...

6 views

Computer,,,,....

© நாவல்

[#கணினி part 1

(எதிர்காலத்தில் நடப்பது போன்ற நிகழ்வுகள் தான் இந்த கற்பனை கதை நண்பர்களே)

2030ல் இந்திய பாராளமன்றத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களும் கூடி ஒரு அவசர ரகசிய பேச்சு வார்த்தையை நடத்தினார்கள்.

நம்முடைய நாட்டில் மக்கள் தொகை அதிகமாகி விட்டது.
மக்களுக்கு சரியான வேலை வாய்ப்புகள் நம்மால் ஏற்படுத்தி தர முடியவில்லை.
பணம் பற்றாக்குறையால் அனைவருக்கும் சம்பளமும் சரிவர குடுக்க முடிவதில்லை.
அரசாங்கத்தின் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு மக்களும் நம்மோடு சேர்ந்து ஒத்துழைப்பு குடுத்து வேலை செய்ய மாட்டிகிறாங்க இந்த சூழ்நிலையை எப்படி நாம் சமாளிக்க போகிறோம் என்று அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்து பேசி விவாதித்து கொண்டிருந்தனர்.

அப்போதுதான் இந்திய ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஒரு யோசனையை கூறினார்.
மக்களுக்கு சரிவர சம்பளம் குடுக்க முடியாத காரணத்தால் தான் யாரும் வேலைக்கு வருவது இல்லை, நாட்டில் உணவு பற்றாக்குறையால் பஞ்சமும் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது இதை எல்லாம் சரி பன்ன நம்ம அறிவியல் சார்ந்த சிந்தனை செய்ய வேண்டும் என்று இந்திய ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கூறினார்.

சரி என்ன யோசனை சொல்லுங்கள் அதன்படி செய்து பார்ப்போம் என்று பிரதமர் கூறினார்.

நாட்டில் இருக்கும் அரசாங்க சம்மந்தமான வேலைகளையும்,அதிக சம்பளம் குடுத்து பார்க்க வேண்டிய வேலைகள் என்று அனைத்து பெரிய வேலைகளையும் செய்வதற்கு நாம் ஒரு கம்ப்யூட்டரை உருவாக்க வேண்டும்.
நம்முடைய நாட்டில் இயந்திர மையமாக இயங்க கூடிய வேலைகள் கணினி சம்மந்தமான வேலைகள் அனைத்தையும் அந்த கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டால் வேலைகளை முடிப்பதற்கு மக்களை எதிர் பார்க்கும் சூழ்நிலையை நாம் தவிர்க்கலாம்.
உணவு பொருள்கள் விளைவிக்கும் வேலையை மட்டும் மக்கள் பார்க்கலாம் என்று தன்னுடைய யோசனையை இந்திய ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பேசி முடித்தார்.

இந்த யோசனை சரியா வருமா அனைத்து இயந்திரங்கள்,கணினி செயல் பாடுகள் என்று அனைத்தையும் அந்த ஒரு கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தால்,
அந்த கம்ப்யூட்டரை நாம் எப்படி கட்டுப்படுத்தி வைப்பது என்று பிரதமர் கேட்டார்.
அந்த கம்ப்யூட்டரை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அதோட மெரியில் ஒரு கட்டுப்பாட்டு கருதி பொறுத்தபடும்.
அந்த கருவியை செயல் படுத்தவும் தவறு ஏற்பட்டால் அதை அழிக்கவும் ஒரு ரகசிய எண்கள் ஜனாதிபதியிடம் குடுக்கப்படும் என்று இந்திய ஆராய்ச்சி மைய தலைவர் கூறினார்.

அனைத்துக்கட்சி தலைவர்களும் இந்த திட்டத்தை வரவேற்றனர்.

அந்த கம்ப்யூட்டரை உருவாக்கும் பணியை இஸ்ரோவில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் தொடங்கினார்கள்.

5 வருடம் போராடி அந்த கம்ப்யூட்டரை நம்முடைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.

உலக நாட்டில் உள்ள தலைவர்கள் அனைவரும் இந்தியாவின் செயல்பாட்டை பார்த்து வியந்து பாராட்டினார்கள்.

முன்பே கூறியது போல் ஒரு கட்டுப்பாட்டு கருவியை அந்த கம்ப்யூட்டரின் மெமரியில் பொருத்துவதற்கான வேலையை ஆராய்ச்சியாளர்கள் செய்து கொண்டிருந்தனர்.

அந்த கம்ப்யூட்டர் உருவாக்கிய விதம் எப்படி செயல்படும் என்கிற அனைத்து தகவல்களையும் இந்திய ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அழித்துவிட்டார்.

அந்த கம்ப்யூட்டர் பற்றிய விவரங்கள் அனைத்தும் ஆராய்ச்சி மைய தலைவர் ஒருவருக்கு மட்டுமே தெரிந்ததாக இருந்தது.

அந்த கட்டுப்பாட்டு கருவியை கம்ப்யூட்டரின் மெமரியில் பொருத்த ஒரு ஆராய்ச்சியாளர் அருகில் சென்றார்.
அப்போதுதான் அந்த கம்ப்யூட்டரின் சுய உருவம் வெளியே தெரிந்தது.

PART2
[#கணினி part 2

கட்டுபாட்டு கருவியை தன்னுடைய மெமரியில் பொருத்த விடாமல் அந்த ஆராய்ச்சியாளிரின் உடலில் மின்சாரத்தை பாச்சி கொன்றது அந்த கம்ப்யூட்டர்.

அதன் பிறகு தன்னுடைய வேலையை தொடங்கியது அந்த கம்ப்யூட்டர்.
பல இயந்திரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது, வானில் இருக்கும் செயற்கை கோள்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது.
கடலுக்கு அடியில் மறைமுக தாக்குதல்க்கு வைக்கப்பட்டிருந்த ஏவுகனைகளை அமெரிக்கா,ரஷ்யா,சீனா இப்படி பல நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு குறி வைத்து அந்த ஏவுகனைகளை தயார் செய்தது அந்த கம்ப்யூட்டர்.

ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் பிரச்சினையை அந்த கம்ப்யூட்டரை உருவாக்கிய இந்திய ஆராய்ச்சி மைய தலைவர்க்கு தெரியபடுத்தினார்கள்.

சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர் ஆராய்ச்சி மையத்திற்கு வேகமாக வந்தார்.

இருக்கும் எல்லா மின்சார உற்பத்தியும் நிறுத்த சொல்லி உத்தரவு போட்டார்.

ஆனால் அந்த கம்ப்யூட்டர் அருகில் உள்ள கார் பேட்டரிகள், ஜெனரேட்டர்கள் என்று அதில் இருந்து மின்சாரத்தை எடுத்து செயல்பட தொடங்கியது.

ஆராய்ச்சி மைய தலைவர் வேகமாக ஓடி சென்று கம்ப்யூட்டரின் மெமரியை தனியாக உடைத்து எடுத்தார், அந்த மெமரி ஒரு திரவம் போல் இருந்தது.
மெமரியை எடுத்து பின்பு அந்த கம்ப்யூட்டர் தன்னுடைய குரலில் ஒலி பெருக்கியின் மூலம் ஒரு எச்சரிக்கை விடுத்தது,
அந்த மெமரி என்னைக்கு என்னிடம் மீண்டும் சேருமோ அன்று இந்த உலககையே என்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவேன் என்று கூறி விட்டு அனைந்து விட்டது.

ஆராய்ச்சி மைய தலைவரின் கையில் இருந்து அந்த மெமரியை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய அங்கிருந்த சில அவரை தாக்க முயற்சி செய்தனர்
அந்த கம்ப்யூட்டர் உருவாக்கும் முறை இவருக்கு மட்டும் தான் தெரியும் மற்ற ஆதாரங்கள் அனைத்தையும் இவர் அழித்து விட்டார், இந்த மெமரியும் யாருடைய கைகளுக்கும் கிடைக்க கூடாது என்று முடிவு செய்து திரவமாக இருந்த அந்த மெமரியை தன்னுடைய வாயில் போட்டு முழுங்கி விட்டார் அடுத்த நொடியில் அந்த திரவம் முழுவதும் அவருடைய இரத்தத்தில் கலந்து அவர் இறந்து விட்டார்.

அதன் பிறகு அவருடைய உடலை அவரின் சொந்த ஊரானா காஷ்மீரில் அவருடைய பழத் தோட்டத்தில் புதைத்து மரியாதை செலுத்தினார்கள்.

பிறகு அந்த கம்ப்யூட்டரை கண் காட்சி பொருளாக அருங்காட்சியத்தில் வைத்தார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உலகை தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர தன்னுடைய மெமரிக்காக காத்திருந்தது அந்த கம்ப்யூட்டர்.

அந்த ஆராய்ச்சி மைய தலைவரை புதைத்த இடத்தில் ஒரு ஆப்பிள் மரத்தை நட்டு வைத்தனர்.

காலங்கள் ஓடியது அவரை புதைத்த இடத்தில் வளர்ந்து ஆப்பிள் மரத்தில் ஒரு ஆப்பிளில் அந்த கம்ப்யூட்டர் மெமரியின் சக்திகள் அனைத்தும் அடங்கிருந்தன அதற்கு காரணம் அவரை புதைத்து பின்பு அந்த மரத்தின் வேர்கள் அவரின் உடலில் குத்தி இறங்கி வளர தொடங்கியது, அந்த மரத்தில் முதலில் பூ பூத்து காய்க்கும் பழத்தில் அந்த மெமரியின் மொத்த சக்திகளும் போய் சேர்ந்தது.

அந்த தோட்டத்தில் இருந்து பழங்களை விற்பனைக்கு அனுப்ப தொடங்கினார்கள்.
அதில் அந்த ஒரு பழமும் விற்பனைக்கு தொடங்கியது.

எல்லா மாநிலங்களுக்கு ஆப்பிள் பழம் விற்பனைக்கு வந்தது
ஆனால் அந்த ஒரு பழம் விற்பனைக்கு வந்து சேர்ந்து மாநிலம் தமிழ்நாடு.

(அந்த பழத்தின் மூலம் ஒரு 13 வயதில் சிறுமிக்கும் எங்கோ ஒரு மூலையில் அருங்காட்சியத்தில் தன்னுடைய மெமரிக்காக காத்திருக்கும் அந்த கம்ப்யூட்டர்க்கும் நடக்க போகும் விறு விறுப்பான விளையாட்டை பார்க்க தயாராக இருங்கள் நண்பர்களே)

PART3
[#கணினி part 3

மருத்துவமனையில் தன்னுடைய மனைவி வித்யாவை மருத்துவ சோதனைக்காக அழைத்து வந்திருந்தான் சிவா.

வித்யா கற்பமாக இருக்கிறாள் என்று டாக்டர் சிவாவிடம் கூறினார்கள்.

சிவாவும்,வித்யாவும் மிகவும் சந்தோஷமாக மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கிளம்பினார்கள்.

வீட்டிற்கு செல்லும் வழியில் பழங்கள் வாங்குவதற்கு பைக்கை நிறுத்தி விட்டு ஒரு பழக்கடைக்குள் சென்றான் சிவா.

கற்பமாக இருக்கும் தன்னுடைய மனைவிக்காக நிறைய பழங்களை வாங்கி வந்தான், அதில் கம்ப்யூட்டர் மெமரியின் சக்தி கொண்ட அந்த ஆப்பிள் பழமும் இருந்தது.
அப்பாவாக போகும் சந்தோஷத்தில்
வீட்டிற்கு வந்ததும் இனிப்பு செய்து சாப்பிட்டு தன்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய விருந்தே வைத்தான் சிவா.

விருந்து முடிந்து அனைவரும் சென்ற பிறகு வித்யா சாப்பாடு வேண்டாம் எனக்கு பசி இல்லைனு சிவாவிடம் கூறினாள்.

சரி வெறும் வயிற்றில் படுக்காதே என்று சொல்லி விட்டு வாங்கி வந்த பழங்களில் இருந்து ஆப்பிள்ளை எடுத்து வெட்டி குடுத்தான்.
வித்யா வாங்கி சாப்பிட்டால் அது கம்ப்யூட்டரின் மெமரி சக்தி அடங்கிய அந்த ஆப்பிள் தான்.

இரவு இருவரும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போதுதான் அந்த ஆப்பிள் வித்யாவின் வயிற்றில் வேலை செய்ய தொடங்கியது.

வித்யாவின் கற்ப பைக்குள் புகுந்து அந்த குழந்தையின் கருவோடு ஒட்டி வளர தொடங்கியது அந்த கம்ப்யூட்டர் மெமரியின் திரவம்.

மறுநாள் விடிந்ததும் சிவா வேலைக்கு சென்று விட்டான்,
வித்யா வீட்டில் இருக்கும் வேலைகளை எப்போதும் போல பார்க்க தொடங்கினாள்.

நான்கு மாதங்கள் சென்றது வேலை விஷயமாக சிவா மலேசியாக்கு செல்ல வேண்டியது இருந்தது.
தன்னுடைய மனைவி வித்யாவையும் அழைத்துக்கொண்டு செல்ல சிவா முடிவு செய்தான்.
இருவரும் கிளம்பி ஏர்போர்ட்டுக்கு சென்றார்கள்.

விமானத்தில் ஏறுவதற்காக டிக்கெட்டுகளை சரி பார்த்து விட்டு சோதனைகள் எல்லாம் முடிந்து உள்ளே சென்றார்கள் சிவாவும்,வித்யாவும்.

அப்போதுதான் வித்யாவிற்கு லேசாக தலைச்சுற்று ஏற்படவும் அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
உடனே அருகில் உள்ள அனைவரும் ஓடி வந்து தண்ணீரை முகத்தில் தெளித்து வித்யாவை மயக்கத்தில் இருந்து எழுப்பினார்கள்.
வித்யா கண் விழித்ததும் அவளுடைய பார்வைக்கு அனைத்தும் ஒரு ரோபோ பார்ப்பது போல் இருந்தது அவளுக்கு.

அவர்கள் செல்ல வேண்டிய விமானத்தை தன்னுடைய கண்களால் ஸ்கேன் செய்தாள் வித்யா.
அது அவளுக்கு மிகவும் ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது.

அவள் ஸ்கேன் செய்து பார்த்ததில் அந்த விமானத்தில் இன்ஞ்சின் உள்ளே ஒரு நட்டு உடைந்து இருப்பதை அவள் பார்த்தாள். இதை சரி செய்யாமல் இந்த விமானம் கிளம்பினால் சரியாக 36 நிமிடத்தில் வெடித்து விடும் என்று தன்னுடைய பார்வையிலே கணித்தால் வித்யா.

அந்த விஷயத்தை உடனே சிவாவிடம் கூறினாள்.
ஆனால் முதலில் சிவா நம்பவில்லை பிறகு வித்யா அழுது கெஞ்சி கேட்டாள் அந்த விமானத்தை சரி செய்ய சொல்லி.

அதன் பிறகு சிவாவும்,வித்யாவும் ஏர்போர்ட்டில் உள்ள அதிகாரிகளிடம் மிகவும் போராடி இந்த விஷயத்தை எடுத்து சொல்லி விமானத்தின் இன்ஜின்யை சரி சோதனை செய்ய சொன்னார்கள்.

விமான இன்ஜின்யை சோதனை செய்ததில் வித்யா கூறியது போலவே ஒரு நட்டு உடைந்து இருந்தது.

வித்யாவை அனைவரும் வியப்பாக பார்த்தனர்.
சில மாதத்தில் வித்யாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த உடனே தன்னுடைய மெமரி வெளியே வந்து விட்டது என்பதை அந்த கம்ப்யூட்டரால் உணர முடிந்தது.

(கம்ப்யூட்டர் மூளையோடு ஒரு குழந்தை வளர்ந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று பாருங்கள் நண்பர்களே)

PART 4
[#கணினி part 4

வித்யா தன்னுடைய குழந்தைக்கு தர்ஷினி என்று பெயர் வைத்தாள்.

தர்ஷினிக்கு 3 வயது ஆனவுடன் பள்ளியில் விளையாட்டு பள்ளியில் சேர்த்தான் சிவா.

அந்த பள்ளியில் குழந்தைகளுக்கு குடுக்கப்படும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் எப்பொழுதும் தர்ஷினியே முதலில் ஜெயித்து வருவாள்.

5 வயதில் 1ம் வகுப்பில் படிக்கும் போது புத்தகங்களில் உள்ள அனைத்து பாடங்களையும் தன்னுடைய மூளையில் உடனே ஏற்றிக் கொள்வாள்.

தரிஷினியின் புத்திசாலிதனத்தால் 10 வயது இருக்கும் போதே படிப்பில் முன்னேற்றம் அடைந்து 10ம் வகுப்பில் படித்தாள் தர்ஷினி இந்த விஷயம் உலகம் முழுவதும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

ஒவ்வொரு நாட்களும் பாராட்டு மழையில் நனைந்தாள் தர்ஷினி.
அப்போதுதான் அவள் வாழ்க்கையை புரட்டி போட போகும் நாள் வந்தது.

ரோபோ மூலம் பாடம் எடுக்க ஒரு புதிய முயற்சியை பள்ளியில் மேற்க்கொண்டனர்

தர்ஷினி படிக்கும் பள்ளிக்கும் ஒரு ரோபோவை அரசாங்கம் அனுப்பி வைத்தது.
அனைத்து பள்ளியிலும் மிக சரியாக பாடம் நடத்தியது ரோபோக்கள்.

தர்ஷினி பள்ளியிலும் ஒரு ரோபோ நன்றாவே பாடம் நடத்திக்கொண்டிருந்தது அந்த சமயம் மழை பெய்து பயங்கரமான மின்னல் ஒன்று பள்ளியின் மாடியில் உள்ள இடிதாங்கி மீது தாக்கியது.
அந்த மின்னலின் சக்தி அதிகமாக இருந்ததால் பாடம் நடத்திக்கொண்டு இருந்த ரோபோ தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள அனைத்து பொருள்களையும் உடைக்க தொடங்கியது.

யாராலும் அந்த ரோபோவை கட்டுப்படுத்த முடியவில்லை.
அனைத்து மாணவர்களும் பயந்து ஓட தொடங்கினார்கள்.
சில மாணவர்களை அந்த ரோபோ தாக்கியது அதில் தர்ஷினியின் காலில் இரத்தம் வரும் அளவிற்கு அந்த ரோபோ தாக்கியது, காலில் அடி பட்டதால் தர்ஷினியால் நடக்க முடியாமல் அந்த ரோபோவிடம் மாட்டிக் கொண்டாள்.

தர்ஷினியை தாக்க அந்த ரோபோ அருகில் வந்தது அப்போதுதான் அனைவரும் வியக்கும் அளவிற்கு ஒரு விஷயம் நடந்தது தன்னுடைய கை அசைவில் அந்த ரோபோவை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தாள் தர்ஷினி.

அந்த ரோபோவின் ஒட்டு மொத்த செயல் திறனையும் தன்னுடைய கண்களில் ஸ்கேன் செய்து மூளையில் ஏற்றிக் கொண்டாள் தர்ஷினி.

தர்ஷினியின் கை அசைவுக்கு கட்டுப்பட தொடங்கியது அந்த ரோபோ அதை பார்த்ததும் அனைவரும் ஆச்சரிய பட்டனர் எப்படியோ தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து அந்த ரோபோவை செயல் இழக்க செய்தாள் தர்ஷினி.
ரோபோவின் பாடம் எடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் அனைத்து ரோபோக்களையும் பிரித்து செயலிழக்க ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பினார்கள்.

அந்த ரோபோக்களை பிரித்து பல அருங்காட்சியத்தில் வைத்தார்கள்.
தர்ஷினியை தாக்கி இரத்த கறையுடன் இருந்த அந்த ரோபோவின் கைகளை பிரித்து அந்த கம்ப்யூட்டர் அருகில் அருங்காட்சியத்தில் வைத்தார்கள்.

தர்ஷினியின் இரத்தம் ஒட்டியிருந்த அந்த ரோபோவின் கையை காந்த சக்தியின் மூலம் தன்னுடைய உடலில் இழுத்து ஒட்டிக்கொண்டது அந்த கம்ப்யூட்டர்.
தர்ஷினியின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தில் அந்த கம்ப்யூட்டரின் மெமரி திரவம் தான் கலந்துள்ளது.
அதிலிருந்து ஒரு துளி அளவுள்ள இரத்ததை தான் தன்னுடைய உடலில் சேர்ந்துக்கொண்டது அந்த கம்ப்யூட்டர்.

ஒரு துளி மெமரி கிடைத்ததும் தன்னுடைய வேலையை தொடங்கியது அந்த கம்ப்யூட்டர்.
அருங்காட்சியகத்தில் பிரித்து வைக்கப்பட்டிருந்த பாதி ரோபோக்களை செயல்படுத்த ஆரம்பித்து தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது அந்த கம்ப்யூட்டர்.

அருகாட்சியகத்தில் உள்ள அனைவரையும் தாக்கி விட்டு தர்ஷினியை தன்னிடம் உயிரோடு பிடித்து கொண்டு அனைத்து ரோபோவிற்கும் உத்தரவிட்டது.
REAL GAME START

PART 5
[#கணினி part 5

அருங்காட்சியகத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி அனைத்து மீடியாவிலும் செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது.
அதே சமயம் பள்ளியில் நடந்த பிரச்சினையில் காலில் அடிப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தாள் தர்ஷினி.

சிவாவும்,வித்யாவும் மருத்துவமனைக்கு பதறிக் கொண்டு வந்தனர்.
தர்ஷினி நன்றாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் தான் அவர்களுக்கு உயிரே வந்தது.

சண்டை நடக்கும் போது தன்னுடைய கண் பார்வை ஒரு ரோபோ போல இருந்தது என்னால் அந்த ரோபோவை கை அசைவில் கட்டுப்படுத்த முடிந்தது,
அந்த ரோபோவின் மொத்த செயல் திறனும் இப்போ என்னுடைய மூளையில் அப்படியே பதிவாகி இருக்கிறது என்று தன் அம்மாவிடம் கூறினாள் தர்ஷினி.

தனக்கும் சில வருடங்களுக்கு முன்பு ஏர்ப்போர்ட்டில் இதே மாதிரி தான் என்னுடைய கண்களுக்கு தெரிந்தது என்று வித்யா கூறினாள்.

தர்ஷினியை தேடி அருங்காட்சியத்தில் இருந்து கிளம்பிய ரோபோக்கள் ஊரையே நாசம் செய்தனர்.

எவ்வளவு முயன்றும் அந்த ரோபோக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ்காரர்கள் திணறினார்கள்.

சிட்டியில் ரோபோக்களால் நடக்கும் பிரச்சினையை செய்தியில் பார்த்துக்கொண்டு இருந்தாள் தர்ஷினி.

செய்தியில் காட்டப்படும் அந்த ரோபோக்களை வீட்டிலிருந்து கண்களால் ஸ்கேன் செய்தாள் தர்ஷினி.

அந்த ரோபோக்கள் அனைத்தும் காந்த சக்தியின் மூலம் செயல்பட்டுக்கொண்டிருப்பதையும், அதை வேறு யாரோ கட்டுப்படுத்திகிறார்கள் என்பதை தர்ஷினி கண்டறிந்தாள்.

உடனே அருகில் உள்ள போலீஸ்காரர்களிடம் இந்த விஷயத்தை தன்னுடைய அப்பாவை அழைத்துக்கொண்டு போய் அந்த ரோபோக்கள் செயல்படும் விதத்தை தெளிவாக எடுத்து கூறினாள்.

போலீஸ்காரர்களுக்கு அவள் கூறியது எதுவும் சரியாக புரியாததால் ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஒரு விஞ்ஞானியை வரவழைத்தார்கள்.

அவரிடம் அனைத்து விஷயங்களையும் எடுத்து சொன்னாள் தர்ஷினி.
அந்த ரோபோக்கள் அனைத்தும் வேறொரு இடத்தில் இருந்து வரும் எலக்ட்ரோ காந்த சக்தியில் தான் செயல் படுகிறது
அந்த இடத்தை கண்டு பிடிச்சு மெகா சைஸ் காந்தத்தை அந்த ரோபோக்களுக்கு உத்தரவு எங்கிருந்து வருகிறதோ அந்த இடத்தில் எதிர் முனையில் வைத்தால் இந்த ரோபோக்கள் செயல் இழந்துவிடும்.
முக்கியமான விஷயம் ரோபோக்களுக்கு உத்தரவு வரும் இடம் இந்த ரோபோக்கள் இருந்த அந்த அருங்காட்சியகம் தான் அதனால அங்கே தான் இந்த மெகா சைஸ் காந்த சக்தியை மைனஸ் அளவில் எதிர் முனையில் வைக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லி முடித்தாள் தர்ஷினி.

தர்ஷினி கூறியது போல அந்த அருங்காட்சியகத்தை சுற்றி மெகா சைஸ் காந்த சக்தியை மைனஸ் அளவில் எதிர் நோக்கி வைத்தனர்.
அருங்காட்சியகத்தில் இருந்து வெளி வரும் காந்த சக்தியில் ப்ளஸ்ம், வெளியே இருக்கும் மெகா சைஸ் காந்த சக்தியின் மைனஸ்ம் நேருக்கு நேர் மோதியதில் அந்த ரோபோக்களுக்கு சென்ற தொடர்புகள் நின்று அனைத்து ரோபோக்களுக்கும் செயல் இழந்து கீழே விழுந்தது.

அந்த கம்ப்யூட்டரின் காந்த சக்தி வெளியே இருக்கும் மெகா சைஸ் காந்த சக்தியை மீறி வெளியே செல்லாமல் முடங்கியது.
ஆனால் சிறிது நேரம் மட்டுமே அவர்களால் அந்த கம்ப்யூட்டரின் காந்த சக்தியை கட்டுப்படுத்த முடியும் அதன் பிறகு நடக்க போகும் ருத்ர தாண்டவத்தை அவர்கள் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள்.

அனைத்து செய்தி சேனல்களிலும் தர்ஷினியின் முகம் தான் உலகம் முழுவதும் காட்டப்பட்டக்கொண்டிருந்தது.

தர்ஷினி இருக்கும் இடத்தை செய்தியின் மூலம் அந்த கம்ப்யூட்டரமும் தெரிந்து கொண்டது.

PART 6
[#கணினி part 6

தர்ஷினி இருக்கும் இடத்தை அந்த கம்ப்யூட்டர் தெரிந்து கொண்டதும் தன்னுடைய வேலையை தொடங்கியது.

ரோபோக்கள் வெளியே சென்று மக்களை தாக்கி பொருட்களை சேதப்படுத்தினால் அதை தடுக்க கண்டிப்பாக தர்ஷினி வெளியே வருவாள் அப்படி வந்தால் அவசர புத்தி படைத்த இந்த மக்கள் மீடியா மூலம் அவளை வெளி உலகத்திற்கு காட்டுவார்கள் அதன் மூலமாக தர்ஷினி இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வது தான் இந்த கம்ப்யூட்டரின் மிகப்பெரிய திட்டம் அது இப்போது நிறைவேறிவிட்டது.
அதனால்தான் முதலில் பாதி ரோபோக்களை மட்டும் செயல் படுத்தி வெளியே அனுப்பியது.

இப்போது அருங்காட்சியகத்தில் மீதம் உள்ள ரோபோக்களையும் செயல் படுத்த தொடங்கியது.
அருங்காட்சியத்தை தாண்டி தான் கம்ப்யூட்டரின் காந்த சக்தி செயல் படாமல் வெளியே மெகா சைஸ் காந்த சக்தியை வைத்து கட்டுப்படுத்தினார்கள்.
ஆனால் அருங்காட்சியத்திற்கு உள்ளே கம்ப்யூட்டரின் காந்த சக்தி செயல் படும் அதனால்தான் மீதம் உள்ள ரோபோக்களை இப்போது செயல்பட வைத்தது.

அருங்காட்சியத்தின் வெளியே மீடியாகள் அனைவரும் அங்கிருந்து செய்திகளை நேரடியாக ஒளிப்பரப்பி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று அந்த இடமே நிலநடுக்கம் வந்தது போல் ஆடியது அனைவரும் பயந்து நடுங்கினார்கள்.

சிறிது நேரத்தில் அந்த நில அதிர்வு நின்றது என்ன நடந்தது என்று அனைவரும் ஒருவரையொருவர் முகத்தை பார்த்துக்கொண்டனர் இதை எல்லாம் நேரடி ஒளிப்பரப்பாக உலகமே பார்த்துக்கொண்டிருந்தது.
தர்ஷினியும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அடுத்த நொடியில் அருங்காட்சியகத்தில் உள்ள கண்ணாடி கதவுகளை உடைத்துக்கொண்டு பல ரோபோக்கள் துப்பாக்கியில் இருந்து சீறி வரும் தோட்டாக்களை போல வெளியே வந்து அங்கிருந்த மைனஸ் அளவில் உள்ள மெகா சைஸ் காந்த சக்தியை உடைத்து எறிந்தன.

அனைத்து போலீஸ்காரர்களும் சேர்ந்து அந்த ரோபோக்களை தடுத்து துப்பாக்கியில் சுட்டனர் ஆனால் அதனால்தான் எந்த பயனும் இல்லை.

அப்போதுதான் அந்த கம்ப்யூட்டர் அருங்காட்சியத்தில் இருந்து ஒரு பயங்கரமான அலறல் சத்தத்தை ஒலி பெருக்கியின் மூலம் எழுப்பியது.
அந்த சத்தத்தின் அழுத்தத்தை வெளியே உள்ள மக்களால் தாங்க முடியவில்லை பாதி பேருக்கு மேல் காதில் இருந்து இரத்தமே வந்து விட்டது.

அதன் பிறகு அந்த இடமே அமைதியானது இப்போது அந்த கம்ப்யூட்டர் ஒலி பெருக்கியின் மூலம் ஒரு நிபந்தனையை அரசாங்கத்திடம் முன் வைத்தது.

தர்ஷினியின் புகைப்படத்தை அனைத்து மீடியா சேனல்களிலும் ஒளிப்பரப்பி அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த பொண்ணு இங்கே இருக்கனும் இல்லையென்றால் நீங்கள் சந்திக்க போகும் விளைவுகள் உயிர் இழப்புகள் மிக கொடுமையாக இருக்கும் என்று அந்த கம்ப்யூட்டர் எச்சரிக்கை செய்தது.

ஒரு சாதாரண கம்ப்யூட்டர் சொல்லவதை எல்லாம் அரசாங்கம் செய்ய முடியாது முதலில் தர்ஷினியின் குடும்பத்திற்கு பலத்த பாதுகாப்பு குடுங்கள்.
அடுத்த கட்டமாக அருங்காட்சியத்தில் 2 km தூரத்தில் எந்தவொரு மக்களும் இல்லாமல் வெளியேற்றுங்கள் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார்.
மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிய உடன் போர் விமானத்தில் இருந்து அணுகுண்டை போட்டு அந்த அருங்காட்சியத்தை வெடிக்க வையுங்கள் என்று முதலமைச்சர் கூறினார்.

அதன் படி அனைத்து திட்டங்களையும் செயல் அதிகாரிகள் அனைவரும் வேகமாக செயல்பட்டுக்கு கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் தர்ஷினி கவனித்துக்கொண்டு தான் இருந்தாள். அப்போதுதான் அவளின் மூலை வேகமாக சிந்தனை செய்ய தொடங்கியது.

(அடுத்ததாக மிகப்பெரிய யுத்தமே நடக்கப் போகிறது பொருத்திருந்து பாருங்கள் நண்பர்களே)

PART 7
[#கணினி part 7 COMING SOON