...

3 views

கதை கேள்!

பிரச்சனைகளோடு
வருவோர்க்கு,

மன நிம்மதியை தந்து,
வழியனுப்பும்,

உத்தமமான பணி ,

நீதிபதி பணி !

அப்படிபட்ட

நீதிபதிகளின் கதை இது !



மணி அடித்து,

பஞ்சாயத்து தொடங்கலாம்,

தம்பி
முதலில் நீ உனது குறையை ஜட்ஜ் ஐயாவிடம் சொல்லலாம் என,

டபாரி சொல்லி விட்டு அமர்ந்தான் !

ஜட்ஜ் சார்.

வணக்கம் !
என் பெயர் ராஜா !

அவள் எனது பென்சிலை கடனாக வாங்கிய பிறகு திருப்பி தர மறுக்கிறாள்-
அவள் கடன் வாங்கியதற்கு சாட்சி கூட உள்ளது-என பொடியன் ஒருவன் சொல்லி விட்டு அமர்ந்தான் !

டபாரி எழுந்து பாப்பா இப்பொழுது நீ முறையிடலாம் என கூறி அமர்ந்தான் !


ஜட்ஜ் சார் வணக்கம் !
என் பெயர் ராணி !
நான் அரசுப்பள்ளியில்
5ஆம் வகுப்பு படிக்கிறேன் !

அவன் ஒருநாள் முன்னதாக

அதாவது சரியாக 13/11/22 அன்று

என்னுடைய புது பேனாவை கடனாக வாங்கி
மை முழுவதையும் எழுதி காலி செய்துவிட்டான் ,

திருப்பி கேட்டால் நான் வாங்கவே -யில்லை என பொய் சொல்கிறான்-நான் பேனா வாங்கியதற்கு ரசீதும் அவன் சண்டையிட்டதற்கு சாட்சியும் உள்ளது-
என சொல்லி அமர்ந்தாள் !

டபாரி எழுந்து
சாட்சிகளை அழைக்க
விசாரணை சிறிது நேரம் நடந்தது !


ஜட்ஜ் வழக்கை முழுவதும் கேட்டு முடித்த உடன்-

டபாரியை அழைத்து,
பேனாவும்- பென்சிலும் வாங்கிவரச் சொன்னார் !

பிறகு,

சிறுவனிடமும் சிறுமியிடமும்
ஆளுக்கொன்று கொடுத்து,
நாளை -அதாவது குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தில்
தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றார் !

ஓகே !
பாய்ஸ் - அன்ட்-கேல்ஸ்
ரிகர்சல் இதோடு போதும்
நாளை
நூற்றுக்கணக்கான
மாணவர்கள் கரகோஷம் அரங்கை நிறைக்கட்டும் !

வாழ்த்துக்கள் ,

சொல்லி முடித்து வைத்தார் ஆசிரியர் !

© s lucas