வீரத் தமிழ் மகள்
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் வாழ்ந்து வந்தனர்.கணவன் பெயர் நாகேஷ். மனைவி பெயர் மலர்விழி.பிள்ளைகள் மூவரில் ஒருவர் ஆண் மற்றைய இருவரும் பெண்கள்.அந்த குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம்.தாய், தகப்பன் இருவரும் தோட்டத்தில் பணிப்புரிபவர்கள்.பிள்ளைகள் மூவரும் பாடசாலை செல்பவர்கள்.சிறிது காலம் சென்றதும் நாகேஷ் சுகயீனமுற்றார்.அதன் பின்னர் மலர்விழி ஒருவர் மாத்திரமே பணிபுரிந்தார்.அவர் உழைக்கும் பணம் குடும்பத்தவர் பசி தீர்க்கவே போதுமானதாக இருந்தது.இந்நிலையில் தன் கணவனது வைத்திய செலவிற்கு வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து விட்டாள்.பிள்ளைகளின் பாடசாலை கற்கைக்கு பணம் செலுத்த முடியவில்லை.நாகேஷின் மகன் சிவனேசன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவர்கள் குடியிருக்கும் ஊரில் உள்ள செல்வந்தர் வீட்டிற்கு தொழிலுக்கு சென்றான்.அவன்...