விதவை
© நாவல்
[#விதவை part 1
ஊரே வியக்க தன்னுடைய மகள் லட்சுமிக்கு மிகப்பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி கல்யாணம் நடத்தி முடித்தார் லட்சுமியின் அப்பா குணசேகரன்.
லட்சுமிக்கு கூட பிறந்த ஒரு அண்ணன் இருக்கிறான், அவன் பெயர் ராஜ்.
அவன் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு பெண்ணை காதல் செய்துகொண்டு இருக்கிறான், தன்னுடைய தங்கச்சி கல்யாணம் முதலில் முடியட்டும் அதுக்கு அப்புறம் நம்ம விஷயத்தை வீட்டில் சொல்வோம் என்று ராஜ் அவனுடைய காதலி வினிதாவிடம் கூறினான்.
அதற்கு வினிதாவும் சரி என்று கூறியிருந்தாள்.
ஆனால் இப்போது வினிதா வீட்டில் அவளுக்கு வேறொரு இடத்தில் வரன் பார்க்க தொடங்கினார்கள்.
இதை ராஜ்யிடம் கூறி தன்னுடைய வீட்டில் வந்து பேசி உடனே கல்யாணம் செய்துகொள்ள சொல்லி வினிதா அவளுடைய சூழ்நிலையை சொல்லி தினம் தினம் ராஜ்யிடம் அழ தொடங்கினாள்.
இதையெல்லாம் லட்சுமி பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.
தன்னுடைய கல்யாணம் நடந்தால் தான் அண்ணன் காதலை பற்றி வீட்டில் பேச முடியும் என்று லட்சுமி புரிந்து கொண்டாள்.
லட்சுமி அப்போதுதான் முதல் வருட கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருந்தாள்.
தன்னுடைய அண்ணன் ராஜ்யிடம் நான் கல்யாணம் செய்து கொள்கிறேன்.
உன்னுடைய காதலை பற்றிய வீட்டில் பேசு அண்ணா என்று லட்சுமி கூறினாள்.
இப்போவே கல்யாணம் பன்னிக்கிட்டா உன் படிப்பு என்ன ஆவது என்று ராஜ் கேட்டான்.
நம்ம வீட்டில் இருந்து படிக்கும் படிப்பை கல்யாணத்திற்கு பிறகு என்னுடைய புருஷன் வீட்டில் இருந்து படித்துக்கொள்கிறேன் என்று சிரித்த படி பதில் கூறினாள் லட்சுமி.
ஆனால் லட்சுமிக்கு இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லை அண்ணனின் சூழ்நிலையை புரிந்துகொண்டு தான் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தாள் லட்சுமி.
லட்சுமி கூறியது போல் கல்யாணத்திற்கு பிறகு படிக்க அனுப்புவதாக ஒரு மாப்பிள்ளை வீட்டார்கள் லட்சுமியின் அப்பா குணசேகரிடம் கூறினார்கள்.
அவர்கள் நல்ல குடும்பம் வசதி வாய்ப்புகளுடன் இருக்கவும் கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டார் குணசேகர்.
அதன் பிறகு தான் ஊரே வியக்கும் அளவிற்கு லட்சுமியின் கல்யாணம் நடந்துக்கொண்டு இருக்கிறது.
தன்னுடைய கல்யாணத்தில் வைத்தே தன்னுடைய அண்ணன் ஒரு பெண்ணை காதலிப்பதாக அப்பாவிடம் கூறினாள் லட்சுமி.
லட்சுமி கூறியதை கேட்டதும் ராஜ்யை கூப்பிட்டு தங்கச்சி சொல்வது அனைத்தும் உண்மையா என்று கேட்டார் குணசேகரன்.
சரி தங்கச்சி கல்யாணம் நடந்து முடியட்டும் அதுக்கு அப்புறம் அந்த பொண்ணு வீட்டில் நாம் பேசுவோம் என்று சம்மதம் கூறினார் குணசேகரன்.
தன்னுடைய காதலை அப்பா ஒத்துக்கொண்டார் என்று ராஜ்க்கு ஒரே குஷியாக இருந்தது.
ராஜ்,லட்சுமி இருவருடைய அம்மாவும் இறந்து விட்டதாள் சிறு வயதில் இருந்தே ராஜ்,லட்சுமி இருவரையும் அப்பாவான குணசேகரன் தான் வளர்த்து வருகிறார்.
தன்னுடைய அண்ணன் வாழ்க்கைக்காக 18 வயதிலேயே கல்யாண வாழ்க்கையை தொடங்க போகிறாள் லட்சுமி.
ஆனால் இந்த கல்யாண வாழ்க்கையில் இப்போது இருக்கும் சிரிப்பு வரும் நாட்களில் இடியாக இதயத்தில் இறங்க போவது அப்போது லட்சுமிக்கு தெரியாது.
அப்பாவி பெண்ணாக கல்யாணம் முடிந்து புருஷன் வீட்டிற்கு செல்ல போகும் லட்சுமி கூடிய சீக்கிரம் நாடே பேசும் ஒரு பெண்ணாக மாறப்போவது அப்போது அவளுக்கு தெரியாது.
[#விதவை part 2
திருமணம் முடிந்து இத்தனை வருடம் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு,
பழகிய தோழிகளை விட்டு.
தன்னுடைய சாப்பிடும் பழக்கத்தை மாற்றி,
இரவில் தூங்கிய நேரத்தை மாற்றி,
விடிந்ததும் தூக்கம் களைந்த பின் எழும் பழக்கத்தை மாற்றி,
தனக்கு தன்னுடைய சொந்தங்களை பிரிந்த வருத்தம் மனதில் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் குடும்பத்திற்காகவும், இனிமேல் வாழ போகும் புகந்த வீட்டிற்காகவும் வராத புன்னகையை வலுக்கட்டாயமாக வரவழைத்து கொண்டு குடும்ப கௌரவம் என்று ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டு தன்னையே மாற்றிக்கொண்டு ஒரு புது பிறப்பாக தன் கணவன் வீட்டிற்குள் முதல் அடியை எடுத்து வைத்தாள் லட்சுமி.
(நான் கூறிய அனைத்தும் இன்று வரை ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் மாற்ற முடியாத நிகழ்வு தான் நண்பர்களே)
லட்சுமியின் கணவன் பெயர் கரண்.
லட்சுமியின் கல்யாண வாழ்க்கை முதல் 8 மாதங்கள் வரை நன்றாக இருந்தது, அவளும் தன்னுடைய 2ம் வருட கல்லூரி படிப்பையும் படித்துக்கொண்டு இருந்தாள்,
அதன் பிறகு தான் பிரச்சினைகள் ஆரம்பித்தது.
வீட்டிற்கு வரும் சொந்காரர்கள் வீட்டில் ஏதும் விஷேசம் உண்டா என்று லட்சுமியின் மாமியாரிடம் கேட்க தொடங்கினார்கள்.
அவர்கள் அப்படி கேட்டுக்கொண்டே இருப்பது லட்சுமியின் மாமியாருக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
லட்சுமி ஏன் இன்னும் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறாள் முதலில் அவளை டாக்டரிடம் சோதனைக்கு அழைத்து போய்ட்டு வா என்று லட்சுமியின் மாமியார் தன்னுடைய மகனான கரணிடம் கூறினாள்.
அப்போதுதான் கரண் தயங்கியவாறு தன் அம்மாவிடம் ஒரு விஷயத்தை கூறினான்.
லட்சுமியின் கல்லூரி படிப்பு முடியும் வரை குழந்தை வேண்டாம் என்று தான் இருவரும் முடிவு செய்திருக்கிறோம் என்று கரண் தன்னுடைய அம்மாவிடம் கூறினான்.
இதை கேட்டதும் கரணின் அம்மா பத்திரகாளியாக மாறிவிட்டாள் நம்முடைய சொந்தகாரங்க,பக்கத்தில் உள்ளவங்க எல்லோரும் வீட்டில் ஏதும் விஷேசம் இல்லையா என்று ரொம்பவும் நக்கலாக என்னிடம் கேட்கிறார்கள், எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு என்னுடைய குடும்பத்திற்கும் ஒரு வாரிசு உண்டாகிருச்சுனு நான் பெருமையா சொல்லனும் உன் பொண்டாட்டி படிச்சு கிழிச்சது எல்லாம் போதும் ஆக வேண்டிய வேலையை பாரு என்று கரணின் அம்மா கத்திவிட்டு சென்றாள்.
அம்மாவை எப்படி சமாளிப்பது இந்த சூழ்நிலையை எப்படி தன் மனைவி லட்சுமியிடம் சொல்லுவது என்று பாவம் கரண் செய்வது அறியாமல் விழி பிதிங்கி நின்றான்.
மாலை கல்லூரி முடிந்து வந்ததும் லட்சுமியிடம் சூழ்நிலையை சொல்லி குழந்தையை பெற்றுக்கொண்டே உன்னுடைய படிப்பை தொடரலாம் குழந்தையை அம்மா பார்த்துக்கொள்வார்கள் என்று கரண் கூறினான்.
2ம் வருட படிப்பு முடிந்தவுடன்...