...

11 views

காத்துக்கருப்பு - 2
அந்த அகோரக் குரலிலிருந்த முரட்டுத்தனம் சீதாவை நிலைகுலையச் செய்தது.....
அவளால் சற்றும் நகரக் கூட முடியவில்லை .... தன் கணவரை எழுப்பலாம் என்று எண்ணியவாறு தன் கைகள் இரண்டையும் அவரை நோக்கி நீட்டிட முயன்றாள்.... ஆனால், யாரோ தன் கை கால்களை இறுக்கி பிடித்து தடுப்பதை போல அவள் உணர்ந்தாள்.....
அப்போது அந்த குரல் அலறிக்கொண்டே ,"அவன ஏன் எழுப்ப நினைக்கிற.... அவன் வரமாட்டான் சீதா.... நீ வா.... எனக்கு நீ தான் வேணும், வா .... வா... " என்று சொன்னது

ஏதோ தீய சக்தி சூழ்ந்துள்ளதென புரிந்து கொண்டாள்.... இரண்டு கண்களையும் இறுக மூடிக்கொண்டு இறைவா இந்த இக்கட்டான சூழ்நிலையில் நீ மட்டுமே என் மொத்த ஆறுதலும் நம்பிக்கையும் என்று இறையடியை துதிக்க தொடங்கினாள்.....
தன் உதடுகளை கூட அசைக்க முடியாத நிலையில் மனதளவில் இறை வேதங்களை தொடர்ந்து சொன்னாள்.....
தனக்கு என்ன நடக்கிறது என்ற சந்தேகத்திலேயே தன்னிலை மறக்க ஆரம்பித்து மயக்கமானாள்....

அடர் கருமை சூழ்ந்த காரிருள் மெல்ல மெல்ல மழுங்கத் தொடங்கியது..... அசதியில் தலை சாய்த்திருந்த கதிரவன் மென்மையாய் கண் விழிக்கத் தொடங்கினான்.... விடியலின் வாசம் வீசும் முன்பே தெய்வீக மணம் கமழும் சாம்பிராணியின் வாசம் வீடெங்கம் வலம் வரத் தொடங்கிவிடும் வழக்கமாக.... ஆனால் இதுவரை இல்லாத ஓர் மாற்றம் நிகழ்ந்தது அன்று....
ஆம், ஊரே விழித்து இயல்பில் கரைந்த பிறகும் சீதா எழுந்திரிக்கவேயில்லை.....
கணவரும் பிள்ளைகளும் சீதா உறக்கத்திலிருந்து எழாமல் அசைவின்றி போர்வையில் படுத்துக் கிடப்பதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்....
பிள்ளைகள் , மெல்ல அவள் அருகில் சென்று போர்வையை விலக்க, அதிர்ச்சியில் " அம்மா......" என்று அலறினார்கள்........ (தொடரும்)


© கவிநேசகி