...

3 views

மாயை பேசுதடா 3

அவன் மனைவி ஜானகி, " என்னங்க, என்ன அப்படியே நிற்கிறீங்க... உங்களுக்கே தெரியாமல் சஸ்பென்ஸா வந்தா எப்படி சந்தோஷப்படுவீங்க
என்று பார்க்கலாமேன்னு சொல்லாமலே வந்தோம். நீங்க என்னன்னா அப்படியே நிற்கிறீங்க
. ".... என்று கேள்வி கேட்டு துளைத்தால்.

இங்கே வந்ததிலிருந்து சஸ்பென்ஸ் தான் பார்க்கிறேன். இதுல, இவள் இன்னும் சஸ்பென்ஸ் கொடுக்கிறாளா.... இன்னும் விட்டால் கேள்வி கேட்டு கொன்று விடுவாள் என்று நினைத்து கொண்டே " வா ஜானு, திடீரென பாா்த்தேனா அதான் ஒன்னும் புரியல அப்படியே நின்று விட்டேன். " என்று கூறிக்கொண்டு குழந்தையை தூக்கிக் கொண்டான்.

ஜானு, வீட்டை ஆச்சரியமாக பாா்த்தால். "வீடுன்னா இப்படி தாங்க இருக்கனும். எவ்வளவு சுத்தமா வச்சிருக்கீங்க. ஹாலில் இருக்கும் வால் பெயிண்டிங் சூப்பர். கிச்சனை பாா்த்தவள் அப்படியே புதுசு போல இருக்கு.... நான் பேசிட்டே இருக்கேன் நீங்க ஏன் வந்ததிலிருந்து அப்படியே நிற்கிறீங்க சரியா பேசமாட்டேன்றீங்க" என்று சற்றே கோபத்துடன் கேட்டாள்.

அதற்கு அவன், ஒன்றும் இல்லை ஜானு... வீடு எப்படி இருக்கு?.. என்று கேட்டான்.

சரியாப் போச்சு, இவ்வளவு நேரம் வீட்டை பற்றி தான் சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னமோ முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது மாதிரி திறுதிறுன்னு முழிக்கிறீங்க.. என்று கேலியாக கேட்டாள் ஜானு.

"இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் ஏதாவது உலறி விடுவோம். அவளுக்கு தெரிந்தால் பயப்படுவாள். தனியாக வீட்டில் இருக்கமாட்டாள்..." என்று நினைத்து கொண்டு அவளிடம் நடந்தவைகளை மறைத்து விட்டு வேலைக்குச் சென்றான்.

ராத்திரி வந்து விட்டது...

பூபதியும், ஜானுவும் குழந்தையுடன் படுக்க சென்று விட்டார்கள். ஜானு தூங்கி விட்டாள். பூபதி மட்டும் பெட்ரூம் கதவை மெதுவாக திறந்து பாா்த்தான். யாரோ இரண்டு சிறிய உருவங்கள்
இங்குமங்கும் ஓடுவதை பாா்த்தான்.
அதை பார்த்தவுடன் பயந்து "அய்யோ போச்சு வந்துடுச்சுக...." என்று கதவை தாழிட்டான்.

சிறிது நேரம் கழித்து பூபதியின் குழந்தை தூக்கத்தில் எழுந்து அழத் தொடங்கியது. ஜானு, குழந்தையை தட்டி கொடுத்து தூங்க வைத்து விட்டு தண்ணீர் குடிக்க பெட்ரூம் கதவை திறந்தாள். கதவை திறந்தவள் " அய்யய்யோ.... ஏதோ இரண்டு உருவங்கள் ஓடுது. அய்யோ, கிச்சனில் ஏதோ ஒரு உருவம் சமையல் பண்ணுது... இங்கு ஏதோ தூங்குது....எல்லா பொருளும் இப்படி கலைந்து கிடக்கிறது...." என்று பயந்து அலறி அடித்து கதவை சாற்றி விட்டாள். பேச்சு வரவில்லை அழுகை மட்டுமே வந்தது. கதவை சாற்றியவள் அதே இடத்தில் அமைதியாக உட்கார்ந்து விட்டாள்.

"இந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருக்கிறது. நமக்கு முன்னாள் இந்த வீட்டில் யார் இருந்திருப்பார்கள்.
அவங்க ஏன் வீட்டை காலி செய்தாா்கள்.
இங்கே இப்படி நடப்பது நம்ம கணவர்க்கு தெரியுமா என்று தெரியவில்லையே. இப்போதைக்கு அவரிடம் சொல்ல வேண்டாம். நாளையும் இப்படி நடக்குதா என்று பார்த்து விட்டு சொல்லலாம். " என்று பலவாறாக யோசித்தாள் ஜானு.

ஆறு மணி போல் மெதுவாக கதவை திறந்தாள். " பொருளெல்லாம் இப்படி சிதறிக் கிடக்குதே. வீட்டை இப்படி அலங்கோலமா செஞ்சிடுச்சே. ஆனால் கிச்சன் மட்டும் சுத்தமா இருக்கு. சாப்பாடு செஞ்சிருக்கே... " என்ன செய்வது என்று தனக்குள்ளேயே புலம்பினாள்.

" இன்று வீடு எப்படி இருக்குமோ தெரியவில்லை. நம் மனைவி எழுந்தால் கேள்வி மேல் கேள்வி கேட்பாளே" என்று படுக்கையிலிருந்து திரும்பி மனைவியை பாா்த்தான் பூபதி.

அவள் காணவில்லை..

"அச்சச்சோ போச்சு, இவள் எங்கே போனால்... இந்நேரம் வீட்டின் அலங்கோலங்களை பாா்த்திருப்பாளே... பெட்ரூமிலிருந்து வெளியே சென்றால் கேள்வி கேட்டே என்னை கொன்று விடுவாள். இவள் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு இங்கே இருக்கும் பேய்களை சமாளிக்கலாம். " என்று பயந்து பயந்து வெளியே சென்றான்.

வெளியே வந்தவன் ஜானு வீட்டை சுத்தப்படுத்துவதை பாா்த்தான்

அவள், இவனை பாா்த்து ஒன்றும் நடக்காதது போல் " பிரஸ் பண்ணுங்க காபி தரேன் " என்று கூறிவிட்டு வீட்டை சுத்தம் செய்கிறாள்.

கிச்சனிற்குள் சென்றவன் , "சீக்கிரமே சமைத்து விட்டாயா.. " என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்டான்.

அதற்கு அவள் சற்று வேகமாக "ஆம், சீக்கிரமாவே எழுந்து செய்தேன். " என்று கூறினாள்.

இவனுக்கு பயம் அதிகமாகியது.

சரி, ஏன் பொருள்கள் இப்படி இருக்கிறது?.. என்று ஜானுவிடம் கேட்டான்.

அதற்கு, அவள் வீட்டில் பூனை, எலி இருக்கும் என்று நினைக்கிறேன். அது தான் வீட்டை இப்படி செய்து விட்டது என்றாள் ஜானு.

இவன் மீண்டும் வாயை திறந்தான். அதற்கு அவள், "சீக்கிரமாக வேலைக்கு போங்க, சும்மா, ஏதாவது கேள்வி கேட்டுட்டு இருக்காதீங்க.." என்று கூறினாள்.

"நான், இவள் கேள்வி கேட்டா என்ன சொல்றதுன்னு யோசிச்சா இவள் நமக்கு பதில் சொல்றா. அவள் தான் சமைச்சேனு சொல்றா. நேற்று என்னன்னா, வாயை திறந்து பேசுங்க அப்படியே நிற்கிறீங்க என்று கேட்டாள். இப்ப ஏன் சும்மா கேள்வி கேட்கிறீங்கன்னு சொல்றா. ஒரே நாள் ராத்திரி இப்படி மாறிட்டாள். இவள் தான் சமைச்சேனு சொல்றா ஒரு வேளை பேய் இவள் உடம்புக்குள் போயிருக்குமா. காஞ்சனா படத்தில் வர மாதிரி ஒவ்வொரு பேயாக ரிலீஸ் ஆகும் போலயே?... " என்று குழம்ப ஆரம்பித்தான்

பூபதி வேலைக்குச் சென்றதும்.
அவனை போலவே இவளும் கோவிலுக்கு சென்று விபூதி வாங்கி வந்தாள். " இன்னைக்கு ராத்திரி வரட்டும் ... " என்று தைரியமாக வீட்டிற்கு சென்றாள்.

அலுவலகத்தில் இருக்கும் பூபதி, " ஜானு என்ன பண்றாலோ தெரியல. சரி, இப்போது அவள் எப்படி பேசுறானு பார்ப்போம் " என்று தொலைபேசி மூலம் அழைத்தான்.

ஜானு, " என்ன செய்ர சாப்டாச்சா?.. " என்று கேட்டான்.

அதற்கு அவள், " இல்லை, இப்போ தான் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று வருகிறேன் " என்றாள்.

பூபதி ஆச்சரியமாக, "கோவிலுக்கா?.. " என்றான்.

"ஆம், இதை ஏன் இவ்வளவு அதிசயமாக கேட்கிறீங்க... கோவிலுக்கு தானே போனேன். " என்றாள்.

பூபதி, " இல்லை, சும்மா தான் கேட்டேன் " என்றான்.

"பேய் இவள் உடம்பில் இருந்தால் கோவிலுக்கு போகமாட்டாலே. இப்படி இருக்கலாமே, ராத்திரி உருவம் தெரிஞ்ச மாதிரி ராத்திரி மட்டும் இவள் உடம்பில் இருக்குமோ.. என்ன நடக்குதுன்னே புரியல.... " என்று குழம்பி கொண்டான் பூபதி.

ஜானு வீட்டிற்கு வரும் வழியில் பக்கத்து போர்சன் குட் மார்னிங் மனைவியை பார்த்தாள்.

"நீங்கள் தான் பக்கத்து வீட்டிற்கு குடி வந்தவங்களா?... என்று சிரித்து கொண்டே குட் மார்னிங் மனைவி கேட்டாள். "ஆமாங்க..", என்றாள் ஜானு. ஒருவருக்கொருவர் பேசி பழகிக் கொண்டனர்.

அப்போது தான் ஜானு குட் மார்னிங் மனைவியிடம், " இதற்கு முன் இங்கு யார் இருந்தார்கள், எப்போது வீட்டை காலி செய்தாா்கள்..." என வீட்டை பற்றி கேட்க தொடங்கினாள்.

மாயை தொடரும் ✍✍




















© Ramyakathiravan