...

7 views

மாயை பேசுதடா 1
பகுதி:1

சாா்... சாா்... சாா்.... வீட்டில் யாரும் இருக்கீங்களா?... சரி, கதவை தட்டி பார்க்கலாம்.
        
    "வவ்வவ்....வவ்வவ்...வவ்வவ்...."

சாா்... சாா்... "நாய் குரைக்குது"... சீக்கிரமா வாங்க சாா் என்று சுற்றி சுற்றி நாய் வருகிறதா என பயந்து பார்க்கும் பூபதி.

மீண்டும்...

   "வவ்வவ்.....வவ்வவ்.....வவ்"

யார்யா இது?  கதவை ஆட்டுவது. கதவிலிருந்து கையை எடுப்பா...

சாா், "நாய்கள் ஜாக்கிரதை" என்று எழுதி போடலாமே... என்றான் பூபதி.

அட, எங்கள் கதவை எங்களை தவிர வேறு யாராவது தொட்டால் இப்படி சத்தம் வரும்... திருடர்கள் தான்  ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஹஹஹஹாா...... என்றார் வீட்டு உரிமையாளர்.

உனக்கு கை குழந்தை, மனைவி இருக்கிறாங்கன்னு சொன்னாய் ஆனால் நீ மட்டுமே வந்திருக்காய்.

இன்னும் இரண்டு வாரத்தில் வந்து விடுவார்கள் சார் என்றான் வீட்டு உரிமையாளர் கையில் இருக்கும் வீட்டு சாவியை நோக்கி பூபதி.

மறந்தே விட்டேன், இந்தாப்பா உன் வீட்டு சாவி. நீங்கள் குடி வருவீர்கள் என்று நேற்றே சுத்தம் செய்தாச்சு.. என்றார் வீட்டு உரிமையாளர்.

வீட்டு சாவியுடன் பூபதி.

மாடி படியெல்லாம் சுத்தமா வச்சிருக்காங்க.
நம்ம போர்சன்க்கு பக்கத்து போர்சனில் யாரோ பிரஸ் பண்னிட்டு  நிற்கிறாரு  பார்த்து  ஒரு விஸ்
சொல்லலாம். குட் மார்னிங் சார்.

ம்... ம்ம்ம்.... என்று ஏறயிறங்க பார்த்து விட்டு
அவர் வீட்டிற்குள்  சென்றார். 

"ஏண்டா?.. குட் மார்னிங் சொன்னது தப்பா?.. அவன் என்னனா,  கதவை தட்டவே  கூடாதுன்னு நினைக்கிற மாதிரி ஒரு சப்தம் வச்சிருக்கான். இவன் குட் மார்னிங் திரும்ப சொல்லவே கூடாத மாதிரி முழிச்சுட்டு போறான். நல்ல காம்பவுண்ட்க்கு வந்திருக்கோம். இன்னும் என்னவெல்லாம் பார்க்க போறோமோ... "  என்று முனுமுனுத்தான் பூபதி.

"இனிமேல் தான் டா உனக்கு கச்சேரியே இருக்கு"  அய்யய்யோ,   இது எங்கிருந்து..
திரும்பி காதில் எதுவும் கேட்பதற்குள்  கதவை திறந்து விடு டா பூபதி... என தனக்கு தானே சொல்லி கொண்டு கதவை திறந்தான்.

" கீகீச்ச்ச்... "

"வாவ்... சூப்பர் என்ன ஒரு அழகான பெயிண்ட்...  சொல்லவே வார்த்தை இல்லையே... "  வெயிட் பண்ணு... எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு உனக்கு ஒரு கவிதை எழுதி தருகிறேன்.

"ம்ம்ம்ம்... இனி எல்லாத்தையும் எடுத்து வைக்கனுமா."  அன்றைய பொழுது அனைத்தையும்  எடுத்து வைப்பதிலே சென்றது.

இரவு தூங்க சென்று விட்டான். வேலை களைப்பு.  காலை எழுந்து வீட்டை பார்த்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவன் ஒரு மணிநேரம் வெளி வரவில்லை.

யாருடா இது? ஒரு நாள் நைட் தான் தூங்கினேன். கிச்சன் தவிர எல்லா கலைந்து இருக்கு. வீட்டிற்குள் பேய் தான் இருக்கிறது. ஆனால், கிச்சன் மட்டும் அழகா இருக்குது. பாத்திரம் எல்லா சுத்தமாயிருக்கு. ம்ம்ம்... அய்யா ஜாலி பொங்கல், சாம்பார், சட்னி, வடை  எல்லாமே இருக்கு. அய்யய்யோ, இதெல்லாம் யார் செய்தது. அழுகையா  வருதே.. பயமா இருக்குது.  சரி கோவிலுக்கு போய் இதெல்லாம் சொல்லி விபூதி வாங்கி வரலாம். பக்கத்து போர்சன்காரன் குட் மார்னிங் சொன்னாலே முறைக்கிறான். இதை சொன்னால் எவனும் நம்புவானா?..

அப்பாடா, விபூதி வாங்கியாச்சு. இன்றைக்கு நைட் வரட்டும் ஒரு கை பார்த்திடலாம்.

ராத்திரி வந்ததும் பயமாகுதே. " ரெண்டு பேரும் சண்டை போடாமல் விளையாடுங்க. நான் கிச்சன்க்கு போறேன்" என்று ஒரு இனிமையான குரல்.

இவன் ரூமில் இருந்து வெளியே வந்து பார்த்தால் யாரும் இல்லை. யாரையும் காணவில்லை. சத்தம் மட்டுமே கேட்குதே.
அய்யோ, அட ஆண்டவா  நாளை காலை என்ன நடக்குமோ என்று பயந்து தலையோடு போா்வை  போட்டுக் கொண்டு தூங்கி விட்டான்.

காலை கதவை திறந்து பார்த்து அழத் தொடங்கினான். "கடவுளே, நான் புதுசா வாங்கின பொருளெல்லாம் உடைந்து கிடைக்கிறது. ஆனால், கிச்சன் மட்டும் சுத்தமாக இருக்கு. இது செய்யும் ஒரு நல்ல வேலை என்றால் சமைத்து விட்டு போவது. அதிலும் சாப்பிட்டுவிட்டு மிச்சம் இருக்கிறது வைத்து விட்டு போகுது."

யோவ், யார்யா உள்ள?...

பாதையில் போகும் வழியில் இப்படி யாராவது தக்காளி, முட்டை, காய்கறிகளை சிதறுவார்களா என்றான் பக்கத்து போா்சனில் இருக்கும் குட் மார்னிங். 

இனி விடக்கூடாது. இன்றைக்கு கேமராவை வீட்டில் மாட்டி விடலாம்.  கேமராவை மாட்டினான். மறு நாள் காலை அதே அரங்கேற்றம் தான் நடந்திருக்கிறது.
ஹால் கேமரா உடைந்து கீழே கிடக்கிறது. கிச்சன் எப்பவும் அழகு. அங்குள்ள கேமரா மட்டும் தப்பித்தது. அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

ஆஹா  மாட்டிவிட்டீங்களா!!!

கிச்சன் கேமராவை ஆன் செய்து பாா்த்தவன் மயங்கி கீழே விழுந்து விட்டான்.



மாயை தொடரும்... ✍✍


© Ramyakathiravan