...

15 views

மச்சானுக்கு முத்தம் குடு...
கொரோனா வைரஸ்...
உலகையே உலுக்கி வருகிற நோய் தொற்று.
கல்லூரி விடுமுறை விட்டுள்ளதால் நானும் என் மைத்துனரும் எங்கள் கிராமத்தில் நாங்கள் வழக்கமான அமர்ந்து பொழுதுபோக்கும் இடத்தில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவன் கூறினான் அவன் தங்கைக்கு உடல் நிலை சரியில்லை. ஆகையால் எங்கள் ஊர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளதாக கூறினான்.
சற்று நேரத்தில் அவளும் அவள் அண்ணனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அந்த இடத்தில் சற்று இறங்கி நிற்கும் நிலை ஏற்பட நானோ சும்மா இருக்க முடியாமல் அவளின் பெயரைக் கூறி "என்ன கொரோனா.வா?" எனக்கேட்க அவளுடன் வந்த அவளின் அண்ணன் அவளிடம் "ஆயி மச்சானுக்கு முத்தம் குடு, அவருக்கும் பரவட்டும்" என்றார்.
எனக்கு ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது.
@murugs151o
#Corona #villagelife #covid-19 #pudukkottai #holidays #144