...

8 views

யார் அவர்கள்...3
நான் புரியாமல் யோசித்து கொண்டிருந்த அந்த வேளையில், மீண்டும் அழைப்பு மணியின் ஓசை இம்சித்து வாசலுக்கு வரவைத்தது, வெளியே வீட்டின் உரிமையாளர் நின்று கொண்டிருந்தார், அவரை பார்த்தவுடன் என்னிடம் உண்மைகளை மறைத்து வாடகைக்கு விட்ட கோபம்தான் முதலில் வந்தது, அதை அவரே புரிந்துகொண்ட விதமாக, விஷயத்திற்கு வந்தார், தம்பி என் மேல கோவமா இருப்பேன்னு தெரியும் அதான் உன்ன பார்த்து சில உண்மைகள சொல்லீட்டு போலாம்னு வந்தேன், நீங்க நினைக்குற மாதிரி நான் வாடகைக்கு விடுறதுகாக இத மறைக்கல, நீங்க தனியா இந்த வீட்ல குடியிருக்கீங்க, இந்த விஷயம் தெரிய வந்த ஒவ்வொரு நாளும் பயந்துட்டு இருப்பீங்க, அதற்கு விஷயம் தெரியாம தைரியமா இருக்குறதே மேல் னு தோனுச்சு அதான், இப்போ கூட ஒன்னும் இல்ல நீங்க இந்த வீட்ல இருக்க வேண்டாம் காலி பண்ணிடுங்க, அத சொல்லீட்டு போக தான் வந்தான், என கூறவும் எனக்கு அது ஒரு வகையில் நியாயமாக தான் பட்டது, அவ்வேளை என் கைப்பேசி அழைப்பு கேட்டு ஒரு நிமிடம் என்றவாறு, மாடிக்கு சென்றேன், தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு, மறுமுனையில், தம்பி நான் தான் பா, நீங்க குடியிருக்குற வீட்டு முதலாளியோட சம்சாரம் பேசுறேன், நானும் அவரும் ஒரு விஷயமா வெளியூறு வந்துருக்கோம் அதனால நீங்க கரண்ட் பில் கட்டிட முடியுமா, இன்னைக்குதான் கடைசி நாளு, என கூற, நானோ, அட என்னமா அவர் என்கூட தானே நின்னு பேசிட்டு இருக்காரு, இருங்க அவர் கிட்டயே தர்றேன் னு சொல்லி கீழே இறங்கி வந்தால் யாருமே இல்லை, வெளியில் சென்று பார்த்தால் வந்து சென்ற தடம் கூட இல்லை!
(தொடரும்.....)

- சிவ ப்ரகாஷ்

#யார்அவர்கள் #சிவப்ரகாஷ்
© சிவ ப்ரகாஷ்