...

5 views

காலை நேர உற்சாகம்..
காலை நேர உற்சாகம்..
கன்னியவளின் எதிரில்
கண்விழித்தால்..

காலை நேர உற்சாகம்
காரிகையவளின் கன்னத்தில்
முத்தமிட்டால்..

காலை நேர உற்சாகம்
கண்ணில் எனது அவள்
இதழ்பதித்தால்..

காலை நேர உற்சாகம்
கணக்காக அவள் கன்னத்தில்
குழிவிழுந்தால்..

காலை நேர உற்சாகம்
கணக்காக குழிவிழுகும் கன்னத்தில்
நானிருந்தால்..

காலை நேர உற்சாகம்
காப்பியுடன் கமலியவளையும்
கலந்தால்..

காலை நேர உற்சாகம்
தேநீரில் குறையும்தேனை அவளிடம் ருசிபார்த்தால்..

காலை நேர உற்சாகம்
தென்றலில் வீசுதலால் முந்தானை
வந்துஎழுப்பினால்..

காலை நேர உற்சாகம்
கண்விழிக்க முயலும் போது
கட்டியணைத்தால்..

காலை நேர உற்சாகம்
கட்டிலில் எழமுயன்றே அவள்பால்
சாய்ந்தால்..

காலை நேர உற்சாகம்
விடிந்தும் சாய்ந்த வண்ணம்
திரண்டிருந்தால்..

காலை நேர உற்சாகம்
பிரிய மறுத்து அணைத்து
முற்றுகையிட்டால்..

காலை நேர உற்சாகம்
சேர்ந்த வண்ணம் அடித்து
வரைந்திருந்தால்..

காலை நேர உற்சாகம்
பிடித்தபோக்கில் செலுத்தி கனவில்
எழுந்திருந்தால்..

காலை நேர உற்சாகம்
பாட்டும் பாவமுமாக பாரழகாய்
அவளுடனிருந்தால்..

காலை நேர உற்சாகம்
பூம்பதுமையவள் உடன் என்றும்
புன்னகையிருந்தால்..

காலை நேர உற்சாகம்
வான்மதியவள் வகிடில் கோதி
வட்டமிட்டால்..

காலை நேர உற்சாகம்
தேவதையவளின் தேவைகளை
தேடிசென்றால்..

காலை நேர உற்சாகம்..
கணப்பொழுதும் காலைவரை
கலந்திருந்தால்..

காலை நேர உற்சாகம்..
கங்கைமகள் கண்களில் என்றும்
மின்னுமொளியிருந்தால்..

© CG Kumaran