உன்னோடு நான் இருப்பேன்
அத்தியாயம் -3
ப்ரியாவின் வீட்டில் ஆதி
காரில் இருந்து இறங்கிய ஆதி ப்ரியா என்று அழைத்தபடி அவள் அருகில் செல்ல... உடனே திரும்பி பார்த்தவள் சார் என்றாள்...
இங்க என்ன பண்றீங்க? இங்கயும் எதாச்சு பில்டிங் விழபோகுதா நானும் தூக்கி பிடிக்க வரவா? என்று நக்கலாக கேட்க..
ஐயோ சார் நீங்க வேற நேரம் காலம் தெரியாம... நானே ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகாம என்ன பண்றதுனு முழிச்சுட்டு இருக்க என்று நொந்து கொண்டே சொல்ல...
எங்க நான் பாக்குற என்று ஸ்கூட்டியை பரிசோதிக்க அதுவோ நான் நகரமாட்டேன் என்றது...
உங்க ஸ்கூட்டியும் உங்கள மாதிரியே சொன்ன பேச்ச கேக்க மாட்டிங்குதே என்று ஆதி நக்கலாக கூற...
சார் என் கோல்டிய குறை சொல்லாதீங்க... அவ ரொம்ப சமத்து...
கோல்டீயா? அது யாரு? என்றான் புரியாமல்...
அவனை செல்லமாக முறைத்தவள் வேற யாரு என் ஸ்கூட்டிதான் என்று அதை புன்னகையோடு தடவி கொடுத்தாள்.
அது சரி என்று முணங்கியவன்... ப்ரியா உங்க கோல்டிய மெகானிக் வந்துதான் சரி பண்ண முடியும்... இப்ப டைம் ஆச்சு வாங்க நான் டாராப் பண்ற...
இல்ல சார் பரவால்ல உங்களுக்கு எதுக்கு சிரமம்... வீடு இங்க பக்கத்துலதான் இருக்கு நான் ஸ்கூட்டிய தள்ளிட்டே போற ...
இப்ப டைம் என்னனு தெரியுமா? it's to late... இதுல சிரமம் என்ன? போற வழியில ட்ராப் பண்ற வாங்க
அவன் அழைக்க இவள் மறுத்து கொண்டே இருந்தாள்
இவர்கள் பேசுவதை காரில் இருந்து பார்த்த விஜயா இறங்கி ஆதியின் அருகில் வந்து.... என்னாச்சு ஆதி? என்று கேட்க
ஸ்கூட்டி ரிப்பேர் ஆயிருச்சும்மா நான் ட்ராப் பண்றனு சொன்னா கேக்க மாட்டின்றாங்க என்றதும்...
ப்ரியாவின் கரம் பற்றிய விஜயா... ப்ரியா வயசு பொண்ணு இப்படி நைட் நேரத்துல தனியா இருக்க கூடாதும்மா... வா என்று அவர் பாட்டிற்க்கு அவளை இழுத்து சென்று காரில் அமர வைத்தார்...
ஆதிக்கு அவரது நடவடிக்கை ஆச்சரியத்தையே தந்தது... என்றும் பார்க்காத ஒருவளின் மீது இப்படி உரிமை காட்டுகிறாரே என்று நினைத்தவன் அமைதியாக வந்து காரை நகர்த்தினான்...
ப்ரியாவும் மறுக்க முடியாமல் வந்து அமர்ந்து கொண்டாளே தவிர அவளுக்கும் ஒரு மாதிரியாகதான் இருந்தது இதில் விஜயா வேறு அவளை குறுகுறுவென பார்த்து கொண்டே இருந்தார்..
உங்க வீடு எங்க ப்ரியா? விஜயா கேட்க...
மைலாப்பூர் மேம் என்றாள் சிறு புன்னகையோடு...
வீட்ல யார் யார் இருக்காங்க?
அப்பா அம்மா நான் மட்டும்தான் மேம்
என்ன இது... இந்த மேம்மெல்லாம் வேணா ஒழுங்கா ஆன்டினு கூப்டு விஜயா உரிமையாக சொல்ல ப்ரியா தயக்கமாக முன்னே அமர்ந்திருக்கும் ஆதியை பார்த்தாள்.
அதை கண்ட விஜயா என்ன நீ... என்னை ஆன்டினு கூப்ட சொன்னா உன் பாஸ எதுக்கு பாக்குற? என்றவர் ஆதியை பார்த்து என்னடா எல்லாரையும் நல்லாவே மிரட்டி வெச்சுருக்க போல என்று பொய்யாக அதட்ட...
லேசாக புன்னகைத்தவன் ப்ரியாவை பார்த்தபடி அப்படியா ப்ரியா... நான் உங்கள மிரட்டி வெச்சுருக்கனா? என்று கேட்க...
ஐயோ சார் நான் எப்ப அப்படி சொன்ன என்றவள் விஜயாவை பார்த்து.... மேம் சார் ரொம்ப காம் அவர் கோவபட்டெல்லாம் நான் பாத்ததே கிடையாது என்று கூற
மறுபடியும் மேமா? உதை வாங்குவ ப்ரியா விஜயா செல்லமாக அதட்ட... நாக்கை கடித்து கொண்டவள்...
இயல்பான ப்ரியாவாக மாறி இருந்தாள். விஜயாவின் அக்கரை பேச்சும் இயல்பான பண்பும் அவளுக்கு பிடித்து போக... விஜயாவை சீண்ட ஆரம்பித்தாள்.
அது எப்படி மேம்... இவ்வளவு யங்கா இருக்கீங்க உங்கள ஆன்டினு சொன்னா யாராச்சு நம்புவாங்களா? நீங்க கார்ல இருந்து இறங்கூம்போது கூட சாரோட சிஸ்டர்னு நினச்ச... அவர் அம்மானு சொன்னதும் நான் ஷாக் ஆகிட்ட தெரியுமா?என்று ஒரு பெரிய ஐஸை தூக்கி விஜயாவின் தலைமேல் வைத்தாள் ப்ரியா...
அதை கேட்ட ஆதி வாய்விட்டு சத்தமாக சிரித்தே விட்டான்...
விஜயாவுக்குதான் அவ்வளவு ஆச்சரியம்... இவன் இப்படி சிரித்தே எத்தனை நாட்கள் இல்லை வருடங்கள் ஆகி இருக்கும்... தன் மகனின் புன்னகையை கண்கவர் இமைக்கவும் மறந்தே போனார்.
ஆதி சிரித்தபடியே விஜயாவை பார்த்து பாத்திங்களாம்மா ஐஸ... இவங்க கூட இரெண்டு நிமிஷம் பேசுனா போதும் உங்களுக்கு ஐஸை வெச்சே சலி புடிக்க வெச்சுருவாங்க என்று சொல்ல...
விஜயாவும் சிரித்தபடி ம்... அது என்னவோ உண்மைதான் என்றார்...
சார் இங்கயே நிறுத்தீருங்க நான் நடந்தே போய்க்கிற ப்ரியா சொல்ல... ஆதியும் காரை நிறுத்தினான்... இருவருக்கும் நன்றியை கூறி விட்டு ப்ரியா இறங்க போக... விஜயாவுக்கு ஏனோ அவள் குடும்பத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்ற... இறங்க போனவளின் கரத்தை பற்றியவர்
ஏன் ப்ரியா எங்களல்லாம் உன் வீட்டுக்கு கூப்ட மாட்டியா ? என்றார்.
அவள் பதறியபடி அப்படியெல்லாம் இல்லைங்க என்றவள் ஆதியை பார்த்து இங்கிருந்து மூனாவது ஸ்ட்ரீட் முதல் வீடு என்று முகவரியை சொல்லி விட்டு அமர்ந்து கொண்டாள்... ஆதியும் ப்ரியாவின் வீட்டிற்கு திசை திருப்பினான்.
ப்ரியாவின் வீடும் வந்து சேர மோகன் ஜானகி இருவரும் மகளுக்காக வாசலிலே காத்திருந்தனர்... ப்ரியா காரை விட்டு இறங்கி வாங்க மேடம் வாங்க சார் என்று அழைக்க... இருவரும் காரில் இருந்து இறங்கினார்கள்.
தன் பெற்றோருக்கு இருவரையும் அறிமுகம் செய்து வைக்க அவர்களும் மலர்ந்த முகத்துடன் உள்ளே அழைத்து சென்றனர்... சிறிது நேரம் பேசி விட்டு
அம்மா கிளம்பலாமா? டைம் ஆச்சு என்றான் ஆதி...
மோகன் இடையிட்டபடி என்ன தம்பி நீங்க முதல் முறையா வீட்டுக்கு வந்துருக்கீங்க எதும் சாப்டாம போனா எப்படி...
ஐயோ அதெல்லாம் வேணாங்க என்று கோரசாக கூறினார்கள் அம்மாவும் மகனும்...
விஜயாவின் கரம் பற்றிய ப்ரியா... ஏன் ஆன்டி எங்க வீட்ல சாப்ட கூடாதா என்று கேட்க...
அப்படி இல்லம்மா என்று அவர் சொல்லி முடிக்க கூட இல்லை... ப்ரியா இடையிட்டபடி...
என் அம்மா சமையல்ல பிண்ணுவாங்க நீங்க சாப்டுட்டுதான் போகனும் என்று சொல்ல. அவளின் ஆன்டி என்ற அழைப்பு அவரை இன்னும் நெருக்கமாக்க இதுல என்ன இருக்கு வா சாப்டலாம் என்று ப்ரியாவோடு சென்று விட்டார்... இனி ஆதியும் என்ன செய்வான் அமைதியாக சென்று உணவு மேஜையில் அமர்ந்து கொண்டான்.
மோகன்,விஜயா,ஆதி அமர்ந்திருக்க ஜானகி உணவை பரிமாறி கொண்டிருந்தார் ப்ரியாவும் அவருக்கு உதவி செய்து கொண்டிருக்க...
ஆதி பார்த்த மோகன்... ப்ரியாவ வீடு வரைக்கும் கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி தம்பி கனிவோடு கூற...
என்ன அங்கிள் நன்றியெல்லாம் சொல்லிட்டு... இது என்னோட கடமை...ப்ரியா எங்க ஸ்டாஃப்... அவங்களுக்கு ஏதாச்சு ஒன்னுனா பண்ண மாட்டோமா? என்று சொல்ல... புன்னகை மட்டும் புரிந்தார் மோகன்.
விஜயா உணவை உண்றபடி... ப்ரியா நீ சொன்ன மாதிரியே உன் அம்மாவோட சமையல் சூப்பர்தான்... ஆமா நீயும் இதே மாதிரி சமைப்பியா? என்று கேட்க...
இடையிட்ட ஜானகி... மேடம்க்கு அதெல்லாம் வராதுங்க... இவங்க வாய்ல மட்டும்தான் வடை சுடுவாங்க... சரியான வாயாடி என்று நக்கலாக கூற
உடனே ஆதி, நீங்க சொல்றத நான் ஒத்துக்க மாட்ட ஆன்டி... ப்ரியா ரொம்ப...