...

16 views

காதல் (LOVE)

© நாவல்
[#காதல் part 13

எவன் வந்தாளும் நாங்க பார்த்துக்கிறோம் நீ முதலில் வெளியே போடா என்று கௌதமை பார்த்து கூறினார்கள் ஜாஸ்மீனின் அண்ணன்கள்.

ஜாஸ்மீனின் அம்மா,அண்ணிகள் மற்றும் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து அவர்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைக்க முயற்சி செய்தார்கள்.

ஏற்கெனவே மதத்தை பற்றி பேசி அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்று வெட்டி கௌரவத்தால் நம்ம வீட்டு பொண்ண இன்னைக்கு இழந்துட்டோம், எங்க வீட்டு ஆம்பளைங்க நீங்க எல்லோரும் பெரிய வீரனுங்க தான் இப்ப நம்மல கொல்ல வரது எத்தனை பேரா இருந்தாலும் நீங்களே சமாளிச்சுருவிங்க எங்களுக்கு தெரியும்.
ஆனால் அதனால என்ன பயன் இருக்க நீங்க தான் அவங்க வீட்டு பையனை சாகும்படி அடிச்சுட்டு வந்திங்க, அந்த கோபத்தில் தன்னுடைய பையனுக்கு இப்படி ஆயிருச்சுனு அந்த பையனோட அப்பா நம்மல கொல்ல ஆள் அனுப்பிருக்காரு.
நம்ம பொண்ண அவங்க யாரும் கொல்ல அவ விதி முடிஞ்சது அதனால்தான் பஸ் மோதி ஜாஸ்மீன் இறந்து போனாள் இது ஒரு விபத்து அவ்வளவு தான்.
அதனால எதுக்குமே பயன் படாத இந்த வெட்டி கௌரவத்தை விட்டுட்டு நாங்க முக்கியம் உங்க பிள்ளைகள் எதிர்காலம் முக்கியம் என்று நினைத்தால் கௌதம் சொன்னபடி நம்ம எல்லோரும் இந்த ஊரை விட்டு போயிருவோம் என்று ஜாஸ்மீன் வீட்டு பொம்பளைங்க அனைவரும் அவங்க வீட்டு ஆண்களுக்கு எடுத்து கூறினார்கள்.

சரி நாங்க ஊரை விட்டு போக தயாரா இருக்கோம் எங்க குடும்பத்துக்காக தான் இந்த முடிவு எடுத்தோம்
இப்போ நாங்க என்ன செய்யனும் என்று ஜாஸ்மீனின் அண்ணன்கள் கௌதமிடம் கேட்டனர்.

சரி உங்களுக்கு தேவையான துணிகள் அப்புறம் ஓட்டு ஐடி எல்லாம் எடுத்துட்டு சீக்கிரமா எல்லோரும் வீட்டுக்கு பின்புறம் வாங்க என்று சொல்லி விட்டு
வீட்டிற்கு முன்புறம் சென்று கதவை சாத்தி பூட்டு போட்டான் கௌதம்.

வீட்டிற்குள் அனைவரும் தயாராக கிளம்பி நிற்க
அனைவரையும் வீட்டின் பின்புறமாக கூட்டிட்டு வந்து சினிமாவில் பயன்படுத்தப்படும் ஒரு போலீஸ் வேனில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் கௌதம்.

இவர்கள் கிளம்பி தெருவில் இருந்து வெளியே வர அதே சமயம் மொத்த கூலிபடையை சேர்ந்த ரவுடிகளும் அந்த தெருவின் உள்ளே நுழைந்தார்கள்.

5 நிமிட இடைவெளியில் கூலிபடையிடம் சிக்காமல் அனைவரையும் போலீஸ் வேனில் பாதுகாப்பாக வெளியே கூட்டிட்டு வந்தான் கௌதம்.

ரோட்டின் வழியாகவோ,இரயில் வழியாகவோ சென்றால் கண்டிப்பாக இவர்களை பிடித்து விடுவார்கள் என்று மொத்த குடும்பமும் கப்பலில் அந்தமான் செல்வதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் தீபக் முன்பே அவனுடைய நண்பர்கள் மூலம் செய்து விட்டான்.

கௌதம் அனைவரையும் அழைத்துக்கொண்டு துறைமுகத்திற்கு வந்து தீபக் நண்பர்களுடன் சேர்ந்து மொத்த குடும்பத்தையும் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றி விட்டான்.

தீபக் ஜாஸ்மீன்க்கு செய்து குடுத்த சத்தியத்தை தன்னுடைய உயிரை பனையம் வைத்து கௌதம் செய்து முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி தீபக்கை பார்க்க மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.

ஜாஸ்மீன் இறந்ததை நினைத்து இப்போது தான் கௌதம்,தீபக் இருவரும் மனம் அழுதனர்.

சிறிது நேரம் கழித்து கீர்த்தனா எப்படி இருக்கிறாள் ஏன் என்னை பார்க்க அவள் வரவில்லை என்று தீபக் கேட்டான்.

கண் கலங்கியபடி கீர்த்தனா வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான் கௌதம்.

உன்னுடைய காதல் மதத்தால் பிரிந்தது
என்னுடைய காதல் பணத்தால் பிரிந்தது
என்று மனம் உடைந்து அழுதான் கௌதம்.

எல்லா பிரச்சினைகளும் முடிந்து 2 வாரம் ஆனது
ஆனால் கீர்த்தனாவை கௌதம் பார்க்க முடியவில்லை.

PART 14
[#காதல் part 14

எல்லா பிரச்சினைகளும் முடிந்து நாட்கள் சென்றன,
தீபக்கிற்கும் உடல் நிலை சரியாகி காலேஜ்க்கு போக ஆரம்பித்தான்.

ஒரு நாள் தீபக்,கௌதம் இருவரும் ஹோட்டலில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போதுதான் வீட்டில் இருக்கும் போனில் இருந்து யாருக்கும் தெரியாமல் கௌதமிற்கு போன் செய்தால் கீர்த்தனா.

கீர்த்தனாவின் குரலை கேட்டதும் கௌதமிற்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் அந்த மகிழ்ச்சி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை அதற்கு காரணம் அவள் கூறிய விஷயம் அப்படிப்பட்டது.

எனக்கு வீட்டில் கல்யாணம் முடிவு பன்னிடாங்க மாப்பிள்ளை வேறு யாரும் இல்ல தீபக் தான்
நானும் தீபக்கும் ஏற்கெனவே நண்பர்கள் என்பதெல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது நீ முதலில் தீபக்கிட்ட போய் இத பற்றி பேசிட்டு நாளைக்கு இதே நேரத்திற்கு இந்த நம்பர்க்கு போன் செய் கௌதம் என்று சொல்லி விட்டு பதற்றத்துடன் பேசி விட்டு போன்னை வைத்தாள் கீர்த்தனா.

என்ன ஆச்சு என்று தீபக் கேட்க.

கீர்த்தனா கூறிய அனைத்து விஷயங்களையும் தீபக்கிடம் சொன்னான் கௌதம்.

இதை கேட்டதும் தீபக்கிற்க மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
என்னுடைய அப்பா என்கிட்ட பெண் பார்ப்பதை பற்றி எதுவும் சொல்லவில்லை நீ என்னோடு வீட்டுக்கு வா என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வோம் என்று கௌதமை கூட்டிக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றான் தீபக்.

தீபக் வீட்டிற்கு வந்ததும் கல்யாணத்திற்கு பெண் பார்த்திருக்கும் விஷயத்தை அப்போதுதான் சொன்னார் விஸ்வநாத்.

என்னால ஜாஸ்மீன்னை நினைத்த மனசில் இன்னோர் பொண்ண கண்டிப்பா நினைக்க முடியாது கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று தன் அப்பாவிடம் தீபக் வாக்குவாதம் செய்தான்.

கௌதம் அமைதியாக நின்றுகொண்டிருந்தான்.

உன்னுடைய பழைய காதலி ஜாஸ்மீன் குடும்பம் அந்தமான்ல தான் இருக்காங்கனு எனக்கு எப்பவோ தெரியும்
நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா உன் பழைய காதலியோட குடும்பம் உயிரோட இருக்கும்.
இல்லன என் பையனோட வாழ்க்கையை அழிச்ச அந்த குடும்பத்தோட உயிரை எடுத்துருவேன் அதுக்கு அப்புறம் உன் விருப்பப்படி நீ வாழலாம் முடிவு உன்னுடைய கையில் தான் இருக்கிறது என்று சொல்லி விட்டு விஸ்வநாத் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

கௌதம்,தீபக் இருவரும் உடைந்து போய் அங்கேயே உட்கார்ந்தனர்.

ஜாஸ்மீன் குடும்பத்திற்க எதுவும் ஆபத்து வர கூடாது, அதனால நீயே கீர்த்தனாவ கல்யாணம் பன்னிக்க தீபக் என்று கண் கலங்கியபடி சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டான் கௌதம்.

சிறிது நேரம் அமைதியாக சிந்தித்த தீபக் ஒரு முடிவு எடுத்து தன் அப்பாவிடம் சென்று முதலில் அந்த பொண்ணோடு நான் வெளியே போய் பேசி பழகனும் அப்புறம் தான் என்னுடைய முடிவு சொல்வேன் என்று தீபக் கூறினான்.

தீபக்,கீர்த்தனா இருவரும் நண்பர்கள் என்பது இரண்டு வீட்டாருக்கும் தெரியாது.

தாராளமா வெளியே கூட்டிட்டு போ நான் அந்த பொண்ணோட அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கி தரேனு விஸ்வநாத் கூறினார்.

ஓகே, நாளைக்கு நானே அந்த பொண்ணோட வீட்டுக்கு போய் அந்த பொண்ண வெளியே கூட்டிட்டு போறேன்னு என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டான் தீபக்.

மறுநாள் காலை கீர்த்தனாவை வெளியே கூட்டி செல்ல அவளுடைய வீட்டிற்கு சென்றான் தீபக்.

தீபக்,கீர்த்தனா இருவரும் ஒருவரையொருவர் தெரியாதது போல் பேசிக்கொண்டு வீட்டில் இருந்து கிளம்பி காரில் ஏறி வெளியே சென்றனர்.

தீபக்,கீர்த்தனா இருவரும் ஒரு காப்பி ஷாப்பிற்கு சென்றனர்.
அங்கே ஏற்கெனவே கௌதமை வர சொல்லிருந்தான் தீபக்.

கௌதம்,தீபக்,கீர்த்தனா மூவரும் இப்போது ஒன்றாக அமர்ந்திருந்தனர்.

PART 15
[#காதல் part 15 climax

மூவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு
அதன் பின்னர் தீபக் பேச தொடங்கினான்.

என்னால கண்டிப்பா ஜாஸ்மீன மறந்துட்டு கீர்த்தனாவையோ, இல்ல வேறொரு பெண்ணையோ கல்யாணம் செய்து கொள்ள முடியவே முடியாது என்று தீபக் கூறினான்.

இப்போ தான் நான் கடைசி வருட படிப்பையே முடிக்க போறேன்,இனிமேல் டிகிரி வாங்கி வேலைக்கு போயி தொழில் ஆரம்பிச்சு பணம் சேர்த்து அதுக்கு அப்புறம் நான் கீர்த்தனாவ பொண்ணு கேட்டு கல்யாணம் பன்னுறது எல்லாம் நடக்காத காரியம் என்று தன்னுடைய சூழ்நிலையை கூறினான் கௌதம்.

உன்ன தவிர வேறோருத்தன கண்டிப்பா என்னால கல்யாணம் செய்து கொள்ள முடியாது, நிச்சயமா நான் தற்கொலை பன்னிக்குவேன் என்று கீர்த்தனா தன்னுடைய மனதில் இருந்த வலியை கூறினாள்.
நாம வேணா இப்போவே ஊரை விட்டு ஓடிருவோமா என்று கௌதமிடம் கீர்த்தனா கேட்டாள்.

இதை கேட்டதும் தீபக்,கௌதம் இருவரும் அதிர்ச்சியானார்கள்.

நம்ம இப்போ ஊரை விட்டு ஓடி போயிட்டா உனக்கும்,தீபக்கும் கல்யாணம் நடக்காது அப்படி உங்க கல்யாணம் நின்று போனால் அடுத்த நிமிடமே அந்தமான்ல இருக்க ஜாஸ்மீன் குடும்பத்தையே தீபக் அப்பா கொன்றுவாரு என்று இப்போ உள்ள சூழ்நிலையை கீர்த்தனாவிற்கு சொல்லி புரிய வைத்தான் கௌதம்.

கல்யாணம் நடக்கலனா ஜாஸ்மீன் குடும்பம் செத்துரும்
கல்யாணம் நடந்தால் நான் செத்துருவேன் அப்போ இதுக்கு என்ன தான் வழி என்று அழுதாள் கீர்த்தனா.

இதுக்கு ஒரு வழி தான் இருக்கு அதுக்கு உங்க ரெண்டு பேரோட சம்மதமும் முழு மனசா எனக்கு வேணும் என்று தீபக் கூறினான்.

என்ன பன்னனும் நாங்க ஒத்துழைக்க தயார் என்று கௌதமும்,கீர்த்தனாவும் கூறினார்கள்.

ஜாஸ்மீன் தவிர வேற எந்தவொரு பொண்ணையும் நான் நினைக்க மாட்டேன்னு உங்க ரெண்டு பேருக்கும் என்மேல் அந்த நம்பிக்கை இருக்கா என்று தீபக் கேட்டான்.

நிச்சயமா ஜாஸ்மீன் மேல் உனக்கு இருக்கும் காதலை நாங்க நம்புகிறோம் என்று கௌதமும்,கீர்த்தனாவும் கூறினார்கள்.

அப்போ கீர்த்தனாவ நான் கல்யாணம் பன்னிக்கிறேன் என்று தீபக் கூறினான்.

இதைக்கேட்டதும் கௌதம்,கீர்த்தனா இருவரும் அதிர்ச்சியானார்கள்.

என்னால கௌதமை தவிர வேறோரு ஆளை கல்யாணம் செய்து கொள்ள முடியாதுனு நான் சொல்லியும் நீ என்னை கல்யாணம் பன்னிக்கிறேன்னு சொல்லுறியே உனக்கு என்ன பைத்தியாமா என்று மிகவும் கோபமாக கத்தினாள் கீர்த்தனா.

தீபக் என்ன சொல்ல நினைக்கிறான்னு முழுசா கேட்ப்போம் கொஞ்சம் பொறுமையா இரு என்று கீர்த்தனாவை அமைதி படுத்தினான் கௌதம்.

தீபக் பேச ஆரம்பித்தான்.

இப்போ இருக்க சூழ்நிலைக்கு ஜாஸ்மீன் குடும்பத்தை நாம காப்பாற்றனும்,
கீர்த்தனா என்னையை பிடிக்கலைனு சொன்னாலும் இதோட விட மாட்டாங்க இன்னோரு இடத்தில் மாப்பிள்ளை பார்ப்பாங்க.
எனக்கும் வேறொரு இடத்தில் பொண்ணு பார்ப்பாங்க.
குருகிய காலத்துல உன்னாலையும் படிச்சு முடிச்சு பணக்காரன் ஆகி கீர்த்தனாவ பொண்ணு கேட்க முடியாது.
அதனால நம்ம எண்ணங்கள் வாழ்க்கையில் நிறைவேறனும் நினைத்தால் நான் கீர்த்தனாவ ஊருக்கு முன்னாடி கல்யாணம் பன்னித்தான் ஆகனும்.

[#காதல் part 15 climax தொடர்ச்சி...

உன்னுடைய படிப்பை முடிச்சுட்டு எல்லோரும் மதிக்கும் அளவிற்கு நீ முன்னேறி வர வரைக்கும் உன்னுடைய காதலி, ஊருக்கு வெளியே மக்களின் பார்வைக்கு என்னுடைய மனைவியிகவும், எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல தோழியாகவும் என் நிழல் கூட தப்பான எண்ணத்தில் கீர்த்தனா மீது படாமல் நான் பாதுகாப்பாக பார்த்துக்கிறேன்.

நீ வாழ்க்கையில் முன்னேற நான் கண்டிப்பா பணம் குடுத்து உதவி செய்ய மாட்டேன் உனக்கு உன்னுடைய காதல் தேவையினு நினைத்தால் நீயே போராடி வாழ்க்கையில் மேலே ஏறி வா அது வரைக்கும் உன்னுடைய காதலி உன் நண்பன் என்கிட்ட பாதுகாப்பா இருப்பாள் நம்முடைய பிரச்சினைக்கு இது ஒன்றுதான் தீர்வு என்று இனி முடிவு உங்க கையில் என்று தீபக் சொல்லி முடித்தான்.

கீர்த்தனா,கௌதம் இருவரும் சிறிது நேரம் அமைதியாக யோசனை செய்து விட்டு ஒரு முடிவுக்கு வந்தனர்.
நம்முடைய வாழ்க்கை எந்தவொரு சூழ்நிலையிலும் கை விட்டு போயிறாமல் இருக்க ஏதாவது ஒரு வழியை கடவுள் நமக்கு குடுப்பான்
அந்த எங்களுடைய காதல் வாழ்க்கை ஒன்று சேர இன்னைக்கு நாம இந்த முடிவை எடுத்துத்தான் ஆகனும்.
அதனால ஜாஸ்மீன் மேலே உனக்கு இருக்க காதலை நாங்க ரெண்டு பேரும் நம்புகிறோம்,
என்னுடைய காதலை எங்ககிட்டயே திரும்ப ஒப்படைப்பனு உன்னை நாங்க முழுமையா நம்புகிறோம், என்று சொல்லி விட்டு தீபக்கை கல்யாணம் செய்து கொள்ள கீர்த்தனா சம்மதம் தெரிவித்தாள்.
கௌதமும் தன் காதல் மீதும் தன்னுடைய நண்பன் மீதும் இருக்கும் நம்பிக்கையில் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தான்.

அவர்கள் திட்டப்படியே ஊர் முன்னாடி தீபக்,கீர்த்தனா கல்யாணம் நடந்து முடிந்தது.

கௌதம் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொண்டு இரவு,பகலாக உழைத்து இன்று 2020 ஆம் வருடத்தில் இரண்டு முறையாக சிறந்த தொழில் அதிபர் விருதை வாங்குகிறான்.

தன்னுடைய காதலை அடைவதற்கு நான் 22 வருடங்களாக போராடி உள்ளேன்.
இறுதியில் அந்த காதலையும் இன்று நான் 40 வயதில் கை பிடிக்க போகிறேன் என்று விருது வழங்கும் அந்த விழா மேடையில் தன்னுடைய காதலுக்கான வாழ்க்கை பயணத்தை சொல்லி முடித்தான் கௌதம்.

அங்கிருந்த அனைவரும் வியப்பில் என்ன பேசுவது என்று தெரியாமல் வாய் அடைத்து அமர்ந்திருந்தனர்.

தீபக்,கீர்த்தனா இரண்டு பேரையும் மேடைக்கு அழைத்தான் கௌதம்.

கீர்த்தனா குடும்பமும்,தீபக்கின் குடும்பமும் அந்த இடத்தில் தான் இருந்தன.
நீங்க சொன்ன மாதிரியே உங்க தகுதிக்கு நிகரான ஒரு ஆளா இன்னைக்கு நான் உங்க முன்னாடி இருக்கேன்.
இப்போவும் கீர்த்தனா உங்க பொண்ணா தான் இருக்காள் தீபக் பொண்டாட்டி கிடையாது 2 நாட்களுக்கு முன்னாடியே அவங்க முறையா டைவஸ் வாங்கிட்டாங்க இப்போ உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பன்னிக்குடுங்க சார் என்று குருதேவ்வை பார்த்து கௌதம் கேட்டான்.

அவர் எதுவும் பேசாமல் அமைதியாக கண் கலங்கியபடி உன்னுடைய நல்ல நட்ப்பால் தான் உங்க காதல் ஜெயித்தது என்று சொல்லி விட்டு குருதேவ் அங்கிருந்து சென்று விட்டார்.

நான் சொன்னப்படி உன்னுடைய காதலியை இவ்வளவு நாளா நான் பாதுகாப்பா பார்த்துக்கிட்டேன்.
இப்போ உன்னுடைய காதலை உன்கிட்ட திரும்ப ஒப்படைக்கிறேன் என்று சொல்லி விட்டு கீர்த்தனா கையை பிடித்து கௌதம் கையில் ஒப்படைத்து நல்ல நண்பனாகவும்,ஜாஸ்மீனின் உண்மை காதலனாகவும் அந்த இடத்தில் உயர்ந்து நின்றான் தீபக்.

இதையெல்லாம் ஜாஸ்மீன் குடும்பத்தார்களும் டிவியில் பார்த்து அழுது கொண்டு தான் இருந்தார்கள்.

நல்ல நட்பு இருந்தால் எந்தவொரு தடைகளை மீறியும் உண்மை காதல் ஜெயிக்கும்.

சுபம்.

நன்றி.