...

8 views

கட்டக்கால் யானை
“மணிக்கு கிருமி காலு முழுசும் பரவி டாக்டருங்க கால எடுத்துட்டாங்க “.
“இந்த கோவிலுக்கு அழகே இந்த யானையும் அந்த மரமும் தான்யா! அதோட நிலைமையை பாத்தீங்களா!”
“மருந்து வெச்சு கொன்னு போட வேண்டியது தான்! அது தான் நாம அதுக்கு காட்டுற கருணை “
“நாளைக்கு வெள்ளிக்கிழமையா இருக்குது. ரெண்டு நாள் கழிச்சு முடிச்சிருவோம்”.
இரண்டு நாள் கழித்து,
“ யோவ் பூசாரி என்னையா கோவில் மரத்த வெட்டிட்டிங்க? “.
“ஆமாங்க ஐயா! நம்ம மணிக்கு காலு செய்ய மரத்த வெட்ட சொல்லிப்புட்டேன்”.
நான் சின்ன புள்ளையா இருந்தப்ப எனக்கு தும்பிக்கைய புடிச்சு நடக்க சொல்லிக் குடுத்த யானைங்க!,அதுக்கு காலு வெச்சு நடக்க சொல்லி தர ப்ளூ கிராஸ் ல இருந்து ஆளுங்க வராங்க.மரம் சாமியா கோவிலுக்கு உள்ள இருக்கிறத விட காலா மணிக்கிட்ட இருக்கிறத தான் சாமியே விரும்பும்!.

for our words to dissolve your hearts follow us @karayum_varigal on Instagram.

#elephant #love #love&love #inspiration #quotes #Writcoapp #tamilkavithaigal