிர்த்து
வேறெங்கும் மேயாத
பெருங்காதல்...

அருகிலிருக்கும்
வேளைகளிலும்
அடி தூரத்தில்
விலகி நிரம்பிடும்
கண்ணியக் காதல்...

தொலை தூரங்களை
நம்பிக்கைகளில்
நிலை நிறுத்தி
தொடர்ந்திடும்
நம்பிக்கைக் காதல்....

மறுக்கப்படும்
பட்சத்திலும்
மறக்க மறந்து
ஊமையாய் புலம்பித்
தொலையும்
ஒருதலைக் காதல்...

பிரிவொன்றிற்கு
வஞ்சங்களை
விதைக்காது
வாழ்த்தியபடி
விடைபெறும்
உன்னதக் காதல்...

நீங்கள் எத்தனை
மறுத்தாலும்
இதில் எதிலுமே
ஒன்றிப் போகாததுதான்
இன்றைய நவீன காதல்....!

© நித்திலன்...🎭