...

1 views

போர்க்களத்தில் மலர்ந்த காதல் மலர் அவள்
 

அவளுடன் அந்த நிமிடம் கையில் ஆயுதம் மனதில் அவளின்  முகம், வந்த காரணமோ போர்க்களம் அவள் விழியில் விழுந்த பொழுதில் என்னை மறந்தேன் நானென ராஜா மனதில் கவிதை எழுதிட , அவரைப் பார்த்த தீபா என்ன ஆச்சு எனக் கேட்க அதற்க்கு அவர் எதும் இல்லையெனக் கூறினார் 

அங்கே ஒரு கூட்டம் தண்ணீர் நடுவே வித்தை காட்ட ராஜா இவளின் அழகில் மொத்தமாய் வீழந்து இருந்தார் 

ராஜா மனதில் இருந்த காதலை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு அடுத்து என்ன செய்யலாமென யோசிக்க தீபா வைப்பார்த்தது இங்க என்ன இருக்கு எனக் கேட்கத் தீபா எனக்குத் தெரிந்து இங்க மூணு டீம் இருக்கணும் துறைமுகம் பகுதியிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கிற கப்பல் தான் சரக்குக் கப்பல் அந்தக் கப்பல் எங்க இருந்து வருது எனக் கண்டுபிடிக்கணும் எனக் கூற அதற்க்கு ராஜா நீ ஒண்ணு பண்ணு நீ அந்தக் கப்பல் பத்தி விசாரிக்கப் பாரு நான் இங்க இருக்கிற மக்கள் நடுவுல ஒரு முறை போய்ட்டு வாரேன் எனக் கூறினான் 

அதைக் கேட்ட தீபா எதற்க்கு எனக் கேட்க அதற்க்கு ராஜா இந்த மாதிரி குருப் இந்த ஊர் காரங்க லா இருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி மாசத்துல ரெண்டு முறை இல்லை ஒரு முறை வர இந்த மாதிரிச் சரக்கை எடுக்க இந்த ஊர் மக்கள் பெரும்பாலும் முன்வரமாட்டாங்க அவங்க எண்ணம் எல்லாமே மீன் கடலுள்ள இருந்து கிடைக்கிற பொருள் தான் இந்த மாதிரி சரக்குக் கப்பல் சார்ந்த பொருள் எல்லாமே எதாவது ஒரு பெரிய தலை தான் செய்யும் அவங்க யாரும் அவளோ முட்டாள் இல்லையேயென ராஜா கூறினான் 

அதைக் கேட்ட தீபா இப்போ என்ன சொல்ல வாரிங்க எனக் கேட்க இந்த இடம் நமக்கு ரொம்ப புதுசு நாம இதுவரை கப்பல் கடல் வணிகம் மூலமா வர எந்தப் பொருள் எந்தச் சம்பவம் பார்த்தது இல்லை இது நமக்கு ரொம்ப முக்கியமான ஒண்ணு அதுக்கு தானெனக் கூறி விட்டுத் தாங்கள் வந்த கார் இருக்கும் இடம் நோக்கி இருவரும் சென்றார் உடனே தீபாவை காரில் ஏறச் சொல்லிவிட்டு இருவரும் அவர்கள் அலுவலகம் செல்லத் தீபா இதுவரை யார் கூறியதையும் கேட்டுப் பொறுமையாகச் செயல் படமாட்டாள் அவளைப் பொறுத்த வரை அவள் தான் அவளுக்கு அவள் மட்டுமே பொதும் என நினைப்பாள் ஆனால் என்னவோ ராஜா வைப்பார்த்தபின் அவளிடம் சில மாற்றம் இருந்தது .. 

இருவரும் வந்தவுடனே யாருக்கும் தெரியாமல் விக்ரம் இருக்கும் இடம் நோக்கிச் சென்றனர் தீபா வும், என்ன தான் செய்கிறானெனப் பார்போம் என அவள் அவன் பின்னே செல்ல அங்கே விக்ரம் இருப்பதை பார்த்துத் திடுக்கிட்டுப் போனால். 

ஏன் என்றால் அங்கே இருக்கும மேல் அதிகாரி மட்டுமே விக்ரமை பார்க்க முடியும் அது எப்படி ராஜா வந்து சில நாட்கள் தான் ஆகிறது எப்படி இவனால் இங்கே வர முடிந்தது என நினைத்துக் கொண்டு இருந்தால் 

உள்ளே வந்த ராஜா விக்ரமை பார்த்துச் சார் நாங்க ரெண்டு பேரும் இப்போ தான் துறைமுகம் வரப் போய்ட்டு வந்தோம் எங்களுக்குச் சில தகவல் வேணும் அதைத் தீபா மட்டுமே செஞ்சி இருக்க முடியும் ஆனா இந்த முறை நாம மோதப் போற கும்பல் ரொம்ப பெரிய கும்பல் எனக் கூறினான்.. 

ராஜா இதை எல்லாம் பேசும் பொழுதில் விக்ரம் கண்கள் அருகில் இருக்கும் தீபா மீது தான் இருந்தது உடனே கை நீட்டி நிறுத்தச் சொன்ன விக்ரம் இப்போ நீ என்ன பண்ண போற உனக்கு எத்தனை பேர் துணை வேணும் எனக் கேட்கத் தீபா தான் இங்கே என்ன நடக்கிறது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தால் 

அங்கே குழப்ப காட்டில் மாட்டிக் கொண்டு இருக்கும் தீபாவை பார்த்த விக்ரம் மிஸ்  தீபா தி கோஸ்ட் எனக் கூறினார் 

அங்கே இருக்கும் எல்லோருக்கும் தெரியும் விக்ரம் யாருக்கும் தி கோஸ்ட் என்னும் பட்டம் விரைவில் கொடுக்கமாட்டார் இதுவரை அந்தக் குழுவில் இருக்கும் இருவருக்கு மட்டுமே அந்தப் பட்டம் கிடைத்தது அதில் ஒன்ற யார் என்றே தெரியாத அவரின் மகன் மற்றும் அவரின் நண்பன் என அங்கே பணிபுரியும் அணைவருக்கும் தெரியும் இங்கே நடக்கும்  எல்லாம் அவளுக்குப் புரியவர சில நிமிடங்கள் தேவை பட்டது. 

சில நிமிடம் களித்து விக்ரமை கண்டு நன்றியெனத் தெரிவித்து இப்போ சொல்லு ராஜா அங்க என்ன நடக்குது உனக்குத் தெரிஞ்ச எல்லாமே சொல்லு நீ சொல்லற படி யோசிச்சா இவ்ளோ சரக்கு எங்க இருந்து வந்து இருக்கும் அது உண்மையிலயே சரக்கு தானா தெளிவா தெரியுமா எனக் கேட்க அதைக் கண்டு பிடிக்கத் தான் எனக்கு ஒரு குழுத் தேவையெனக் கூறினான் அதில் யார் எல்லாம் இருக்க வேண்டும் என விக்ரம் கேட்க 

சற்றும் யோசிக்காமல் தீபா பெயர் முதலில் கூறியவன் அடுத்து அடுத்து இங்கே இருக்கும் சிலரை கூற ஆரமித்தான் அதில் எந்த அளவுக்கு அவனின் ஈடுபாடு இருக்கிறது என விக்ரம் தீபா இருவருக்கும் தெரிய வர விக்ரம் தான் மகன்பற்றிப் பெருமையாக நினைத்தாலும் வெளியில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தார்

அடுத்து அடுத்து ராம், ஜெனி , மாதவன் , கவி , விமல் , வித்யா எனக் கூறினான்ன் நாங்க 8 பேர் அதில் நாலு டீம் இருக்கும் நானும் தீபாவும் கடற்கரை பக்கம் போகணும் 

ராம் , ஜெனி ஏர்போர்ட் . 

மாதவன் கவி - இதுவரை கிடைச்ச எல்லா போதை மருந்துபற்றிய எல்லாமே எடுக்கத் தேவை 

விமல் வித்யா ரெண்டு பெரும் அண்ணன் தங்கச்சி இவங்க ரெண்டு பேருக்கும் எங்க கூட வராது தான் வேலை வித்யா தீபா கூடத் தான் இருக்கணும் நானும் விமல் இருப்போம் 

இந்தக் கூட்டணி எதற்க்கு என்றால் சில நேரம் எனக்கும் விமலுக்கும் பிரச்சனையென வந்தால் எப்போதும் அமைதியா இருக்கிற இவங்க எங்களுக்கு உதவனும் 

அது மட்டுமில்லாமல் தீபா வித்யா ரெண்டு பேருக்கும் நாங்க எடுக்குற எல்லா ஆதாரம் அவங்க அதைப் பற்றிய எல்லாத்தையும் எடுக்கணும் இது எல்லாமே இன்னும் ரெண்டு வாரத்துல கண்டுபிடிக்கணும் எனக் கூறினான் ''அதைக் கேட்ட தீபா அவளுக்குப் பல சந்தேகம் இருக்க அதை அவர்கள் முன்னவே கேட்கத் தொடங்கினால் 4 டீம் ல ரெண்டு டீம் தனி தனியா இருக்கும் மிச்சம் இருக்கிற ரெண்டு டீம் ஒண்ணா சேர்ந்து வேலை பார்க்கணும் அது எல்லாம் சரி தான் ஆபத்தான பகுதியில விமல் ராஜா மட்டும் போவாங்க நாங்க சும்மா இருந்து என்ன பண்ண எனக் கேட்க அதற்க்கு ராஜா நீங்களும் தான் வரணும் ஆனா நாம எல்லோரும் ஒரே டீம் எனத் தெரியாத வண்ணம் இருக்க வேண்டும் எனக் கூறினான் 

ராஜா வகுத்த திட்டம் எந்த அளவுக்கு ஆபத்து என யாருக்கும் தெரியவில்லை என்றாலும் விக்ரம் வேறு எந்த முடிவும் எடுக்க விரும்பவில்லை தீபாவை பார்த்த விக்ரம் தீபா இன்னைக்கு தான் உன்னைப் பத்தின எல்லாமே தெரிஞ்சு கிட்டேன் நீ தான் நான் தேடின முதல் பெண் சிங்கம், உன்னை மாதிரி ஒரு பெண் எங்களுக்குக் கிடைச்சதுக்கு எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு எனக் கூறினார் 

அடுத்து ராஜா வும் தீபாவும் அங்க கண்ட சிலவற்றை விக்ரம் முன் வைத்தனர் அங்கே ராஜா வரைந்து வைத்த சில படம் விக்ரம் மேசையின் மேல் வைக்க அதை எல்லாம் பார்த்து விட்டு இவங்க பத்தின எல்லா தகவலும் நமக்குத் தெரிஞ்ச ஏலவருக்கும் fax அனுப்ப சொல்லு அவங்களை பத்தி தெரிஞ்ச உடனே அடுத்து என்ன பண்ணலாமென யோசிங்க என விக்ரம் கூறினார் 

ராஜா தீபா இருவரும் நன்றி சொல்லிவிட்டு இருவரும் வெளியில் வரும் பொழுதில் தீபா மனதில் பல கேள்விகள் இருக்க முதலில் யார் இந்த ராஜா அது தான் அவளின் முதற் கேள்வி மற்றும் அதற்க்கு தான் தெளிவான விளக்கம் தனக்கு வேண்டும் என நினைத்துக் கொண்டால் . இருவரும் அலுவலக அறையில் இருக்கும் பொழுத்தில் அங்கே இருக்கும் மேனேஜர் எல்லோரையும் அழைத்து விக்ரம் கூறிய அனைத்தையும் கூற தொடங்கினார் 

முதலில் தீபாவை அழைத்தார் அடுத்தது ராஜா அடுத்து 

ராம் மாதவன் விமல் 

ஜெனி வித்யா கவியென அழைத்தார் அனைவரும் முன்னே வந்தபின் அவர்களைப் பார்த்து விட்டு விக்ரம் சார் சிலவற்றை உங்களுக்குச் சொல்லச் சொல்லி இருக்காரு நீங்க எல்லோரும் ராஜா தீபா ஓடப் புதிய டீம் உங்களுக்கு என ஒரு பெரிய வேலை இருக்கு இந்த டீம் ஹெட் தீபா தான் அது மட்டும் இல்லமால் உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி இதுவரை நாம விக்ரம் சார் கோஸ்ட் எனப் பட்டம் கொடுத்தது அவரோட மகனுக்கும் மகனோட நண்பருக்கும் தான் ஏன் என்றால் அவர்கள் தான் நம்ம கம்பெனி யோட முக்கிய உளவாளிகள் அவங்களுக்கு அப்பறம் நம்ம தீபா க்கு தான் அந்தப் பட்டம் கொடுத்து இருக்காங்க எனக் கூற எல்லோரும் ஆரவாரம் செய்தனர் ஆனால் தீபா முகத்தில் எந்த ஒரு ஆரவாரம் சிறிதும் இல்லை அவளின் எல்லா சிந்தனையும் அடுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான் இங்கே எல்லாம் நடந்துகொண்டு இருக்க அந்தத் துறை முகத்தில் 

ஒருத்தன் அங்கே இருக்கும் கப்பல்மீது நின்று கொண்டு இருந்தான் அவன்பின் இரு அடியாள் இருந்தனர் , அவர்களிடம் எல்லாமே சரியா தானே போய்ட்டு இருக்கு எதுக்கும் கொஞ்ச ஜாக்கிரதையா இருக்கணும் போலீஸ் மோப்பம் புடிச்சுர போறாங்க எனத் தான் கரடு முரடு ஆனா குரலில் கூறினான். 

அது மட்டும் இல்லை நம்ம மக்களுக்கு எந்தச் சந்தேகம் வரக் கூடாது சரியா இங்க இருக்கிற யாருக்கும் நாம பண்ற எதும் தெரிய வரக் கூடாது எனக் கூறினான்.. 

கர்ணன் யார் ? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் 


© அருள்மொழி வேந்தன்