உன்னோடு நான் இருப்பேன்
அத்தியாயம்-1
ப்ரியாவின் அறிமுகம்
மைலாபூரில் காலை எட்டு மணி அளவில் சூரிய ஒளி பிரகாசமாக ஒளிந்து கொண்டிருக்க ஆட்கள் நடமாட்டம் நிரம்பி இருந்து.மெயின் ரோட்டின் மூன்றாவது குறுக்கு சந்தில் ஒரு அழகான சின்ன இல்லம். அதன் சமையலறையில் காஃபி ஆற்றியபடி,ப்ரியா ஏழுந்திரி என்று குரல் கொடுத்தார் ஜானகி. ஆற்றிய காஃபியை ஹாலில் அமர்ந்து நாழிதள் படித்து கொண்டிருக்கும் தன் கணவன் மோகனிடம் கொடுத்து விட்டு ,ப்ரியாவின் அறையை நோக்கி சென்றார். ப்ரியாவின் தோழில் மெதுவாக ஒரு அடியை வைத்தபடி மணி எட்டாச்சு இன்னும் என்னடி தூக்கம் ஒழுங்கா எழுந்திரி என்று அதட்ட,
அம்மா கொஞ்சம் நேரம் என்று பெட்ஷிட்டை இழுத்து போத்தி படுத்தாள் ப்ரியா...
அது சரி...எழுப்பும்போது எழுந்திரிக்காத அப்பறம் ஆஃபீஸ்க்கு டைம் ஆச்சுனு கால்ல சக்கரத்தை கட்டிட்டு நில்லு... ஒழுங்கா எழுந்திரிடி என்று அதட்ட...
ஜானகி என்னை டிஸ்டர்ப் பண்ணாம கொஞ்சம் நேரம் தூங்கவிடு, என்று ப்ரியா சொல்ல...
சொல்வதை கேட்காமல் அடம்பிடிக்கும் மகளை சலிப்புடன் பார்த்தவர்... நானும் பாக்குறன்டி எத்தனை நாள்தான் என்கூட மல்லு கட்டிட்டு இப்படி தூங்குறனு... புருஷன் வீட்டுக்கு போனதும் மாமியார் ரெண்டு தட்டு தட்டுனா தெரியும்டி இந்த அம்மாவோட அருமை என்று புலம்ப
அதை கொஞ்சம்கூட காதில் வாங்காத ப்ரியா... ம்.ம் அதெல்லாம் ஆனதும் பாத்துக்காலாம் நீ போய் உன் வேலய பாரு ஜானு இங்க நின்னு டிஸ்டர்ப் பண்ணாத என்று நக்கலாக கூற...
அழுகாத குறையாய் தன் தலையில் அடித்த ஜானகி... உன்னை கட்டிக்கிட்டு எவன் தலை உருள போகுதோ பாவம்டி அவன் என்று புலம்ப...
அவசரமாக முகத்தில் இருந்து போர்வையை விளக்கியவள்... ஏய் ஜானகி என் புருஷன அவன் இவனு சொல்லாதனு எத்தனை தடவ சொல்லிருக்க... உன்ன என் அப்பா சமாளிக்கும்போது என்னை அவரு சமாளிக்க மாட்டாரா என்று சொல்ல...
ம்க்கூம் இந்த வாய்க்கு ஒன்னும் குறச்சல் இல்ல... பெத்த அம்மாவ பேர் சொல்லி கூப்டுட்டு வராத எவனுக்கோ மரியாதை கொடுக்காம இருக்குறதுதான் இங்க கொறச்சல் என்று சளித்து கொண்டபடி அறையை விட்டு வெளியேற,
சற்று முன்பு மோகனிடம் கொடுத்த காஃபி குடிக்காமல் அப்படியே டேபுளில் இருந்தது. அதை கண்டு இன்னும் எரிச்சலான ஜானகி மகளின் கோபத்தை தந்தையின் மீது காட்ட ஆரம்பித்தார்
நீங்க இப்ப பேப்பர் படிக்கலனு யார் அழுதா? அப்பாவும் பொண்ணும் ஒருத்தர் ஒருத்தர மிஞ்சிக்க மாட்டிங்களே... நாளைல இருந்து நானும் எட்டு மணி வரை தூங்குற இல்ல பேப்பர் படிச்சுட்டு உக்கார்ர யார் யாருக்கு என்னென்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்க என்று கோபமாக சொல்ல...
தன் மனைவியை பார்த்து புன்னகை புரிந்த மோகன், ஜானு இப்ப எதுக்கு தேவை இல்லாம கத்திட்டு இருக்க? உனக்கு அவள பத்தி தெரியாதா... நீ என்னதான் எழுப்புனாலும் அவ எழுந்திரிக்க நேரத்துலதான் எழுந்திரிப்பா... சும்ம பொண்ண தொந்தரவு பண்ணாத என்று கூற
அவரை ஏடாகூடமாக முறைத்த ஜானகி,வயசு பொண்ண செல்லம் கொடுத்தே கெடுத்து வைங்க... அவ இப்படி சொல்றத கேக்காததுக்கு காரணமே நீங்கதான் என்று புலம்பியபடியே கிச்சனுக்குள் செல்ல
ம்க்கூம் சொல்றத கேக்காதது இங்க பொண்ணு மட்டுமா? என்று மோகன் முணுமுத்தது ஜானகியினா காதில் அறைகுறையாக விழுந்தது...அவரை திரும்பி பார்த்து முறைத்தவர் என்னது என்ன சொன்னிங்க? என்று அதட்ட
மோகன் சமாளிக்கும் விதமாக ஒன்னும் இல்லம்மா... காஃபி சூப்பரா இருக்குனு சொன்ன என்று பிட்டை அடித்து விட்டார்...
ம்.ம். கேட்டுச்சு என்று முறுக்கியபடி கிச்சனில் நுழைந்தார் ஜானகி...
சிறுது நேரத்தில் தயாராகி அறையில் இருந்து வெளியேறிய ப்ரியா மோகனை பார்த்து குட்மார்னிங்ப்பா என்று கூறி விட்டு அம்மா டிஃபன் என்றாள் கிச்சனை பார்த்தபடி...
மார்னிங் ப்ரியாம்மா... ஆஃபீஸ்க்கு கிளம்பியாச்சா? என்று மோகன் கேட்க...
ம் ப்பா என்றாள் புன்னகையோடு...
மகளின் தலையை மென்மையாக வருடியவர், என்னடா ஒருமாதிரி டல்லா இருக்க ஆஃபீஸ்ல ரொம்ப வேலயா?
ஆமாப்பா ப்ராஜெக்ட் வர்க் போயிட்டு இருக்கு,லேட் நைட் வேலை... அதனாலதான்
ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணியெல்லாம் வேலை செய்யாத ப்ரியா... உடம்ப பாத்துக்கோ என்று அக்கரயாக சொல்ல...
சரிப்பா நான் பாத்துக்குற நீங்க கவலபடாதிங்க என்று புன்னகைத்தாள்...
ஜானகி டிஃபன் எடுத்து வந்து ப்ரியாவிடம் ம்... என்று முன்னே வைத்துவிட்டு நிற்க... தன் அன்னையின் கோபம் அறிந்தவள் அமைதியாக உண்ண ஆரம்பித்தாள்...
சில நிமிடம் அங்கே மௌனம் நிகழ... ப்ரியா மோகனை பார்த்தபடி ,அப்பா ஜானகி கையால சாப்ட கொடுத்து வெச்சுருக்கனும் இல்லப்பா என்னா டேஸ்ட் என்னா டேஸ்ட் என்று புகழ...
தன் காலரை தூக்கி விட்ட மோகன் பொண்டாட்டி யாரோடது என்றார்...
இருவரையும் முறைத்த ஜானகி,போதும் போதும் அப்பாவும் மகளும் ஐஸ் வைக்காதீங்க எனக்கு சலி பிடிச்சுரபோது என்று உதட்டை சுழிக்க...
கோபமாக எழுந்த ப்ரியா... எனக்கு டிஃபனும் வேணா ஒன்னு வேணா என்று எழுந்து செல்ல பார்க்க அவள் கரத்தை இறுக்கமாக பற்றிய ஜானகி,என்னாச்சு ப்ரியா ஏன் சாப்டாம எழுந்திருச்சுட்ட என்று கேட்க
கோபமாக மோகனை பார்த்தவள் அப்பா என் கைய விட சொல்லுங்க நான் போகனும் என்றதும் மோகனும் பதறியபடி என்னாச்சு ப்ரியாம்மா என்றார்...
பின்ன என்னப்பா? என் அம்மாக்கு,உங்க ஜானகிக்கு ஐஸ் வைக்கனும்னு என்ன அவசியம் இருக்கு? அப்படியும் நம்ம வெச்சா கரையிர ஆளா இவங்க என்று கேட்டபடி கண்ணடிக்க.... இப்போது அவளின் குறும்பை அறிந்த மோகன் ஆமா ஆமா என் ஜானகிக்கு யாரலும் ஐஸெல்லாம் வைக்க முடியாதுப்பா என்று அவரும் மகளோடு கூட்டு சேர்ந்து விடைடார்...
ப்ர்யாவின் காதை செல்லமாக திருகிய ஜானகி ஏய் வாயாடி எங்க இருந்துடி உனக்கு இந்த நாடமெல்லாம் வரும்?... ஒரு நிமிஷத்துல என்னையே பயபட வெச்சுட்ட என்று செல்லமாக அதட்டி சிரிக்க... அன்னையின் முகத்தில் புன்னகையை கண்டதும் ப்ரியாவும் சிரித்தபடி ம்... இந்த ஸ்மைல்காகதான் இந்த நாடகமே... என் ஜானு சிரிக்கும்போது செம அழகா இருப்பாங்க அதனாலதான் என்று கண்ணடிக்க
இன்னும் சத்தமாக சிரித்தவர்... போதுன்டி ஒழுங்கா உக்காந்து சாப்டு என்று சொல்ல...
அவளும் ஓகே என்று அமர்ந்து உணவில் கவணம் செலுத்தினாள்...
மோகன் ப்ரியாவின் காதருகே சென்று எப்படிடா ஒரே அடியா கௌத்துட்ட என்று கிசுகிசுப்பாக கேட்க...
எல்லாம் உங்க ட்ரெயினிங்தாப்பா என்று கண்ணடித்தாள்...
மோகனும் தலையை ஆட்டியபடி ம் நடத்து நடத்து என்றார்...
அலுவலகம் செல்ல புரபட்ட ப்ரியா ஸ்கூட்டியில் அமர்ந்தபடி பாய்ப்பா பாய்ம்மா என்று கை அசைக்க... பத்ரமா போயிட்டு வாம்மா என்று மோகன் சொல்ல, ஈவ்னிங் வீட்டுக்கு சீக்ரம் வந்துரு என்றார் ஜானகி...
ஓகே என்று சொல்லி விட்டு தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து அலுவலகம் நோக்கி பயணித்தாள் ப்ரியா....
ப்ரியா... இவள்தான் நம் கதையின் கதாநகயகி... மோகன் மற்றும் ஜானகியின் ஒரே செல்ல மகள்....அன்பானவள்... அழகும், அறிவும் ஒன்று சேர்ந்த காவியம்... எந்த ஒரு விஷயத்தையும் மற்றவரின் மனம் நோகாமல் செய்பவள்... யாராக இருந்தாளும் தன் பேச்சாலும் புன்னகையாலும் தன் கை பைக்குள் போட்டு கொள்பவள்...
தி-நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்க,பல வாகனங்கள் நகர முடியாமல் மாட்டி கொண்டிருந்தது... அதில் ஆதித்யாவின் காரும் ஒன்று...
கையில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடி தன் ட்ரைவர் கதிரிடம்...
கதிர் என்னாச்சுனு கொஞ்சம் கீழ இறங்கி பாருங்க... மீட்டிங்கு வேற லேட் ஆச்சு என்று சொல்ல...
அவனும் சரி சார் என்று காரில் இருந்து இறங்கி முன்னே சென்று பார்த்தான்... அங்கே ப்ரியா ஒரு இளைஞனிடம் வாதடி கொண்டிருந்தாள்... அவள் அருகில் ஒரு சிறுவன் முழங்காலிலும் நெற்றியிலும் ரத்தம் வழிய நின்று அழுது கொண்டிருந்தான்...
ஏய் இந்த பய்யன ஒழுங்கா ஹாஸ்ப்பிடல் கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் பண்ணு இல்ல என்று ப்ரியா சொல்ல...
அந்த இளைஞன் குறுக்கிட்டபடி... முடியாதுடி என்னடி பண்னுவ என்றான் திமிராக...
ப்ரியாவுக்கு கோபம் அதிகரிக்க... ஏய் மரியாதையா பேசு வாடி போடின்ன நடக்குறதே வேற ...
அவன் அசராது அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்...
ஏய் உனக்கெல்லாம் என்னடி மரியாதை கொடுக்க வேண்டி கிடக்குது நீ என்ன பெரிய இவளா? ஆமா நான் யாருனு தெரியுமா? எங்க அப்பா யாருனு தெரியுமா? நீ இப்படி பேசறதெல்லாம் அவருக்கு தெரிஞ்சது என்று அவன் பாட்டிற்கு தலைகணம் பிடித்து பேச... ப்ரியாவின் கோபம் தலைக்குமேல் ஏறி இருந்தது...கடைசியாக பொறுமையை இழந்தவள் விட்டாள் ஒரு அறை கண்ணத்தில் பளாரென்று.
அவள் அறையில் அவன் கண்ணம் எரிய அதை பற்றியபடி சுற்றியும் முற்றியும் பார்த்தான் அந்த இளைஞன். அங்கிருந்த எல்லோரும் அவனையே பார்த்தபடி இருந்தனர்...
கோபத்தை கட்டு படுத்த முடியாத ப்ரியா அவனை கத்த ஆரம்பித்திருந்தாள்... பைக்க கண்ணா பிண்ணானு ஓட்டுனதும் இல்லாம,ஸ்கூல்க்கு போற பய்யன இடிச்சுட்டு இப்ப ஹாஸ்ப்பிடல்க்கு கூட்டிட்டு போக சொன்னா திமிரா பேசுறியா? நீ யாரா இருந்தா எனக்கு என்ன? ஒழுங்கா இந்த பய்யன கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் பண்ணி கொடு இல்ல நடக்குறதே வேற... என்று அதட்டியவள் அருகில் இருந்த ஆட்டோவை அழைத்து அந்த சிறுவனையும் இளைஞனையும் அமர வைத்து விட்டு தன் ஸ்கூட்டியை எடுக்க சென்றாள்.
வாகனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நகர... கதிர் அவசரமாக வந்து காரை ஸ்டார்ட் செய்தான்.
என்னாச்சு கதிர் என்ன பிரச்சனை ஆதி கேட்க...
ஒரு பைக்கார ஸ்கூல் போர பய்யன இடிச்சுட்டு ட்ரீட்மென்ட் பண்ண கூட்டிட்டு போக மாட்டனு அடம் பிடிச்சுட்டு இருந்தா... ஒரு பொண்ணுதான் அவன சம்மதிக்க வெச்சு கூட்டிட்டு போகுது என்று சொல்ல
ஆதி பதறியபடி,ஐயோ அந்த சின்ன பயனுக்கு ஒன்னும் இல்லயே என்றான்...
காயம் அவ்வளவு ஆழம் இல்லனு நினைக்கிற சார் என்று கதிர் சொல்லி கொண்டு இருக்க... ஆதியின் கார் ப்ரியாவை கடந்து சென்றது.கதிர் ப்ரியாவை காட்டியபடி... அதோ அங்க ஸ்கூட்டில உக்காந்து ஆட்டோ ட்ரைவர் கூட பேசிட்டு இருக்கே அந்த பொண்ணுதான் சார்....பைக்காரனுக்கு விட்டது பாருங்க ஒரு அறை அவ்வளவு நேரம் திமிரா...