...

0 views

தி ரைஸ் ஆஃப் கோஸ்ட் 1


1998 வருடம் 

24 ஏப்ரல் 

எப்பவவும் போல நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது அன்னைக்கு நம்ம ஊருல அமைதி நிலவ வேண்டும் என விக்கரமாதித்தியன் மனதில் சிந்தனை தோன்றி கொண்டு இருந்தது , திடீர் என அவருக்கு ஒரு அழைப்பு வர அந்த அழைப்பில் அவருக்குச் சில தகவல் கிடைத்தது இந்தியா மீது பலர் கண் படுகிறது எனவும் பல தாக்குதல் நடக்க உள்ளதாகவும் தகவல் வர அதும் ஆதித்தியா குடும்பம் வைத்து இருக்கும் பல தொழில்நுட்பம்மூலம் கண்காணிக்க உத்தரவு சமர்பிக்க பட்டு இருந்த நிலமையில் 

இந்தத் தகவல் அவருக்குச் சற்று சந்தேகம் தர இந்தியா ராணுவம் எல்லை மற்றும் பல இடத்தில் தான் வேலை செய்து கொண்டு இருக்கும் பொது நாம் ஏன் ஒரு டீம் உருவாக்கக் கூடாது என அவர் மனதில் ஒரு கேள்வி வர அதை ராஜா ஆதித்தன் இடம் கேட்க அவர் மனதில் இருந்த பல நாள் திட்டம் ஒன்றை அவரிடம் கூறினார் , 

அப்பொழுது கதிர் தந்தை அவருடன்  இருந்ததால் இருவரும் சேர்ந்து உருவாக்கிய இந்த டீம் யோசனை , இந்த டீம் பொறுத்த வரை அவர்களுக்கு இரு வேறு உலகம் 3 மாதம் இங்கே வேலை இருக்கும் மற்றும் ஒரு மூன்று மாதம் விடுமுறை மற்றும் நேரடி வேலை இல்லாமல் உளவாளிபோல இருக்க வேண்டும் அவர்களுக்குத் தற்காப்பு கலை மற்றும் ஆயுதங்கள் கையாளும் பயிற்சியென அனைத்தும வழங்க வேண்டும்

 அதில் இருக்கும் ஒரு நபர் குறைந்தது 5 பேருக்குச் சமம் ஆக இருக்க வேண்டும் எனக் கூறினார் , ராஜா கூறியதை கேட்ட விக்ரம் இது சரியா வருமா எனக் கேட்க எல்லாமே தயார் தான் அப்பா ஏப்ரல் 28 சரியா இருக்கும் இப்படியொரு குழு இருக்கு என யாருக்கும் தெரிய கூடாது எனக் கூறினார் நம்ம அரசாங்கம் அனுமதி நாம பார்த்துக் கொள்ளலாமெனக் கூறினார் .

ராஜா அதில் பல நிலை இருக்க வேண்டும் எனவும் நம்முடன் இணைப்பில் இருக்கும் முக்கிய குடும்பம் இதில் இருக்க வேண்டும் எனவும் அவர்களுக்குச் சம்மதம் மற்றும் இது முழுதும் நம் கட்டுபாத்தில் தான் இருக்க வேண்டும் எனக் கூறினார் 

அதற்க்கு சரியெனக் கூறிய விக்ரம் அதைத் தொடங்க எல்லா பணிகளும் செய்தார் 

ஏப்ரல் 28 1998 அன்று தான் இப்படியொரு டீம் உருவாகும் நாள் அந்த நாள் எந்தக் காரணம் இல்லாமல் இருக்க ராஜா அப்பொழுது தான் திருமணம் ஆகியது அவருக்கு அழகான மனைவி இருக்க அவர் இந்தத் தருணம் அவருடன் இருக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தார் 

வர்மா வின் அப்பா அம்மா இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள் அவர்கள் குடும்பத்தில் அவர்கள் காதல் போல் ரத்தம் தெறிக்க தெறிக்க நடந்த காதல் கதை வேறு ஏதும் இல்லை , இந்த டீம் உருவாக வர்மா வின் அம்மா தீபா ஒரு காரணாம் .

தீபா ஒரு உளவாளி அவர்கள் குடும்பத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் தான் பணிபுரிந்து கொண்டு இருந்தார் அவர் அங்கே பணி புரிவது காலையில் தான் மாலையில் அந்த ஊரில் நடைபெறும் பெரிய பெரிய சட்ட விதிமுறை செயல்கள்பற்றிய தகவல் தேடுவதிலும் காலையில் அந்த அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பி அதை மறு தினம் மொத்தமாக நிறுத்த வைப்பது தான் அவரின் வேலை 

ஒரு நாள் ராஜா ஒரு இடத்தில் இருக்க அங்கே வந்த தீபா ராஜா யாரெனத் தெரியாயமல் அவர் தான் இந்த நிறுவனத்தின் ceo எனத் தெரியாமல் அவரும் தன்னை போல ஒரு நபர் என நினைத்துக் கொண்டு அவருடன் அங்கே அமர்ந்து இருந்தார் 

அந்தக் கம்பெனி பொறுத்த வரை எல்லோருக்கும் விக்ரம் மட்டுமே தெரியும் அவர் மகன் யாருக்கும் தெரியாமல் தன்னோட முகதிரை யாருக்கும் தெரிய கூடாது என இருப்பார் ,

அப்படி ஒருநாள் இருவரும் சந்திக்கும் நிலை ஏற்பட அந்தச் சூழநிலை மிகவும் அசாதாரணமான நிலையில் இருந்தது 

மும்பையில் தான் அவர்கள் இருக்க அங்கே இருக்கும் துறைமுகம் அடுத்து இருக்கும் கடற்கரை பகுதியில் நடக்கும் தடைசெய்ய பட்ட தடயங்கள் கிடைத்து இருபதாகவும் அதை என்ன என்று விசாரிக்க யார் செல்லப் போகிறாரெனக் கேட்க ரெண்டு பேர் இங்கே இருந்து தான் போகணும் அது ரொம்ப ஆபத்தான பகுதி அந்த இடத்தில வெளிநாட்டு போதை பொருள் இருந்து பல பொருள் இங்கே கை மாறுது எனத் தெரிய வந்து இருக்கு எனத் தீபா டீம் லீடர் கூறினார்,

அதற்க்கு தீபா நான் போறேன் எனக் கூற அங்கே இருந்த ராஜா நானும் எனக் கூறினார் ராஜா என்ன தான் பெரிய இடத்தில் இருந்தாலும் இதுபோலச் சவாலான இடம் செல்ல அவருக்குப் பிடிக்கும் 

ராஜா இந்தக் கூட்டதில் புதிதாக இருப்பதால் எல்லோரும் அவரைச் சற்று வித்தியாசமாகப் பார்த்தனர் காரணம் அவர் இங்கே வந்து ஒரு வாரம் தான் ஆனது , டீம் லீடர் மேனேஜர் மட்டுமே அறிவார்கள் ராஜா யாரென அவர்கள் சரியெனக் கூற , தீபா மட்டும் சற்று தயக்கம் கொண்டு இருந்தார் 

அவர் முகம் கண்ட ராஜா நான் உங்க கூட வரது உங்களுக்குப் பிடிக்க வில்லையா எனக் கேட்க அதற்க்கு தீபா அது எல்லாம் இல்லை 

நாம போகிற இடம் ரொம்ப பிரச்சனை ஆனா இடம் அதான் யோசிக்கிறேன் எனக் கூற 

அதற்க்கு ராஜா அது எல்லாம் வேண்டாம் நாம அங்க போறோம் நீங்கச் சொல்றது மட்டும் தான் நான் கேட்பேன் எனக் கூறினான் 

என்னவோ முதல் பார்வையில் ராஜாவைப் பார்த்த தீபா அவர்மீது ஏதோ ஒரு நம்பிக்கை இருப்பதாக நினைத்தால் அவருக்கு எப்போதும் யார் தன்னுடன் வந்தாலும் சரி தான் தனியாகச் சென்றாலும் சரி எடுத்த காரியம் இதுவரை பிரச்சனை எதும் இல்லாமல் முடித்து விட்டுத் தான் வருவாள் அவள் கொண்டு வரும் தகவல் கூட அத்தனை தெளிவாக இருக்கும் அதை வைத்துக் கூட அனைவரையும் வேற எந்த ஆதாரம் இல்லாமல் பிடித்துக் கொண்டு செல்லலாம் அத்தனை தெளிவாக இருக்கும். 

அப்பொழுது விக்ரம் காதுக்கு ராஜா அந்த இடம் நோக்கித் தீபா என்னும் பெண்ணுடன் செல்லப் போகிறாளெனத் தெரிய வர எதரக்காக ராஜா இப்படி செய்கிறானென அவருக்குச் சற்று குழப்பமாக இருக்க , அவர் அந்த மேனேஜர் அழைத்து அந்த இடம் மற்றும் அங்கே இருக்கும் பிரச்சனைபற்றித் தெரிந்து கொள்ள நினைத்து அதைத் தெறித்து கொள்ள அதன் தெளிவான தகவல் கொண்டு வர உத்தரவிட்டார் 

கதவு தட்டும் ஓசை கேட்க உள்ளே வர அனுமதி அளித்தார் விக்ரம் உள்ளே வந்த மேனேஜர் அவருக்கு அனைத்து தகவல் அடங்கிய கோப்பு கொடுத்தார் அந்தக் கோப்பில் இருக்கும் அனைத்து விவரம் படித்த வுடம் விக்ரம் மனதில் சற்று நிம்மதி வந்தது தான் மகன் அதைச் சமாளித்து கொள்வானெனக் கூடச் சென்ற பெண்பற்றி விசாரிக்க அவர்கள் தீபா பற்றிய தகவல் அனைத்தையும் விக்ரம் அறையிலிருந்து தெரிவித்து கொண்டு இருந்தனர் 

தீபா இதுவரை செத்த எல்லா சாகசம் மற்றும் அவளின் திறமை எல்லாவற்றையும் அவருக்குத் தெரிய படுத்தினார்கள் மேலும் அவருக்கு அதிர்ச்சி அளித்த விஷயம் தீபா சாதாரண பெண் அல்ல அவளும் ராஜாபோல் பல தற்காப்பு கலை கற்று தெரிந்த பெண் என்றும் அவள் பல நாடுகளில் நடந்த தற்காப்பு போட்டியில் அபங்கு பெற்று அதில் முதல் மூன்று இடத்தில் வந்தது தெரிய வர அவர் சற்று வியந்து போனார் அவர் எத்தனை வருடம் இங்கே வேலை செய்கிறாரெனக் கேட்க அதற்க்கு 2 வருஷம் எனக் கூற எதற்க்கு இப்போ வரை எந்தப் பதவி உயர்வு கொடுக்காமல் இருக்கு எனக் கேட்க 

இதுவரை 5 முறை கொடுத்துப் பார்த்துட்டோம்  தீபா இன்னும் ஒரு வருஷம் இது தான் என்னோட இடம் நான் இன்னும் மக்களுக்காகச் செய்யணும் எனக் கூறியதாக அந்த மேனேஜர் கூறினார் அதைக் கேட்ட விக்ரம் இப்படியும் ஒரு பெண் உண்டா எனக் கேட்டார் உடனே அந்தப் பெண்பற்றித் தெரிந்த அனைத்தையும் வைத்து ராஜா தீபா இருவரும் சேர்ந்து அந்த இடம்பற்றிய அனைத்து தகவல் கொண்டு வந்து விடுவார்கள் என உறுதியாக நினைத்தார் . 

அதைப் பார்த்த மேனேஜர் சார் அந்தப் பொண்ணு வந்த அப்பறம் இங்க வரச் சொல்லனுமா எனக் கேட்க ஆமாமெனக் கூறினார் . 

தீபா ராஜா இருவரும் தான் அடையாளம் எல்லவற்றையும் மறைத்துக் கொண்டு அங்கே வேலை பார்க்கும் பணியாள்போல் மாறுவேடம் அணிந்து சென்றனர் , தீபா முதலில் அந்தத் துறைமுகம் விட்டு அடுத்து இருக்கும் இடத்திற்கு செல்வோம் அங்கே என்ன என்ன தெரிந்து கொள்ள முடியும் எனப் பார்ப்போம் எனக் கூறினால் 

ராஜாவும் அவள் கூறும் அனைத்திற்கும் சரியெனக் கூறினான் இருவரும் அங்கே எப்படி செல்ல என யோசித்து கொண்டு இருந்தார்கள் அவர்கள் அங்கே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்க ராஜா கையில் வைத்து இருந்த பேப்பர் புக் யில் தான் கண்ட இருவர் முகத்தைச் சில நிமிடத்தில் வரைந்து வைத்து விட்டார் அதைக் கண்ட தீபா அவர் வேகத்தைக் கண்டு சற்று மெய் மறந்து நின்று கொண்டு இருந்தால் 

அவர்கள் கண்காணிக்க அங்கே மறைந்து இருந்து எல்லாவற்றையும் தகவல் சேகரித்து கொண்டு இருக்க ஒரு சிறிய படகு மட்டும் தனியாக மிதந்து வருவது போலத் துறை முகம் தாண்டி இருக்கும் பகுதிக்குச் சென்றது அதைக் காணும் பொழுதில் இருவருக்கும் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது எனத் தோன்றியது , அதை ராஜாவிடம் கேட்ட தீபா ஆமாம் எனக்கும் ஏதோ சந்தேகமா இருக்கு அந்தப் பைனாக்குளர் கொடு எனக் கேட்க அதை வாங்கி ராஜா அந்தப் படகில் என்ன இருக்கிறது எனப் பார்த்தான் அப்பொழுது தான் தெரிந்தது அந்தப் படகு தாங்கச் செல்லவில்லை எனவும் அதை ஒரு கூட்டம் கைறு மூலம் இழுக்கிறார்கள் எனத் தெரிய வந்தது 

அவர்கள் யார் ? 

 


© அருள்மொழி வேந்தன்