...

9 views

மாயை பேசுதடா 5
பூபதியின்  வாய் "பெயிண்ட்... பெயிண்ட்... " என்று டைப் செய்து கொண்டே இருக்கிறது.

"ஆம். நாங்கள் நால்வரும் இந்த வீட்டில் நீங்கள் பார்த்தும் சூப்பர் என்று கூறிய பெயிண்டில் வரையப்பட்ட ஓவியங்கள் தான். பயப்படாதீர்கள், உங்கள் குழந்தையிடம்
விளையாடிக் கொண்டு இருந்தோம்.  உருவங்களாக இருந்த நாங்கள் உங்கள் கண் முன்னே இப்படி பெயிண்டில் வரையப்பட்ட ஓவியங்கள் போல் தெரிவதற்கு காரணமே உங்கள் குழந்தை தான். " என்று பெயிண்டில் இருக்கும் பெண்மணி கூறினாள்.

"நீ சொல்றது ஒன்னுமே புரியல விவரமா சொல்லுமா.. " என்று கூறினாள் ஜானு.

" இந்த வீட்டில் இதற்கு முன் ஒரு மேஜிக் மேன் இருந்தான். அவன் தனியாக தான் இருப்பான். அவனுக்கு வேறு யாருமே இல்லை. வீட்டில் நுழைந்தாலே தனிமையை உணர்வான். ராத்திரி மட்டுமே வருவான். அதனால் தான் அவன்  மேஜிக் பென்சில் வைத்து எங்களை உருவாக்கினான்.
அவன் எங்களை வரையும் போதே நாங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே வரைந்தான்.  நாங்களும் அவன் எப்படி நினைத்து வரைந்தானோ அதே தன்மையோடு உயிர் பெற்று விட்டோம். அவன் பகலில் வீட்டில் இருப்பதில்லை, இரவில் மட்டுமே வீட்டில் இருப்பான். அதனால் தான் நாங்கள் இரவில் வந்து செல்கிறோம்..."  என்று கூறினாள் பெயிண்டிங் பெண்மணி.

" சரிங்க..., என்ன தன்மை...என்ன சொல்றீங்க.....புரியவில்லை... " என்று பூபதி கேட்டான்.

உடனே ஜானு, " அதாங்க, மேஜிக் மேன்
இவர்கள் இப்படி தான் இருக்கனும்னு நினைத்து வரைந்திருக்கார். அதை தான் அவங்களோட தன்மையென்று சொல்றாங்க. நீங்கள் சொல்லுங்கள் உங்கள் தன்மை என்னனு... " என்று பெயிண்டிங் பெண்மணியிடம் கேட்டாள்.

"நானும் அவங்க தன்மை தானே கேட்டேன். அவளும் அதான் கேட்டா... ஆனால், நான் கேட்டதையே  கேட்டுவிட்டு என் கேள்விக்கு விளக்கம் சொல்றாலே... " என புலம்பினான்  பூபதி.

பெயிண்டிங் பெண்மணி, " ஆம்,  என் தன்மை கிச்சனில் அனைத்து வேலைகளையும் பாா்த்து கொள்வது. நான் தான் உங்களுக்கு சமைத்து விட்டு சென்றேன். மூவரில் ஒருவன் மிகவும் குறும்பு செய்வான்.  இவன் கையும், காலும் சும்மாவே இருக்காது. எதையும் எடுத்தால் அதை உடைத்து விடுவான். ஒருவன்  குட்டி மேஜிக் மேன். இந்த வீட்டில் இருந்த மேஜிக் மேன் போல் இவனும் மேஜிக் செய்வான். மற்றொருவன் தூங்கிக் கொண்டே இருப்பான் என்றாவது ஒரு நாள் திடீரென எழுவான்.  அப்படி எழுந்தால் வீடே  புதியதாக மாறிவிடும் என்று கூறினாள்.

" நேற்று கருப்பு உருவங்கள் போல் தான் தெரிந்தீர்கள். இப்போது எங்களுக்கு  பெயிண்டில் இருப்பது போல் தெரிகிறீர்கள்.  " என்று ஜானு கேட்டாள்.

"இங்கு இருந்த மேஜிக் மேன் ஒரு மேஜிக் ஸ்டிக் வைத்திருப்பான். அவன் ராத்திரி வந்ததும் அந்த ஸ்டிக்கை எங்கள் பெயிண்ட் முன் காட்டினால் தான்  நாங்கள் பெயிண்டில் இருப்பது போலே  தெரிவோம். இல்லை என்றால் கருப்பு உருவம் போல் தெரிவோம். ஏனெனில், எங்களை யாரும் கண்டுபிடிக்க கூடாதென்று இப்படி செய்தான். இப்படி கருப்பு உருவம் போலே தெரிந்தால் பார்ப்பவர்கள் பேய் என்று தான் நினைப்பார்கள். இவை அனைத்தும் மேஜிக் ஸ்டிக்கின்  இரகசியம்." என்றாள் பெயிண்டிங் பெண்மணி.

" நீங்கள் எங்கள் கண்ணுக்கு தெரியாமல் இருந்தது தான் பிரச்சனை. தெரிந்து இருந்தால் இவ்வளவு குழப்பம் வராது. அப்படியே தெரிந்தால் தான் என்ன?... " என்று கேட்டான் பூபதி.

"அப்படி இல்லை, இது அவரின் மேஜிக் இரகசியம். இது தெரிந்தால் ஒரு சிலர் தங்களின் சுயநலத்திற்காக தவறாக பயன்படுத்தி கொள்வார்கள். " என்றது பெயிண்டிங் பெண்மணி.

"அதெல்லாம் சரி, இப்போது மேஜிக் ஸ்டிக் உங்களுக்கு எப்படி கிடைத்தது?..
நேற்று வரையில் மேஜிக் ஸ்டிக் இல்லாமல் இருந்தது. இப்போ மட்டும் எப்படி?.. " என்றான் பூபதி.

"உங்கள் குழந்தை கையில் வைத்து விளையாடியது தான் மேஜிக் ஸ்டிக்.  இதை தான் பக்கத்து வீட்டு குழந்தைகள் விளையாட தூக்கி சென்றார்கள். நீங்கள் உள்ளே பேசிக் கொண்டிருந்த போது தான் உங்கள் குழந்தை இந்த ஸ்டிக் வைத்து அங்குமிங்கும்  சுற்றி கொண்டு இருந்தது. அந்த ஸ்டிக்கை எங்கள் பெயிண்டிங் முன்பு காட்டி விளையாடியதால் நாங்கள் பெயிண்டில் இருப்பது போல் உயிர் பெற்றோம். "

"அதெல்லாம் சரி, இப்போது மேஜிக் மேன் தான் இல்லையே. நாங்கள் இந்த வீட்டிற்கு வந்து விட்டோம். உங்கள் தன்மையை எங்களிடம் காட்டினால்..... "
என்று பூபதி மெதுவாக இழுத்தான்.

"கவலை படாதீங்க, நாங்கள் மறைந்து விடுவோம்.   எங்களை உருவாக்கிய மேஜிக் மேனும் இல்லை.     உங்களிடம் எங்களின் தன்மையையும்  காட்டி விட்டோம். உங்கள் குழந்தை மூலம் தான் எங்களுக்கு முழு பெயிண்டிங் உருவம் கிடைத்தது.  அதற்காக, நாங்கள் உங்களுக்கு செய்யும் உதவியாக நினைத்து எங்களின் உருவத்தை மறைத்துக் கொள்கிறோம். " என்று பெயிண்டிங் பெண்மணி கூறியது.

"அப்போ, சீக்கிரம் மறைந்து போயிடுங்க." என்று  சந்தோஷமாக பூபதி கூறினான்.

"அதற்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்." என்றது  பெயிண்டிங் பெண்மணி

"திடீரென குட்டி மேஜிக் மேன் மேஜிக் ரப்பருடனிருக்கும் மேஜிக் பென்சில்  ஒன்றை அவர்கள் கையில் கொடுத்து,
இதிலிருக்கும் மேஜிக் ரப்பரை வைத்து எங்கள் ஓவியங்களை அழித்து விட்டால் நாங்கள் இனி வர மாட்டோம். எங்களால் உங்களுக்கு தொந்தரவே வராது " என்றான்.

உடனே ஜானு பூபதியின்  கையை  பிடித்து கொண்டு தனியாக சென்று
"நமக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட கூடாது. மேஜிக் பென்சில் வைத்து நமக்கு வேண்டியதை வரைந்தால் அப்படியே கிடைக்கும். " என்றாள்.

"அதற்கு அவன் அதெல்லாம் வேண்டாம். நமக்கு அவங்க  மறைந்தால்  போதும். " என்றான்.

  "நான் சொல்ற மாதிரி ட்ரை பண்ணுங்க. இப்போதைக்கு நீங்க நமக்கு ஒரு ஷோபா வரைங்க." என்று அவனை சேரில் உட்கார சொல்லி வரையச் சொன்னாள் ஜானு.

"சொன்னால் கேட்க மாட்டாய்" என்று வரைந்தான்.

"டொம்..... " என்று சத்தம்.

அவன் அமர்ந்த சேர் மறைந்து விட்டதால் கீழே விழுந்தான். பெயிண்டிங் ஓவியங்கள் சிரித்தனர்.

"இப்படி தவறான முறையில் பயன்படுத்துவார்கள் என்று தான்  எங்கள் உண்மையான உருவங்களை மறைத்து கருப்பு உருவங்கள் போலே தெரிந்தோம். இதற்கு தான் மேஜிக்கை இரகசியமாக வைத்துக் கொள்வது. "  என்றது பெயிண்டிங் ஓவியங்கள்

"நாங்கள் உங்களுக்கு கொடுத்த பென்சில்  ஓவியங்களை அழிப்பதற்கு தானே தவிர உருவாக்க அல்ல. நீங்கள் உட்கார ஷோபா வரைந்ததால்  அதன் தன்மை கொண்ட எந்த பொருள் வீட்டில் இருந்தாலும் அழிந்து விடும். அதான் உட்காரும் தன்மை கொண்ட சேர் மறைந்து விட்டது." என்றார்கள்.

"இதுக்கு தான் ஜானு எதுவும் வேண்டாம் அவங்க மறைந்தால் போதும்னு சொன்னேன் நீ கேட்டியா...."என்றான் பூபதி.

இவள் வாயை மூட எதாவது மேஜிக் இருக்கா என்று கேட்க வேண்டும். சரி நாம் பெயிண்டில்  இருக்கும் ஓவியங்களை அழிப்போம் என்று அழிக்க தொடங்கினான்.

உடனே ஓவியங்கள், " நன்றி, நாங்கள் செல்கிறோம்.  இருவரும் எங்களை பார்த்ததை  சொன்னால் பயப்படுவார்கள் என்று ஒருவருக்கொருவர் மறைத்து கொண்டு  உங்கள் அன்பை வெளிப்படுத்தினீர்கள். நீங்கள் இருவரும் நல்ல சுவாரஸ்யமான தம்பதிகள் தான்" என்று  குழந்தைக்கு முத்தம் கொடுத்து விட்டு மறையத் தொடங்கினார்கள்.

ஓவியங்களை அழிக்க அழிக்க இவர்கள் நால்வரும் மறைந்து அதிலிருந்து புதிதாக இரண்டு வயதான கணவன் மனைவி ஓவியங்கள் தெரிந்தன...

" அய்யய்யோ, இந்த பெயிண்ட் நம்மை விடாது போல. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய மாதிரி புதுசு புதுசா கிளம்புதே... "என்று  மீண்டும் புலம்பினார்கள்.....

முற்றும்.. 🙏

       ✍மாயையின் சேட்டைகள்
                     விரைவில்....  ✍


© Ramyakathiravan