...

5 views

04) இமைக்கா நொடிகள்.
அத்தியாயம் 04

நின்று கொண்டே இருப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று நினைத்தவன், wheeling chairஇல் அமர்ந்து கொண்டே phoneஐ நோண்டி கொண்டிருந்தான்.

அவனுக்கு பின்னால் நின்றிருந்தவரோ, யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

"அதில்லங்க.. ப்ச்ச்ச்.. சொன்னா கேளுங்க.." என்று அவர் பேசிக் கொண்டே இருக்க, விஷால் அவரை கவனிக்க ஆரம்பித்தான்.

அவரோ, பேசிக் கொண்டே போனார்.
"உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல.." மரியாதை பரி போய் இருந்தது.

அப்போது விஷாலின் phone அடித்தது.. சூரஜ் தான் அழைத்திருந்தான். எடுத்து காதிற்கு கொடுத்தான் விஷால்.

சூரஜ்- டேய்.. நான் சொல்ற இடத்துக்கு சீக்கிரமா வா..

விஷால்- நான் lineல இருக்கேன் டா.

சூரஜ்- ப்ச்ச்ச்.. அங்க என்ன நடக்குது. எத்தனாவது token.

விஷால்- 1999 டா. எல்லாரும் உக்காந்துட்டு தான் இருக்கோம்.

சூரஜ்- என்னதுஉஉஉ 1999ஆ... நீ எப்போ வருவ..

விஷால்- ஏன் மச்சி.. நான் இல்லாம இருக்க முடியலையோ???

சூரஜ்- போடாங்கு.. நீ வந்தா ஒருத்தவங்கள பாக்க போலாம்னு இருந்தேன். அதான்.. நீ வரலன்னா போ.. என்று கூறி விட்டு வைத்து விட்டான் அவன்.

விஷால்- இந்த வேலை முடியட்டும் டா. வரேன்.. ஒன்று கூறி விட்டு, அவன் ஃபோனை வைத்து விட்டான்.

*

இங்கு நம் நாயகிகள் இருவரும், தனி தனியாக 'Should not Blink' gameஐ பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் எதுவும் உருப்படியாக கிடைக்கவில்லை..

விது- நிஷா, என்னோட Chain காணம் டி. கவலையுடன் கூறினாள் அவள்.

நிஷா- என்னோடதும் தான் காணம். என்று கூறியவளுக்கு சற்றே பயமாக தான் இருந்தது. கொலை நடந்த இடத்தில் விட்டு விட்டு வந்து  விட்டோமோ என்ற கவலை அவளுக்கு.

விது- நிஷா, என்னோடது  அந்த கொல நடந்துச்சுல்ல.. அங்கையே விட்ட்டுட்டு வந்துட்டேன்‌.

நிஷா சிலை போல் அமர்ந்து இருந்தாள். அந்த துண்டுச்சீட்டை எடுக்கும் போது, அவளது chain கீழே விழுந்து விட்டது.

விது- நிஷா, வரியா படம் பாக்கலாம்.

நிஷா- படமா?? என்ன படம் பாக்கலாம்..

விது- Truth or dare.. பாக்கலாமா?? please டி.. என்று கெஞ்சினாள்...

நிஷா- Interest இல்ல டி. வேண்டாம்..‌ என்றவளின் நினைவு பின்னோக்கி சென்றது..

*

அவளது தந்தை பெயர் 'பழனி'.. தாய் 'மணியம்மாள்' அவளுக்கு ஆண்களை கண்டாலே வெறுப்பு வருவதற்கு முதல் காரணம் இவள் தந்தை தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் hero அவளது தந்தை தான். ஆனால், இவளுக்கு அனைத்தும் நேர்மறையாக இருக்கிறது. அவளுக்கு அவள் தந்தை தான் முதல் வில்லன். அவரை பார்த்தால் கொலை செய்யும் அளவிற்கு அவளுக்கு ஆத்திரம் வரும். விது தான் அவளை அடக்குவாள்.

சிறு வயது முதலே தைரியத்துடன் வாழ்பவள் தான் இவள். எவர் என்ன சொன்னாலும் 'நீ சொன்னா நான் கேக்கனுமா' என்றே நடப்பவள். அவர்கள் கூறியது சரி என்றால் ஏற்றுக் கொள்வாள். தேவையில்லாமல் ‌பேசுபவர்களை பார்த்தால் வெறுப்பு தான் வரும் அவளுக்கு.

அவளது தந்தை ஒரு நல்ல குடிமகன். நாள் முழுவதும் தண்ணியில் மிதப்பவர்.. இப்படி பட்டவரை கண்டால் எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும். அவளுக்கும் அவள் தந்தையை பிடிக்கவில்லை. சொல்லி திருத்தப் பார்த்தாள். (அந்த சின்ன வயசுல அவ்ளோ தைரியம்) ஆனால், அவரோ இவளை பெல்ட்டை கழட்டி அடித்தார். இவள் அழவில்லை, எதிர்க்கவில்லை, சிலையென நின்றாள். அவள் தாய் தான் வந்து அவரை தடுக்க, அவருக்கும் சேர்த்தே அடி விழுந்தது.

இதை பார்த்தவளுக்கு கோபம் வர, கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் வைத்து விட்டாள்.

"இனி, எங்க அம்மாவ அடிச்ச, உன்ன கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்" என்று மிரட்டினாள் அவள்.

அவரோ ஆடி போனார். சிறு குழந்தை என்ன செய்து விட போகிறது என்ற அலட்சியம் தான். ஆனால், நிஷா குழந்தையல்ல.. குழந்தை வடிவில் இருக்கும் சிங்கம் என்று அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

நாட்கள் விரைவாக நகர்ந்தது. அன்று அவர் கழுத்தில் கத்தியை வைத்த பிறகு, அவர் இவள் தாயை அடிப்பதில்லை.

அன்றொரு நாள், அவள் தாய் வீட்டில் தனியாக தான் இருந்தாள். நிஷா அருகில் இருந்தால் அவர்கள் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார் அவர்.

ஆனால், நிஷாவிற்கு இன்று பரிட்சை என்பதால், விரைவாக பள்ளிக்கு சென்று விட்டாள்.

பழனி- என்ன டி.. உன்னோட பொண்ண வச்சு ரௌடிசம் பண்றியா?? உன்னோட பொண்ண ரௌடியா மாத்த போரியா?? என்று கேட்டுக் கொண்டே அவர் அருகில் வந்தார் அவர்.

நிஷா- அது எதுக்கு உனக்கு?? எதுக்கு என்னோட  வீட்டுக்கு வந்த?? வெளிய போ.. என்று கத்தினாள் அவள்.

பழனி- நான் உன்னோட அப்பா..

நிஷா- போடா.. அப்பாவாம். அந்த மரியாத உனக்கு எதுக்கு. அப்பான்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு. உன்ன நான் அப்பான்னு சொன்னேன்னு வை.. அப்பான்ற வார்த்தைக்கே கலங்கம். நீலாம் ஒரு அப்பான்னு வெளிய சொல்லிக்காத. சிரிக்க போராங்க.. என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே கூறிக் கொண்டே அருகில் இருந்த கத்தியை எடுத்து பார்த்தாள்.

பழனி நிஷாவை அடிக்க வர, நிஷா கொஞ்சம் நகர்ந்ததால், அவர் கீழே விழ, அவள் கையில் இருந்த கத்தி, அவரின் கழுத்தில் சொருகி விட்டது..

நிஷா பயந்து போனாள். என்ன தான் மிரட்டினாலும், அவளுக்கு கொல்லும் அளவுக்கு தைரியம் இருக்கவில்லை. அவளின் தாய் தான், அவளை ஆசுவாசப்படுத்தினார்.

நிஷாவின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. என்ன செய்வாள் அவள். மிரட்ட தான் அவள் கையில் கத்தியை வைத்திருந்தாள். அதாலையே அவர் இறந்து போவார் என்று அவள் நினைக்கவில்லை‌.

இறுதியில் அவள் தாயே குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தும் விட்டார்.

*

இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவளின் கண்கள் கண்ணீரை உதிர்க்க தொடங்கியது.

விது இதை பார்த்து, கோவப்பட்டாள். நிஷா இது போலவே அடிக்கடி அழுவாள் என்பதால், அவளை அனைத்துக்கொண்டு திட்டினாள் விது.

விது- நிஷா.. ஏன் டி இப்டி பண்ற. உங்கப்பா கெட்டவர் டி. நீ என்ன பண்ணுவ. உங்க அப்பாவே தான வந்து விழுந்தாங்க.. என்று அவள் எவ்வளவு சமாதானம் செய்தாலும் இவள் அதை கேட்பது போல் தெரியவில்லை. அமைதியாக கண்ணீர் வடித்தபடி இருந்தாள்.

அதன் பின்னர் விது அவளை ஒன்றும் சொல்லாமல், மெதுவாக முதுகை தட்டியபடி இருந்தாள்.

*


© Ashwini