...

11 views

ஏழை விட்டு இளவரசி
தன் பிஞ்சு பாதங்களை  இரும்புக் கட்டிலில் அடித்து அடித்து "டம் டம்" என்று கொலுசொலியோடு ஒலியெழுப்ப, அவ்வொலியை கேட்டு அம்மழலை மலர்ந்து சிரித்து கொண்டிருந்தது. வேலையை முடித்து வீட்டுக்கு வந்த தமிழ் , அப்போது தான் உள்ளே நுழைய, மகளின் விளையாட்டை அறியாது, அவள் பாதங்களைக் கட்டிலில் அடிப்பதைக் கண்டு' வலிக்கும் ' என்று பதறி போய் காலைப் பிடித்துக் கொண்டான்.

"என்னடா குட்டி இப்படி பண்றீங்க கால் வலிக்க போகுது" அந்த பிஞ்சு விரலை நிவி விட்டப்படி பாதங்களில் முத்தம் வைத்தான். கணவனின் அரவம் கேட்டு அடுப்பங்கறையில் இருந்து வந்தாள் வாசுகி. "எப்போ வந்தீங்க?" என்று கேட்டு அவனருகில் வந்து தோளைத் தொட,  அதை...