...

2 views

ஏமாற்றங்களைத் தவிர்ப்பது எப்படி
ஏமாற்றங்களை
ஏற்றுக் கொள்ள முடியவில்லை
என்னால்

எனவே என்னை
ஆக்கிரமிக்க வரும்
எதிர்பார்ப்புகளுக்கு
நான்
ஏமாற்றம் அளிக்கிறேன்

ஆக்கிரமிப்பிற்கு
அனுமதி அளிக்காததால்
ஆத்திரம் அடைகின்றன
ஏமாற்றமடைந்த
எதிர்பார்ப்புகள்

எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாற்றம் அடைவதை விட_
எதிர்பார்ப்புகளின்
எதிர்ப்புகளை
சமாளித்து விடுவது
சுலபம் தான்

ஏகப்பட்ட வலிகளைத் தந்த
ஏமாற்றங்களைத்தான்
ஏகப்பட்ட தடவைகள்
அனுபவித்திருக்கிறோமே!

இந்த அளவுக்குக் கூட எச்சரிக்கை
இல்லை என்றால் எப்படி?

அப்புறம்
இந்த எதிர்பார்ப்புகள்
நம்மை
பஜ்ஜி போட்டு சாப்பிட்டு விடும்
😉🤭🤗🤫

© iAmRangz