...

6 views

Hello

இன்றைய இளைஞர்களில் அதிக படியானவர்கள் பி பீ ஓ , டாடா என்ட்ரீ போன்ற வேலைகளை பல மாதிரியான வேலை தலைப்புகளில் செய்து வருகின்றனர்... அதில் பி பீ ஓ இன்றைய பட்டதாரிகள் பலரும் வேலை பார்க்கும் தளமாகும். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காதவர்கள் பலரும் தேர்ந்து எடுப்பது இந்த துறையை தான். இன்றைய டிஜிட்டல் உலகில் டிஜிட்டல் மார்கெட்டிங் என்பதும் மக்களுக்கு பழகி போன ஒன்று தான். பொருட்கள் அல்லாது கிரெடிட் கார்டு, லோன், ரியல் எஸ்டேட், கல்லூரி அட்மிஷன் போன்ற பல சேவைகளும் மக்களுக்கு அழைப்புகள் செய்து இன்றைய பட்டதாரி BPO இளைஞர்கள் விரிவாக விளக்கி வாடிக்கையாளர் களை அந்த பொருளையோ சேவயையோ வாங்க செய்ய வேண்டும். அதற்கான target மாதந்தோறும் அவர்களுக்கு அலுவலகங்களில் வழங்க படுகின்றன
காலை தொடங்கி அவர்கள் மாலை வேலை நேரம் முடிந்தும் அவர்களின் அன்றாட target முடிவு பெறாமல் அவர்களை வெளியே விடுவதில்லை.இவ்வளவு வேலை பார்த்தாலும் அதிக பட்ச சம்பளம் அத்தியாவசிய தேவைளை பூர்த்தி செய்ய தான் சரியான தாக இருக்கும்.
வாடிக்கையாளர்களை நேரடியாக பார்க்காமல் அலைபேசியில் சேவைகளை செய்வதால் இதில் நம்பிக்கை பற்றிய சிக்கல்கள் ஏராளம்,இது இல்லாமல் நேரம், மேல் அதிகாரி, சக ஊழியர்கள்,, போட்டி, லீட் திருட்டு,மாத target என இவர்களின் பிரட்சனைகளை சொல்லிகொண்டே போகலாம் . எல்லா வேலைகளிலும் இருக்கும் பிரச்சினை இருக்க தான் செய்யும். அதை பொறுத்து கொண்டோ கண்டு கொள்ளாமல் இருந்தோ தான் வேலையை தக்க வைத்து கொள்கின்றார்கள்.ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றோ இரண்டோ முறை தான் இந்த மார்கெட்டிங் கால்கள் வரும். வாங்க ஆர்வமில்லாமல் நேரம் போக விரிவாக கேட்பவர்கள் ,பெண் ஊழியர் என்றால் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை வழிந்து கொண்டு கேட்பவர்கள்,தர குறைவாக பேசுபவர்கள் என தினந்தோறும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் இன்று வரை குறையவில்லை, மக்கள் இது போன்ற கால்களில் பேசுவதும் மனிதர்கள் தான் என்பதை மனதில் வைத்து தர குறைவாகவும் கொச்சயான வார்த்தைகள் உபயோகிக்காமலும் மனம் பூண்படாமல் பேசுவதும் நாம் அவர்களுக்கு செய்யும் ஆக குறைந்த உதவியாக இருக்கும்.
© aadhirai