குழப்பத்துக்கு பொறந்தது?
ஓயாது பெய்து கொண்டிருந்த மழை,
பெரும்பாலான வாகன ஓட்டிகளை ஓரங்கட்டியிருந்தது.
கனரக வாகனங்கள் சில விடாத மழையிலும் , மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன.
கண்ணாடி கதவை இழுத்து மூடிக்கொண்டு கார் ஓட்டுநர்கள் மட்டும், தண்ணீர் பாயும் ரோட்டில் சீறிப்பாய்ந்து சென்றபடி இருந்தனர்.
இருசக்கர வாகனமொன்று டீ கடை முன்னால் பிரேக் அடித்து நின்றது.
அதை ஸ்டான்டிட்டு நிறுத்திய படி ,
இறங்கி வந்த
நபருக்கு 35 லிருந்து 40க்குள் இருக்கலாம்.
மழைக்கு டீ கடையில் ஒதுங்கிய அனைவரும் அந்த நபரை பார்த்தார்கள் என்றாலும் கண்டுகொள்ளவில்லை.
நேராக உள்ளே சென்று அமர்ந்த அந்த நபர் டீ மாஸ்டரிடம் ஒரு சிகரெட் பாக்கெட்டும் டீயும் கேட்டார்.
அவரை ஏற இறங்க பார்த்த அந்த டீ கடை முதலாளி இங்கு சிகரெட் விற்கிறதில்லை டீ மட்டும் குடிக்கிறீங்களா ?என்று கேட்டார்.
என்னது? என கேட்ட அந்த நபர் ,
சிகரெட் இல்லாத டீ கடையா? என அலுத்துக் கொண்டே ,
தன்னிடமிருந்த ஒரே ஒரு சிகரெட்டை வாயில் வைத்து, ஃபேன்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து லைட்டரை எடுத்து பற்றவைக்க எத்தனிக்கும் போது,
டீ மாஸ்டர் குறுக்கிட்டு
சார், இங்க புகை பிடிக்க கூடாது என்றார்.
அந்த நபரோ கோபமாக , ஒன்னே ஒன்னுதான் சார்
என காட்டமாக கேட்டார்.
ஆனால், அந்த டீ கடை முதலாளியோ, ஒன்னு கூட அனுமதிக்க முடியாது என்றார் திட்டவட்டமாக.
இதையெல்லாம் கவனித்த
கூட்டத்திலிருந்து ஒருவர் -
சார், தப்பில்ல, வெளிய சிகரெட் பிடிக்கலாம் .வாங்க, என்றழைத்தார்.
சிகரெட் கிறுக்கனும் நிம்மதியா ,
பற்றவைத்து பஞ்சு வரை புகையை அனுபவித்து இழுக்க ஆரம்பித்தான்.
இதுல வர்ற இந்த சுகம் வேற எதிலுமே கிடைக்காது. வேற லெவலு.
ஆஹா,
ஓஹா .
'இந்த சுகத்தை
இன்னும் சுகமாக்குகிற சுகம் ஒன்னு குறையுதே என யோசித்தபடி , தலையை தூக்கி டீ மாஸ்டரை பார்த்தான்.
இப்போது தான் அவர் முகம் அந்த சிகரெட் கிறுக்கனுக்கு முழுதாக தெரிந்தது.
அய்யோ! அப்பாவா?
என , சிகரெட்டை உதறிவிட்டு, இரண்டு கையாலும் வாயை துடைத்தபடி,
பயத்தோடே அப்பா என்றான்.
அப்பா!
மிரட்டும் தொனியில் சொன்னார்.
என்னடா?
காலேஜ்கு நேரமாகலயா?
சீக்கிரம் கிளம்பி வா,
கனா கண்டுனு யிருக்காத
கால ஒடச்சிடுவேன்.
......x......x......x......x.........x......x......x......x...
ஒருபுறம்,
புகை பிடிக்காதேனு சொல்றாங்க.
மறுபுறம்,
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்காதேனும்,
சொல்றாங்க.
முடிவாக சொல்கிறேன்.
கமெண்ட் பண்ணுங்க.
லைக் பண்ணுங்க.
ஷேர் பண்ணுங்க.
© s lucas