...

6 views

மகளின் அகராதி



      மகளின் அகராதி!! 


மார்கழி பனி ஆதவனுக்கு இன்னும் வழிவிடாததால் மணி 6ரை தொட்டும் இன்னும் இருள் சூழ்ந்து இருந்தது ...!

இதை சோம்பல் முறித்தப்படி எழுந்துப்பார்த்த பீரித்தி ..!

அட இன்னும் விடியலையான்னு ..மீண்டும் படுக்கைக்கு போனவளை ...!

டாய் ..வாலு ...எழுந்திரு ...மணி என்னாகுதுன்னு பார்த்தியான்னு ...!

ஒரு கனீர் குரல் ...பீரித்தியின் ...காதைப் பதம் பார்க்க ...!

அப்போ ...தான் மான் போன்ற துள்ளும் விழியை கடிகாரத்தின் பக்கம் திருப்பிய பீரித்தி ...

ஓ...மை....காட் ...மணி ஆறா ...?

இன்னைக்கு வேற ஏதோ ...முக்கியமான நபர் வரார்ன்னு ஆபீஸ்க்கு சீக்கிரமா ...வருமாரு நேத்தே மேனேஜர் 

ஒரு விரலை காட்டி ...காட்டி ...சொன்னாரே ....ன்னு தலையில்  கைவைத்த ...படி இருக்கும் பீரித்தியை ...!

கையில் ஆவிப்பரக்கும் டீயுடன் வந்த சுந்தரத்தை ...!

ஒரு வார்த்தையும் ...சொல்லாமல் அமைதியாகவும் அதேசமையம் கலக்கத்துடனும் காணப்பட்ட பீரித்தியை ...!

தலையில் கைவைத்து டீயை குடிக்கும்படி ...!நீட்டினான் சுந்தரம் ..!

என்னடா ஆபிஸ் கவலையா? ன்னு ...சுந்தரம் கேட்க ...!

ஆமா என்பதுப்போல்...பீரித்தி தலையை ஆட்ட ...!

இப்ப தான் ..அசோக் போன் பண்ணி ..மீட்டிங் வேற எங்கையோ ஷிப்ட் பண்ணிட்டாங்களாம் ...அதனாலை ஆபிஸ் லீவாம் ...என்று சுந்தரம் ....!சொல்ல ...!

ஓ...மை....காட் ....லீவா. ஜாலி ..தான்..ன்னு சிறுப்பிள்ளைப்போல் துள்ளி குதித்தாள் பீரித்தி.!

சரி ...சரி ...நீ ...இன்னும் கொஞ்ச நேரம் தூங்குமா ..நா சமையலை முடித்துட்டு ...!

உன்னை வந்து எழுப்புறேன் ...என்ன? ன்னு சுந்தரம் சொல்ல ....!

கண்ணோரம் சிறு கசிவுடனே தலையை ஆட்டினாள் பீரித்தி ...!

இருபது வருடமா எந்த ஆதரவும் துணையும் இல்லாமல் பீரித்தியை வளர்த்த உத்தமரை நினைத்து வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு ...!

வாசல் கதவை திறந்துக்கொண்டு இயற்கை அழகை இரசித்த பீரித்தியை ஒரு விளம்பரம் பீரித்தியை வெகுவாக ஈர்க்க ...!

என்னன்னு ..இன்னும் தெளிவாக படிக்க ...செருப்பை மாட்டிக்கொண்டு விளம்பரம் ஒட்டப்பட்ட சுவரை நோக்கி நடந்தாள் பீரித்தி ...!

விழிகளை விரித்துக்கொண்டே அதில் உள்ள போன் எண்ணையும் முகவரியையும் குறித்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு வர ..!

வாசலில் ..சுந்தரம் ..என்னம்மா எங்கப்போனன்னு கேட்க ...!

குறித்து வைத்திருந்த முகவரியையும் எண்ணையும் காட்ட ..!

அட ..சூப்பர் ...சூப்பர்...ன்னு சுந்தரம் வியந்து இரு கைகளையும் ஆனந்தமாய் தட்ட ...!

அந்த சந்தோஷத்தில் பீரித்தியும் இணைந்து கொண்டாள் ...!

உடனே ...விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு ...!

தாங்கள் கலந்துக்கொள்வதை உறுதி  பண்ணிவிட்டாள் ..பீரித்தி.!

ஊருக்கு போய் வர இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்பதால் ..!

ஆபிசுக்கு லீவு சொல்லிவிடலாம் என்று ஆபிஸ் எண்ணை டயல் பண்ண ...!

முழுரிங் போய் கட்டானது ..!

ஓ...நோ ...ஆபிசில் யாரும் இல்லைப்போல ...சரி...