...

3 views

அம்மாவின் பாசம்
வந்த வாசியில் வசித்து வருகிறாள் சகுந்தலா இவளுக்கு ரமேஷ் என்ற ஒரே மகன் சகுந்தலா புருஷன் ரமேஷ் பிறந்ததுமே இறந்து விட்டார் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு ரமேஷ் செய் வளர்த்தால் சகுந்தலா ஆஸ்துமா வந்ததிலிருந்து அவள் வேலைக்கு செல்லவில்லை ரமேஷ் ஒரு கம்பெனியில் கூலி வேலை செய்கிறான் சம்பளம் தினமும் 500 ரூபாய் அதில் இவன் தினமும் 200 ரூபாய்க்கு குடித்துவிட்டு வருவான் மீதி பணத்தை அவள் அம்மாவிடம் கொடுப்பான் பணத்தை கொடுத்து விட்டு சரி சரி சாப்பாடு போடு என்றான் தம்பி இன்னைக்கு சமைக்கல உடம்பு சரி இல்லை அதான் படுத்து இருந்தேன் என்றாள் ரமேஷ் கோவத்துடன் நீ எல்லாம் ஏன் இன்னும் உயிரோட இருக்க செத்து தொலையாண்டி என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த மண் சட்டியை ஓங்கி உதைத்து விட்டு நான் அண்ணாச்சி கடையில நான் புரோட்டா சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு காசை பிடுங்கி கொண்டு சென்றான் சகுந்தலா மூலையில் உட்கார்ந்த அழுது கொண்டே இருந்தால் மறுநாள் இரவு அவன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு தட்டு தடுமாறி வீட்டுக்கு வந்தான் வீட்டுத் திண்ணையிலே படுத்து விட்டான் நாய் லொள்லொள் என்று குலைக்க கதவைத் திறந்தால் சகுந்தலா திண்ணையில் படுத்து இருந்த ரமேஷை பார்த்து ரமேஷ் ரமேஷ், எந்திரிப்பா வெறும் வயிற்றில் படுத்தால் உடம்பு கெட்டுவிடும் என சொல்லி ஊட்டி விட்ட விலை சற்று உற்றுப் பார்த்து கட்டியணைத்துக் கொண்டான் ரமேஷ்




S நாராயணன்