...

3 views

❤️தீராத காதல்-2 ❤️
1990ம் ஆண்டு காஞ்சிபுரத்தில்நடந்த நிகழ்வு அவளின் நினைவிற்கு வந்தது..... மறுநாள் தீபாவளி என்பதால் ஊரே கோலாகலமாகவும் ,வண்ணமயமாகவும் காட்சி அளித்தது.போகும் வழி எல்லாம் பட்டாசுகளின் சத்தம் கேட்டது, அனைவரின் வீட்டிலும் பலகாரம் செய்து கொண்டிருந்தனர்... இவளும் அந்த வேலையில் மூழ்கி இருந்தாள்.ரேணு(7வயது) தனது தங்கை பவியின்(1வயது) அருகில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தாள், அப்போது சுந்தர் வீட்டினுள் நுழைய ரேணு தன் அம்மாவை நோக்கி அப்பா வந்துவிட்டார் என அலறியபடி தனது அப்பாவை அணைத்து கொண்டாள் ,அவளும் உடனே பலகாரத்தை தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தாள்.சுந்தர் முகம் முழுவதும் வாடி சோர்வுடன் ஒரு மூலையில் போய் அமர்ந்திருந்தார்.

"போன காரியம் என்ன ஆச்சு? ஏன் முகமெல்லாம் வாடியிருக்கிறது..."

எல்லாம் நமக்கு எதிராக தான் இருக்கிறது.நாளைக்கே நெசவு ஆலையை இடிக்க போராங்கலாம்.

நீங்களும் எவ்வளவு தான் போராடுவீங்க... அதான் அங்க கட்டபோற தொழிற்சாலையிலே எல்லாருக்கும் வேலை தரனு சொல்கிறார்களே!!

"அதற்காக பாரம்பரியமா பார்த்த நெசவையும் தலைமுறை தலைமுறையாக வேலை செய்த ஆலையையும் அப்படியே விட முடியுமா?...."என்று ஆதங்கத்துடன் கூறினார்.

என்னிடம் ஆதங்கபட்டு என்ன பயன்...சரி இப்ப என்ன தான் முடிவு பண்ணிருக்கிங்க?

அங்க வேலை பார்க்குற 150 பேரும் சேர்ந்து ஆலை உள்ளே இருந்து நல்ல முடிவு கிடைக்கும் வரை போராட்டம் நடத்த உள்ளோம்.

இது சரியா படலே!!... அரசாங்கத்தை எதிர்த்து நம்மால் என்ன செய்ய முடியும்... என்று விரக்தியில் கூறினாள்.

அப்போது சுந்தர்.... சுந்தர் என வெளியிலிருந்து ஆலை தொழிலாளி அழைக்க.... இவன் சட்டென எழுந்து அருகில் விளையாடும் தனது மகள்களுக்கு முத்தத்தை பதித்து, அவளிடம் பார்வையில் விடை பெற்றான்.

அவர் வாசல் கதவை கடக்க பவி அழுக ஆரம்பித்துவிட்டாள்.... இவளுக்கு ஒருவித
பதற்றம் அந்த தருணம் அவள் வேண்டாத தெய்வம் இல்லை... எல்லாம் நல்லதே நடக்கும் என்று மனதை சமாதானம் செய்து கொண்டாள்.
.
.
.
தொடரும் ‌‌....✍️