...

4 views

பூ முடித்தல் வைபவம்
எங்க சங்கத் தலைவர் கண்ணழகன் அண்ணன் மகள் பிள்ளை பேத்தி பூ முடித்தல் வைபவத்திற்கு போக வேண்டும். மாலை மணி ஐந்தாகி விட்டது. குற்றால சாரலாய் விழுந்த மழை மடமடவென பெய்ய ஆரம்பித்து விட்டது. என்னங்க மழை பெய்யுது என்று போன். வரும் போது மறந்து விடாமல் பூ வாங்கிட்டு வாங்க என ஆர்டர் போட்டாள் மனையாள். அரை மணி நேர மழை நின்றது‌. என் வண்டியும் பூ கடை வாசலில் நின்றது. பூவை வாங்கி வீட்டிற்கு சென்றேன். நான் கிளம்பிட்டேன் நீங்க சீக்கிரம் கிளம்புங்கள் என சொல்லி கொண்டு என் கையிலிருந்த பூவை வாங்கி தலையில் வைக்க ஆரம்பித்தாள். கால் மணி நேரத்தில் நானும் கிளம்பினேன். மண்டபத்திற்கு கிளம்ப வெளியில் வந்தோம். மேகமாக தான் இருந்தது. பன்னீராய் தூறல் போட்டு நின்றது. ஐந்து நிமிட பயணத்தில் புட்டு தோப்பில் உள்ள மண்டபத்தை அடைந்தோம். திருமண மண்டபம் அழகாக இருந்தது. MAVMM சபைக்கு பாத்தியமானது. வாசலில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பஜன் ஒலித்தது. பரமக்குடி சண்முகம் அண்ணன் பையன் கார்த்தியிடம் பேசி விட்டு மங்களகரமான இசைக்கு நடுவே உள்ளே நுழைந்தோம். பட்டு வேட்டி சட்டையில் பேத்தி கல்யாண பூ முடித்தல் வேலையில் பரபரப்பாக இருந்தார் கண்ணழகன் அண்ணன். அம்புஜம் அக்கா மேடையில் அனைவரையும் வரவேற்று மரியாதை செய்து கொண்டு இருந்தார்கள். தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என கூட்டத்தை சுற்றி பார்த்தேன். எங்களுக்கு முன் வரிசையில் KJ மனைவியுடன் அமர்ந்து இருந்தார். ராஜ்குமார் மோடி கோட்டில் மருமகள் விசேஷத்தை முன்னின்று கவனித்தார். அவர் மனைவி மணமக்களை வாழ்த்த பூ தாம்பூலம் தட்டை கையில் வைத்து நாத்தனார் வீட்டு விழாவை சிறப்பித்து கொண்டு இருந்தார். பூ முடித்தல் வைபவம் இனிதே நிறைவுற்றது. பெரிய பெரிய மனிதர்கள் வரிசையாக மணமக்களை வாழ்த்த அணி வகுத்து நின்றனர். தங்க மயில் ரமேஷ் அவர்கள் பாலகோபாலன் செந்தில் அவர்கள் என பலர் வந்திருந்தனர். மேடைக்கு வலது புறத்தில் இசை நிகழ்ச்சி நடக்க ஆரம்பித்தது. கரோக்கி இசையில் பல்லவியில் ஜனனி ஜனனி பாடலை பாடியவர்கள் சரணத்தில் பசு தங்கம் புது வெள்ளி என அம்மா என்றழைக்காத பாடலை பிசிறில்லாமல் பாடி அசத்தினர். நம் கலாசாரம் பண்பாட்டினை சிறிதளவும் மீறாமல் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. பிறகு KJக்கு போன் செய்து வாங்க மேடைக்கு போய் வாழ்த்தி வரலாம் என்ற போது திரும்பி பார்த்து வாங்க போகலாம் என்றார். KJயும் நானும் தம்பதி சமேதராக மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தி திரும்பினோம். வழியில் அம்புஜம் அக்காவை பார்த்து வாழ்த்தி விட்டு திரும்பும் போது கண்ணழகன் அண்ணன் மருமகன் வாஞ்சையோடு அழைத்து சாப்பிட்டு விட்டு போங்கள் என்றார். அவரிடமும் அவர் மனைவியிடமும் என் மனைவியை அறிமுகப்படுத்தி விட்டு KJ அண்ணனுடன் சாப்பிட சென்றோம். டைனிங் ஹாலும் பிரமாதமாக இருந்தது. கோவை கேன்டரர்ஸ் இரவு உணவை கிளப்பி எடுத்து விட்டார்கள். விதவிதமான உணவு வகைகள். அத்தனையும் தரம். நேரு அண்ணன் பந்தியை கவனித்து கொண்டே ஒரு பலகாரத்தை ருசித்து சூப்பரா இருக்கு என சைகையால் சொல்லி கொண்டு இருந்தார். நாங்கள் உணவருந்தி விட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்து அசை போட்டு கொண்டு இருந்தேன். இரவு பத்து மணி இருக்கும் கண்ணழகன் அண்ணன் போன் செய்து நான் உங்க கூட இருந்து போட்டோ எடுக்க முடியலை. ரொம்ப சந்தோஷம் மகிழ்ச்சி என சொல்லி விட்டு என் மனைவியிடமும் விசேஷம் எப்படி இருந்துச்சு. நீங்க வந்தது மகிழ்ச்சி என்று பேசி போனை வைத்தார். எத்தனை பெரிய மனிதர். பல கோடிகளுக்கு அதிபதி. இவர் எல்லாம் நமக்கு போன் போட்டு சொல்ல வேண்டும் என்ற அவசியம் கண்டிப்பாக இல்லை. இருந்தாலும் அனைவரையும் விசாரித்து அரவணைத்து செல்லும் எங்கள் அண்ணனின் உயர்ந்த பண்பையும் காமராசரை போல் எளிய மனிதராக வாழும் அவரின் குணமும் செயலும் போற்றுதலுக்கு உரியது. அண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை. அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.