...

7 views

கொரோனா கடிதம்
முக்கிய அறிவிப்பு
அன்புடையீர் வணக்கம். இன்று நம் சங்க உறுப்பினர்கள் பயமில்லாமல் கடை திறந்து வியாபாரம் செய்ய வேண்டி தலைவர் செயலாளர் பொருளாளர் மூவரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்கச் சென்றோம். எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தலைவரும் பொருளாளரும் ஒரு வழியாக ஆட்சியர் அலுவலகம் சென்றனர். ஆட்சியர் அறைக்கு வெளியே ஒன்றை மணி நேர காத்து இருப்புக்கு பிறகு எங்கள் மனுவை பார்த்த அதிகாரி நேற்றே ஆட்டோமொபைல் சங்கத்திற்கு அனுமதி கொடுத்தோம். ஆனால் அதுவே மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நகர் பகுதியில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் ஆட்சியர் அச்சப்படுகின்றார். இருந்தாலும் ஏபிஏ ஜெகந்நாதன் அவர்களை சந்திக்க வலியுறுத்தினார். அவரிடம் சென்று மனு கொடுத்தோம். மனுவை பார்த்த அதிகாரி நேற்றே ஆட்டோமொபைல் அசோசிஷியேனுக்கு திறப்பதற்கு அனுமதி அளித்து விட்டோமே என்றார். நாங்கள் பழைய ஆட்டோமொபைல் வியாபாரிகள் சங்கம் என்றோம். எங்களுக்கு எல்லாம் ஒன்று தான் கடை திறந்து கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார். காம்ப்ளக்ஸ் கடைகளுக்கு அனுமதி இல்லை. அதன்படி ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளுடன் கடையை நமது உறுப்பினர்கள் திறந்து கொள்ளலாம். கடையில் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். வாடிக்கையாளர் கை கழுவ சானிடைசர் அல்லது சோப்பு அவசியம் வைக்க வேண்டும். பொதுவெளியில் எச்சில் துப்புவது மூக்கை சிந்தி தெருவில் போடுவது கூடாது. இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டையால் மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். நான்கைந்து பேர் கூட்டமாக கூடி அரட்டை அடிக்க கூடாது. கடையை காலை பத்து மணிக்கு திறந்து மாலை ஐந்து மணிக்கு அடைக்க வேண்டும். அறுபது வயதிற்கு மேற்பட்ட நபர்கள் யாரும் கண்டிப்பாக கடைக்கு வரக் கூடாது. இந்த நிபந்தனைகளை மீறும் போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மேற்கண்ட நிபந்தனைகளுடன் கடையை திறக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். மேலும் நம் மார்க்கெட் குறுகிய சந்தாக இருப்பதால் நம் வாகனத்தை மெயின் ரோட்டிலோ அல்லது கண்காணிக்க வரும் போலீஸ் ஜீப் பைக் வர இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது போக இன்று மாலை மதுரை ஆட்சியர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இறுதி அறிக்கை தர உள்ளார். இந்த நேரத்தில் நமக்கு ஆலோசனை சொன்ன ஆட்டோ எலக்ட்ரிக் சிதம்பரம் அண்ணாச்சி விவேக் ஆட்டோ நண்பர் சிதம்பரம் அவர்கள் மற்றும் பாதாளி சித்தார்த்தன் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு
செந்தில்