...

20 views

எது எல்லை?
இராமகிருஷ்ண மடத்தில் ஒரு முறை லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு... முதல் கட்டமாக நிறைய அளவில் பூந்தி தயார் செய்து மலை போல் குவித்து வைத்து... அதைச் சுற்றி அமர்ந்து.. சீடர்கள் லட்டு பிடித்துக்கொண்டிருந்தார்கள்

அதே நேரத்தில்...
அந்த வேலைக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது எறும்புத்தொல்லை...

சீடர்கள் குருவிடம்...
ஏதாவது மருந்தைப் பயன் படுத்தி எறும்புகளை அழித்து விட வேண்டினர்...

குரு உயிர்களைக் கொல்ல அனுமதிப்பாரா?...
மறுத்தார்...
கூடவே... வேறு ஒரு யோசனையும் சொன்னார்...

பூந்தி மலையைச் சுற்றி
ஒரு குறிப்பிட்ட அளவில் வட்டமாக பூந்தியைக்கொண்டு வளையம் போட்டுக் கொள்ளுங்கள்...
எறும்புகள் அந்த பூந்தி வளையத்தோடு நின்று விடும்.
நீங்கள் நிம்மதியாக வேலையைத் தொடரலாம் என்று யோசனை சொன்னார்

சீடர்கள் அதன்படி செய்தனர்

கொஞ்ச நேரம் கழித்து..
பணியைப் பார்வையிட குரு வந்தார்...
எறும்புகள் அந்த பூந்தி வளையம் வரை வந்து...திரும்புவதைப் பார்த்து..
மெலிதாய்ப் புன்னகைத்து விட்டு.. இப்படிச் சொன்னார்..

"இந்த எறும்புகள் போலத் தான் மனிதர்களும்..
எது பேரின்பம் என்று தெரியாமல்..
கிடைக்கும் சின்னச் சின்ன
சந்தோஷங்களில் திருப்தி கொண்டு... இறையருள் எனும் பூந்தி மலையை அடையாமலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்...."

இந்தச் சம்பவத்தை
படித்த போது அடியேனுக்கு ஒரு விஷயம் தோன்றியது...

இது போன்ற சமூகத் தளங்களில் தங்கள் படைப்புகளை வெளியிட்டு அவ்வப்போது கிடைக்கும் லைக்ஸ் மற்றும் கமெண்ட் களில் திருப்தி அடைந்து விடாமல்... தங்கள் திறமையை அச்சு ஊடகங்களில்...
அதாவது..
வார,மாத இதழ்களில் வெளியிட்டு
புகழ் பெற வேண்டும் என்பதே அது...

© வேல்முருகன் கவிதைகள்