...

17 views

முன்னாள் காதலி
தன் லாப்டாப்பில் ஏதோ ஒரு வேலையில் மும்முரமாகயிருந்த கார்த்திக்கின் எதிரே அமர்ந்தான் நவீன்...

“டேய் மச்சான் அப்படி என்னடா அந்த லாப்டாப்புக்குள்ள ரொம்ப நேரமா தேடுற???”

“டேய் பிசியா இருக்கேன்டா... ஜோக்குங்குற பேருல மொக்க போட்டு வண்டை வண்டையா வாங்கிக்கட்டிக்காத சொல்லிட்டேன்...”

“ஏன் மச்சான் ஒரு கேள்வி கேட்டது தப்பா???”

“நேரங்கெட்ட நேரத்துல வந்து எக்கு தப்பா கேள்வி கேட்குறது தான் தப்பு...”
என்றான் தன் வேலையை தொடர்ந்தபடி கார்த்திக்..

“மன்னிச்சுக்கோடா... தெரியாமல் கேட்டுட்டேன்.. சரி... எனக்கு அந்த கீர்த்தியோட நம்பர் வேணும்டா..”

“உனக்கு எதுக்குடா அவ நம்பர்..”

“மச்சி உன்னளவுக்கு எனக்கு விவரம் பத்தாதுடா.. நம்பி தாடா..  அவகிட்ட ராமோட பென்டிரைவ் இருக்காம்.. அதை கொண்டு வர சொல்ல தான் நம்பர் கேட்குறேன்..”

“ஓ.. உனக்கு எதுக்கு ராமோட பென்ரைவ்... அப்படியே வேணும்னா ராம்கிட்ட சொல்லி கீர்த்திக்கு சொல்ல வேண்டியது தானே... நீ எதுக்கு அவ நம்பர் கேட்டு என்கிட்ட வந்து நிற்கிற???”

“டேய் நம்பர் கேட்டது ஒரு குத்தமாடா.. இத்தனை கேள்வி கேட்குற?? அவ பாய்பிரண்ட் கிட்ட கேட்டிருந்தா கூட இத்தனை கேள்வி கேட்டிருக்க மாட்டான்.. நீ ஏன்டா இத்தனை கேள்வி கேட்குற??”

“சரி சரி.. என்னோட போன்ல எடுத்து பாரு..”என்று கார்த்திக் சொல்ல நவீனும் கார்த்திக்கினது S9 இனை எடுத்து கீர்த்தியின் நம்பரை தேடத்தொடங்கினான்..

சில கணங்களின் பின் நவீன்
“டேய் எங்கடா கீர்த்தி நம்பரை காணல??”

“டேய் இருக்கும்டா.. நல்லா பாரு.. அதுசரி நீ எப்படிடா தேடுன??”

“வேற எப்படி?? கீர்த்தினு தான்..”

“Ex  னு தேடுடா... “

“ஓ... மேடம் உன்னோட ex ல???” என்ற நவீன் ex என்று டைப் செய்ய அதில் பல ex கள் இருக்க அதில் பதறிய நவீன்

“டேய் என்னடா இது?? இத்தனை ex இருக்கு... ஒன்னு... இரண்டு... மூன்று...என்னடா ஒரு லிஸ்டே இருக்குது???? உனக்கும் மட்டும் எப்படிடா இப்படி அமையிது.. நானெல்லாம் ட்ரை பண்ணி ஓய்ந்து போனது தான் மிச்சம்... ஒன்னு கூட இது வரைக்கும் செட்டாகல.. எப்படி மச்சி உனக்கு மட்டும் எல்லாம் தேடி வருது...??”

“இப்ப உனக்கு என்ன தான்டா பிரச்சனை..??வந்த வேலையை பார்த்துட்டு கிளம்பாம எதுக்கு இப்படி புலம்பிட்டு இருக்க??”

“சரி சரி டென்ஷனாகாத.. கீர்த்தி நம்பர் எப்படி சேவ் பண்ணியிருக்கனு சரியாக சொல்லு..”

“Ex k னு சேவ் பண்ணியிருக்கேன்.. “ என்று கூற அதை தேடி எடுத்தவன்

“கார்த்திக் எல்லா ex க்கு பிறகும் ஒரு லெட்டர் போட்டுருக்க... ஆனா ஒரு ex ல மட்டும் எதுக்கு 🙈❤️❤️🙈  இப்படி இமோஜி போட்டு சேவ் பண்ணியிருக்க??” என்று நவீன் கேட்க  கார்த்திக்கின் இதழ்களில் தானாய் வந்து புன்னகை ஒட்டிக்கொண்டது....

“என்னடா சிரிக்கிற??? எனிதிங் ஸ்பெஷல்?? உன்னையே ஒரு பொண்ணு இம்ப்ரெஸ் பண்ணியிருக்கா போலயே...” என்று நவீன் விவரம் விசாரிக்க முயல கார்த்திக்கோ தன் லாப்டொப்பினை மூடி வைத்துவிட்டு

“ஆமாடா... அவ ஸ்பெஷல் தான்.... எல்லாரையும் விட ரொம்ப ஸ்பெஷல்.. எல்லாரையும் நான் இம்ப்ரெஸ் பண்ணுவேன்... ஆனா இவ ஒருத்தி தான் என்னை இம்ப்ரெஸ் பண்ணா... எதுவுமே பண்ணலை.. ஆனா அவளை ஏனோ எனக்கு ரொம்ப பிடிக்கும்...”

“லவ் பண்ணுறியா மச்சி??”

“லவ்...