...

8 views

05) இமைக்கா நொடிகள்.
அத்தியாயம் 05

சூரஜ் அந்த paintingஐ எடுத்துக் கொண்டு ஒரு கடைக்கு சென்றான்.

அங்கு இதே போல் இன்னும் ஒரே ஒரு painting மட்டும் இருந்தது.

சூரஜ்- நான் ஒரு detective. ஒரு caseக்காக ஒரு information வேணும். இந்த மாதிரி எத்தன paintings வச்சுருக்கிங்கன்னு சொல்றிங்களா?? என்று கூறி காண்பித்தான் இவன்.

அவர்- இது மாதிரி ரெண்டே ஒன்னே ஒன்னு தான் sir இருக்கு.

சூரஜ்- இது இந்த கடைல வாங்குனதா??

அவர்- ஆமா sir. எங்க கடை seal இருக்கு.

சூரஜ்- அப்போ, இது யார் வாங்குனாங்கன்னு சொல்லுங்க...

அவர் computerஇல் எதையோ தேடி விட்டு நிமிர்ந்து "இத 'Lucas Anderson'ன்றவங்க வாங்கிருக்காங்க sir.

சூரஜ்- அவங்க address கிடைக்குமா.. என்று கேட்கவும் அவர் "இந்தாங்க sir.. customer details எதையும் மத்தவங்களுக்கு குடுக்க கூடாது. ஆனாலும் தரேன். அதுக்கு காரணம், நீங்க detectiveன்றதால மட்டும் தான்" என்று கூறி கொடுத்தார் அவர்.

இவனும் அந்த addressஐ வாங்கி கொண்டு சென்று விட்டான்.

*
*

இங்கு Lucas அமர்ந்து phone நோண்டிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு அந்த painting என்றால் அவ்வளவு பிடிக்கும். அது காணாமல் போனதில் வருந்தியவன், அது வேறு எங்கையாவது கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறான்.

அந்த paintingஇன் அர்த்தமே அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

'என்னை தோற்க்கடித்து நீ வெற்றி பெற்றாலும், என்றாவது ஒரு நாள், நான் உன்னை வென்றிடுவேன்..' என்ற அர்த்தமாகும்..

இது பிடித்து போய் தான், அவன் அதை வாங்கினான். ஆனால், நேற்றுக்கு முந்தின நாள், அதை யாரோ திருடி விட்டார்கள். அதற்கு இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்தவன், இப்போது தான் எழுந்து அமர்ந்து, வேறொரு paintingஐ தேடிக் கொண்டிருக்கிறான்..

சரியாக அந்த நேரம் பார்த்து, Calling bell அடிக்கும் சத்தம் காதை கிழித்தது.. இவன், வெளியே நின்றிருந்தவரை மனதில் நல்ல நல்ல வார்த்தைகளால் திட்டிக் கொண்டே சென்று கதவை திறந்தான். அங்கு மனிஷா நின்றிருந்தாள்.

Lucas- யார் நீங்க. என்ன வேணும்?? என்று கேட்கவும் இவள், அவன் முக்த்திலேயே ஒரு குத்து விட்டாள்‌. அவன் மயங்கி சரிந்து விட, அவனை தூக்கிக் கொண்டு சென்று விட்டாள் அவள்.

*
*

சூரஜ், Lucasஇன் வீட்டிற்கு வந்து பார்த்தால், அவன் அங்கு இல்லை. யாரோ அவனை கடத்தி சென்றது அவனுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தது. Mat கசங்கி போய் இருந்தது. கதவுக்கு அருகில் இருந்த சுவற்றில், இரத்தக் கறை இருந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டே நின்றவனின் கண்களில் விழுந்தது அந்த painting. அதை கையில் எடுத்து பார்த்தான். இது வெரும் Xerox மட்டும் தான் என்று புரிந்து கொண்டான் இவன். அதையும் எடுத்துக் கொண்டு, முன்பு சென்ற கடைக்கே சென்றான்.

அங்கு வேறொரு பெண், இதே paintingஐ வைத்து, address வாங்கி கொண்டிருந்தாள்.

இவன் அவர் கூறிய addressக்கு சென்றான்.

*

இங்கு 'Olivia Emerson' தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

Olivia- Sophia.. Miaவோட boyfriend பேரு என்ன?? என்று கேட்டாள்.

Mia- என்ன எதுக்கு டி இழுக்குற?? நான் என்ன பண்ணேன்??

Sophia- நீ என்ன பண்ணியா?? நீ என்னோட boyfriendஅ பத்தி கேக்கல.. என்று கத்தினாள்.

Mia- அதுக்கு எதுக்கு அவ கேக்குறா??

Olivia- அது... இவ தான் கேக்க சொன்னா.. என்று கூறவும், Mia Sophiaவை முறைத்தாள்..

Olivia Emerson, Sophia Kyle, Mia Beverly மூவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய தோழிகள்.

Olivia Emerson:-

இவள் தாய் Zoey Emerson, தந்தை David Emerson.

இருவருமே ஒரு விபத்தில் இறந்து விட, அதன் பின்னர் நண்பர்கள் தான் இவளுக்கு தாயும் தந்தையும்.
இவளின் boyfriend தான் Lucas Anderson.

Sophia Kyle:-

இவளின் தாய் Stella Kyle. தந்தை Cooper Kyle. அவர்கள் இருவருக்கும் இவள் எப்படி இருக்கிறாள் என்பதை பற்றியெல்லாம் கவலையே இல்லை. அவர்களுக்கு பணம் மட்டும் தான் முக்கியம். பணத்தை கொடுத்தால் இவள் சந்தோஷமாக இருந்து விடுவாள் என்ற எண்ணம் அவர்களுக்கு.

Mia Beverly:-

இவள் தாய் Elena Beverly, தந்தை Parker Beverly.‌ இவர்கள் இருவரும் அவர்களது மகனுடன் Americaவில் வசித்து வருகிறார்கள்.

அப்படியே நேரம் கடந்தது.. அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. Sophia தான் சென்று கதவை திறந்தாள். அங்கு, சூரஜ் நின்றிருந்தான்.

Sophia- யார் நீங்க.. என்ன வேணும் உங்களுக்கு??? என்று கேட்டாள்.

சூரஜ்- Olivia Emerson?? இவளை கேள்வியுடன் நோக்கினான்.

Sophia- அவளோட boyfriend கூப்டதா சொல்லி இப்போ தான் கிளம்புனா.. என்றாள்.

சூரஜிற்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது. தான் வந்து சேர்வதற்குள் வேரு யாரோ வந்து அவர்களை கூட்டி செல்கிறார்கள்‌. அது யார் என்று தன்னுள் கேட்டுக் கொண்டே வெளியேறினான் அவன்.

*
*

இங்கு, Lucasஉம், Oliviaவும் கைகள் கட்டப்பட்ட நிலையில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.

நிஷா- சொல்லுங்க.‌.. எதுக்காக அவன கொண்ணிங்க?? என்று கோபத்துடன் கேட்டாள்.

Lucas- நாங்க எதுக்கு Liamஅ கொல்லனும்??

நிஷா- நீங்க Liamஅ தான் கொன்னிங்கன்னு நான் சொல்லவே இல்லையே.. அப்போ உண்மையாவே நீங்க தான் கொண்ணிங்களா?? என்று, அவள் கையில் இருந்த பேனாவை சுழற்றிக் கொண்டே கேட்டாள்.

Oliviaவின் முகம் வியர்த்துக் கொட்டியது.

நிஷா- உன்னக்கு ஏன்மா இப்டி வேர்த்துருக்கு.. எதாவது தப்பு பண்ணியா?? என்று சிறு குழந்தையை விசாரிப்பது போல் விசாரித்தாள்.

Lucas- நாங்க எல்லாத்தையும் சொல்லிடரோம். நாங்க கொலை பண்ணல.. என்றான்..

நிஷா- சரி.. சொல்லுங்க.. என்றவள், Chair போட்டு அமர்ந்து கொண்டாள்.

*
*

விஷால் தான் பாவம் போல் அமர்ந்து இருந்தான்.

இன்னும் பல பேர் இருப்பது நன்றாகவே தெரிந்தது. இவனும், அப்படியே அமர்ந்து இருந்தான்.

சிறிது நேரத்தில், அவர்கழளேக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்தனர்.

அதை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே அமர்ந்திருந்தான்.

அப்போது ஒருவர் அவனை தாண்டி செல்ல, அவரை அழைத்தான்.

விஷால்- எத்தன டோக்கன் sir மமுடிஞ்சுருக்கு?? என்று கேட்கவும், அவர், "300" என்று கூறி விட்டு சென்றார். இவனோ மலைத்து போய் அமர்ந்து விட்டான். இன்னும் 1000த்திற்கும் மேல் இருப்பார்கள். இப்படியே எத்தனை நேரம் அமண்ந்திருப்பான்.. சலித்துக் கொண்டே அமர்ந்து இருந்தான்‌ விஷால்.

*
*

* நிஷா எதறக்காக இருவரையும் கடத்தினாள்‌. இவளுக்கு எப்படி, அந்த paintings கிடைத்தது..

பார்ப்போம்...


© Ashwini