...

1 views

உருவமில்லா நிழல்

மீண்டும் அந்த உருவமில்லா நிழலைக் கண்டேன் , இரவு 02:30 மணி அளவில் . கும் இருட்டு , திக்கென்று இதயம் படபடக்க உடல் குளிர்ந்து போக, ஒரே மயான அமைதி. நான் ஒரு நிமிடம் ஆடாமல் ஆடிப்போனேன். நான்காவது மாடியில் உள்ள பாய்ஸ் ஹோஸ்டலில் எனது முதல் நாள் அனுபவம். ஏன் என்றால் ஒரு தளத்தில் 20 அறைகள் உள்ளது , அனைத்து அறைக்கும் பொது கழிவறை தான். கட்டிட மேல் பார்வை ஓவல் வடிவக் கட்டிடம். நான் கழிவறைக்குப் போக , அறையை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தேன் . அப்போழுது தான் நான் அந்தக் காட்சியை பார்த்தேன். ஒரு உருவமில்லா நிழலைப் பார்த்தேன் அந்த இருட்டில் ....

நான் 10 ஆம் வகுப்பு முடித்து விட்டு எனது 11ஆம் வகுப்பை தொடங்க ஒரு சிறந்த பள்ளியில் சேர்த்தார் எனது தந்தை.

என் நினைவில் நான் சந்தோசமாக இருந்த காலம் ஆறாம் வகுப்பு வரை தான். ஏன் என்றால் நாளைய பற்றிக்கவலை , பொருட்கள் மீது கவனம் , காசின் மகிமை , வருமை , ஏழ்மை, நடுத்தர தந்தையின் வலி , எதைபற்றியும் விபரம் தெரியாத நாட்கள்.அது மற்றும் இல்லாமல் நான் மாலை வீட்டிற்கு சென்று விடுவேன் . வீட்டுலே அம்மா செய்த நொறுக்கு தீனி இருக்கும்.

முதல் சைக்கிள்
நான் முதல் முதலாய் என் அப்பா வாங்கி கொடுத்த சைக்கிளில் ஏரிய பொழுது. பழையப்பேருந்து நிலையம் அருகில் ஒரு பாய்க்கடையில் உள்ளே சென்ற சிகப்பு வண்ண சைக்கிள், அப்பா காசைக்கொடுத்து விட்டு வெளியே வந்தார். அருகில் உள்ள ஆட்டோவை அலைத்து வாடகை பேசினார் சைக்கிளை எடுத்து வர. எனது காலனி வரைக்கும் மூன்று சக்கர வண்டியில் வந்து நின்றது .அதன் பின் நான் என் சைக்கிளை எடுத்துக்கொண்டு ராஜா ஊர்வலம் போவது போல் நான் என் சைக்கிளில் என் காலனி முழுதும் சுற்றித் திரிந்தேன் . ஆன்றே சைக்கிளும் பஞ்சர் ஆனது. அப்பா விடம் பயந்து சொன்னேன் சிரித்தபடியே வா பஞ்சர் போடலாம் என்று அழைத்து சென்றார்.

அந்த பயம் தான் என்னவோ நான் சில விசயம் மறைக்க நினைத்த நாள் தொடங்கியது .



.... தொடரும்
© hmkpadi