...

3 views

பொக்கிஷமான நட்பு-12
"திவ்யா திவ்யா திவ்யா!!!!" என்று கதறி அழுந்த பிரியா தூக்கத்திலிருந்து "திவ்யா!!!" என்று அலறி எழுந்து உட்கார்தாள்! "ச்சே கனவா" என்று சொல்லி, அவள் தொலைபேசியை எடுத்து பார்த்தாள் மணி நல்லிரவு நான்கு. திவ்யாவுக்கு தொடர்பு கொண்டாள் ஆனால் அவள் அழைப்புக்கு பதில் கொடுக்க வில்லை. படுக்கையில் இருந்து இறங்கி, தண்ணீரை குடித்து விட்டு, அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டு இருந்தாள். "இவளுக்கு க்கோள் பண்ண எடுக்கல என்ன பண்றது?" என்று யோசித்தாள். "சரி காலையில மறுபடியும் ட்டிராய் பண்ணி பாப்போ" ன்னு சொல்லி தூங்கினாள் ஆனால் அவளாள் தூங்க முடிய வில்லை. இப்படியே உருண்டு புரண்டு மணி காலை ஆறாகி விட்டது. பிரியா காலையில் எழுந்து மறுபடியும் தன் தோழிக்கு தொடர்பு கொண்டாள் மீண்டும் அவள் அழைப்புக்கு பதில் கொடுக்க வில்லை. "சரி குழிச்சிட்டு வந்து அவ அம்மாவுக்கு க்கோள் பண்ணி பார்ப்போம்" ன்னு செல்லி குளியல் அறைக்கு சென்றாள். குளித்து விட்டு வகுப்புக்கு கிளம்பி வீட்டை விட்டு வெளியே ஆகும் முன் திவ்யாவின் அம்மாவுக்கு தொடர்புக் கொண்டாள். ஆனால் திருமதி மாலினியிடம் இருத்தும் பதில் கிடைக்க வில்லை! பிரியாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. "ஏன் அம்மாவும் ஃப்போன் எடுக்க மாட்டீக்கிறாங்க? ஏதாச்சும் புரோம்பலமா இருக்குமோ? சரி க்கிளாஸ் முடிஞ்சு மறுபடியும் அடிச்சி பார்ப்போம்"
 என்று சொல்லி வீட்டை பூட்டி கல்லூரிக்கு சென்றாள். அவள் கல்லூரி முடிந்து, வேலைக்கு சென்றாள் அந்த பரபரப்பில் தன் தோழிக்கு தொடர்பு கொள்ள மறந்துவிட்டாள்! வேலை முடிந்து வீடு திரும்ப மணி இரவு பத்தாகிவிட்டது. அவள் குழித்துவிட்டு, உணவை சாப்பிட்டு, மறுநாள் கல்லூரிக்கு செல்வதற்கு தயார் செய்து விட்டு படுக்கைக்கு சென்றாள். வேலை செய்த அழுப்பில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவள் கதவு தட்டும் சத்தம் கேட்டதும் அவள் ஒருகணம் பிரமித்து எழுந்து நின்றாள்! கைக்கால் நடுங்கி, இருதயம் பட பட வென்று துடித்தது! "என்ன கனவு கண்ட மாதிரியே கதவு தட்டுர சத்தோ கேட்குது" என்று யோசித்தாள். "இவ வேர க்கோள் பண்ணா எடுக்க மாட்டீக்கிறாளே..." "இப்போ என்ன பண்றது?" என்று பதற்றத்துடன் யோசித்தாள். "சரி அவுங்க அம்மாவுக்கு க்கோள் பண்ணி பார்ப்போம்" என்று சொல்லி அவள் தொலைபேசியை எடுத்து திவ்யாவின் அம்மாவுக்கு தொடர்புக் கொண்டாள். "போன் ரிங் போது எடுக்க மாட்டீக்கிறாங்களே" "ஃப்பிளிஸ் அம்மா க்கோள் எடுங்க அம்மா" என்று தனக்குள்ளே சொல்லி மறுபடியும் தொடர்புக் கொண்டாள். ஆனால் திருமதி மாலினியோ எடுக்க வில்லை. "அய்யோ இப்போ நா என்ன பண்றதுனே தெரியலையே" ன்னு சொல்லி அழுதாள். கதவு தட்டும் சத்தம் அதிக வேகமாக கேட்டதும் பிரியாவின் இருதயம் இன்னும் வேகமாக துடித்தது... கைகால் சிலிர்த்தது, அவள் கண்ணீரை துடைத்து, மெல்ல மெல்ல அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள். 

தொடரும்...

#Writcostory
#frienship
#family
© Dana Hephzibah