...

6 views

காதல் பயணம்-3
காதல் பயணம்-3

அஸ்வினும் சந்தியாவும் ஒரே பேருந்தில் மாலை வீட்டிற்கு செல்கின்றனர். அஸ்வின் சந்தியாவிடம் பேசியே ஆக வேண்டும் என்று பேருந்து ஏறுகிறான்.பேருந்து மிகவும் கூட்டமாக இருந்தது. சந்தியா பேருந்தின் நடுவில் நிற்கிறாள்.அஸ்வின் பின் பகுதியிலிருந்து நடு பகுதிக்கு கூட்டத்தில் அலைமோதி வருகிறான். அஸ்வின் என்று ஒரு பெண் கூப்பிடுகிறாள்.திரும்பி பார்த்தால் அஸ்வினை ஒருதலையாக காதலித்து வரும் கீர்த்தனா. அவள் அஸ்வினிடம் பேசுவதற்காக கூப்பிடுகிறாள். அஸ்வின் கீர்த்தனாவை புறகணித்து சந்தியாவை நோக்கி செல்கிறான்.

இருப்பினும் அவள் விடவில்லை. அஸ்வினிடம் விடாமல் பேசி கொண்டே இருந்தாள். அஸ்வின் எப்படியாவது பேசி விட வேண்டும் என்று கீர்த்தனாவை புறக்கணித்து செல்கிறான். சந்தியாவின் பேருந்து நிறுத்தம் வந்தது. சந்தியா பேருந்து விட்டு இறங்கி வீட்டிற்கு விரைந்தாள்.

அஸ்வின் கீர்த்தனாவை பார்த்து கோபம் கொண்டான். பின் நாளை காலை கண்டிப்பாக பேசி விட வேண்டும் என்று எண்ணினான்
பின் அஸ்வினின் பேருந்து நிறுத்தம் வந்தது. அவன் பேருந்து விட்டு இறங்கி வீட்டிற்கு சென்றான். வீட்டிற்குள் சென்று அம்மா குப்பிடுவதை கூட கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் சென்றான். அன்று இரவு கூட வெளியில் வராமல் காலையில் சந்தியாவை கண்டதை நினைத்து கொண்டு இருந்தான். பின் அம்மா சென்று அஸ்வின் அறையை திறந்து அப்பா வந்து விட்டார் சாப்பிட வா என்று கூப்பிட்டார்.

அஸ்வினும் சாப்பிட சென்றான்.அங்கு கவனம் சாப்பாடு மேல் இல்லை சந்தியாவின் கண்கள் மீது இருந்தது. பின் சிறிது நேரத்தில் எழுந்து தன் அறைக்குள் சென்றான்.
அஸ்வினின் அம்மா அப்பா விற்கு ஒன்றுமே புரியவில்லை. சரி உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் காலையில் சாப்பிடுவான் என்று இருவரும் எண்ணி கொண்டனர். அன்று இரவு முழுவதும் சந்தியாவை பற்றியே எண்ணி கொண்டிருந்தான்.

அங்கு சந்தியா இன்று காலை சென்ற பேருந்தில் இனி மேல் செல்ல வேண்டும் கல்லூரிக்கு நேரம் சரியாக இருக்கிறது என்று தன் தந்தையிடம் கூறினாள். அதற்கு முதலில் சீக்கிரம் எழ வேண்டும் என்று கேலியாக கூறினார் சந்தியாவின் தந்தை. சந்தியா தன் தந்தையிடம் எனக்கு கல்லூரியில் ரம்யா என்ற தோழி நெருக்கமானாள் என்று கூறினாள். அவளுக்கு அஸ்வினின் ஞாபகமே இல்லை.......

மறுநாள் காலை சந்தியா அதே பேருந்தில் செல்வாளா?
அஸ்வின் சந்தியாவிடம் பேசுவானா?

அடுத்த பகுதியில் காண்போம்!...




© மனதின்_காதலி