...

1 views

கண்ணோடு மணியாய் 2
"ஜீவி இன்னும் எவ்வளவு ஆகும் . சீக்கிரம் கிளம்பி வா... அந்த டப்பா மூஞ்சில எத்தனை சுண்ணாம்பு அடிச்சாலும் அது டப்பா மாதிரி தான் இருக்கும் "", என்று கேலி செய்தான் அவளின் உயிர் தோழன் வினய்...

"ச்சீ பே .",. என அவனை இழுத்துக் கொண்டு," அம்மா , அப்பா , சவி எல்லாருக்கும் பாய் போயிட்டு வரேன் ", என்று கூறி விட்டு தன் அப்பத்தாவின் அருகில் அமர்ந்து அவருடைய சுருக்கு பையில் சில பல நோட்டுகளை சுட்டவள் அவருக்கு டாட்டா காட்டி விட்டு வினய் உடன் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றாள் அவனின் பைக்கில்...

பொள்ளாச்சி டூ கோயம்புத்தூர் பஸ் நிறுத்தம்...
அதில் கோவை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.. அனைவரிடமும்
சிரிப்புடன் டாட்டா சொன்னவள் வினயிடம் கண்ணீர் மழையை பொழிந்தாள்..

"அம்மா அப்பா சவி எல்லாரையும் பாத்துக்கோ டா.. உன்னையும் தான் மந்த்லி ஒன்ஸ் கோயம்புத்தூர் வா", என்று கூறியவளை சிரிக்க வைக்கும் பொருட்டு,

"அது சரி, என்னோட வேலை வெட்டிய விட்டுட்டு உன்ன பாக்க நான் வரனுமா போ டி.", . என்றவனுக்கும் கண்ணில் நீர் திரை படர்ந்தது...

பிறந்தது முதல் ஒன்றாக இருந்தவள் இன்று தன்னை விட்டு பிரிந்து செல்கிறாள் என எண்ணியவனுக்கும் கவலை அதிகரித்தது...

வாட்டர் பாட்டிலும் பிஸ்கட் பக்கெட்டும் வாங்கி தந்தவன் அவளிடம் தலை அசைக்க அவளும் தலை அசைக்க பேருந்து கோயம்புத்தூரை நோக்கி புறப்பட்டது...

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தவன் எண்ணம் இரண்டு நாட்களுக்கு நடந்த நிகழ்வை அசை போட்டது...

"அப்பா எனக்கு வேலை கிடைச்சு இருக்கு", என்று ஆனந்தமாய் சொன்னாள் ஜீவி..

"ரொம்ப சந்தோசம் மா.. என்ன வேலை", என்றார் ராஜ் (ஜீவியின் தந்தை).

"ஐடி கம்பெனில பா , திங்கள் கிழமை ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க"...

கல்லூரியில் வந்த கேம்பஸ் இன்டர்வியூ செய்த ஒரு கம்பெனியில் தேர்ந்து எடுக்க பட்டு இருந்தாள் ஜீவி...

"பொள்ளாச்சி ல எங்கம்மா ",என்று கேட்ட ராஜிடம்..

"அப்பா பொள்ளாச்சி ல இல்ல ப்பா. கோயம்புத்தூர் ல தான் வேலை", என்றாள் ஜீவி..

ராஜ்," அவ்ளோ தூரம் எல்லாம் போக வேண்டாம் ஜீவி, இங்கேயே எதாவது வேலையை பாரு ",

ஜீவி," நான் போறேன் ப்பா, எனக்கும் வெளி உலகம் பத்தி தெரிஞ்சுக்கணும் ",

"உன்ன அவ்ளோ தூரம் அனுப்பிட்டு வயித்துல நெருப்பா கட்டிகிட்டு இருக்க சொல்றயா , நீ அங்க எல்லாம் போக வேண்டாம் பொள்ளாச்சி லயே எதாவது ஒரு வேலையை பாரு ", என்றார் ஜீவியின் அன்னை பார்வதி.

"அம்மா இங்க எவ்ளோ உழைச்சாலும் பத்தாயிரம் சம்பளம் தரதே பெருசு.. ஆனால் ஐடி கம்பெனில ஆரம்பத்திலேயே முப்பதாயிரம் குடுக்குறாங்க", என்றவளை முறைத்தார் ராஜ்.

"காசுக்காக தான் உன்னை வேலைக்கு அனுப்புறோமா.. நீ ஆசப்பட்டேனு தான் சரினு சொன்ன அதும் பொள்ளாச்சி ல தான்.. நீ எங்கேயும் போக வேண்டாம்.. வேலைக்கு போகவே வேண்டாம்", என்றார் தீர்க்கமாக...

மகள் வேலைக்கு சென்று கஷ்ட பட கூடாது என்று நினைக்கும் தந்தையின் சுமையைக் குறைக்க முடியவில்லை என்று மனதினுள் புழுங்கினாள் ஜீவி..

ஜீவியின் குடும்பப் நடுத்தர குடும்பம்... தந்தை மாடு, ஆடு வியாபாரம்.. அம்மா காட்டு வேலைக்கும் தோப்பு வேலைக்கும் செல்பவர்.. கஷ்டபடும் குடும்பம்..

ஆனால் பார்வதி மகள்கள் இருவரையும் படிக்க வைக்க வேண்டும் என எண்ணம் கொண்டு கடன்களை வாங்கி படிக்க வைத்தார்..

ஜீவியும் சவியும் நன்றாக படித்தனர்..

இப்போது நல்ல வேலை கிடைத்தும் தந்தை அனுப்ப மாட்டார் என எண்ணியவளுக்கு பசியில்லை..

பார்வதி சாப்பிட அழைக்க வர மறுத்தாள்...
பின் ராஜ் சாப்பிட அமர்ந்த படி ஜீவியை அழைத்தார்..

"சொல்லுங்க ப்பா",, என்று வந்து நின்றாள்..

அவளையே பார்த்தவர், "சரி நீ கோவை வேலைக்கு போகலாம்",.. என்றார்..

ஜீவிக்கு இது அதிர்ச்சி... பார்வதியும் ஷாக்கில் இருக்க,

ராஜ் தொண்டையை செருமிக் கொண்டு..
"நீ வேலைக்கு போ.. வெளி உலகம் பத்தி தெரிஞ்சுக்கோ.. ஆனால் மூணு வருஷம் கழிச்சு கண்டிப்பா நான் சொல்ற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கணும்", என்றார்..

அவளுக்கு அது சம்மதமே... என்ற பதில் கிடைத்தது ராஜிற்கு...

அடுத்து அடுத்து அவளுக்கு தங்குவதற்கு இடம் , உணவு வசதி என அனைத்தையும் ஏற்பாடு செய்தார் ராஜ்...

ஒரு சின்ன வீடு, அதில் அவளுக்கு சமைக்க ஒரு பாட்டி என நிர்ணயிக்க பட, ஜீவிக்கு அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை...

அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்க, ஞாயிறு கோவை செல்வதாக முடிவு எடுத்தாள் ஜீவி..

திங்கள் வேலைக்கு சேர வேண்டும் என்பதால் ஞாயிறு அன்றே சென்றால் கொஞ்சம் ஓய்வு இருக்கும் என கூற, அவள் வீட்டிலும் ஒப்புக் கொண்டனர்...

ஆனால் அவள் யாரையும் பஸ் ஏற்றி விட வர வேண்டாம் .. தாங்கள் வந்தால் என்னால் செல்ல முடியாது என வினயை அழைத்துச் செல்வதாக சொல்ல, அவர்களும் அதுவே சரி என்று விட்டனர்.. சவிக்கு தான் உடன் பிறப்பு உடன் இல்லாமல் எப்படி இருக்கப் போகிறோமோ என கவலை ஆனது...

இவ்வாறு முந்தைய நாட்களில். நினைவில் இருந்தவளை நடத்துநர் குரல் நிகழ்வுக்கு அழைத்தது...

பின் உக்கடம் செல்ல டிக்கெட்டை பெற்றுக் கொண்டாள்..

காதில் கெட் செட் மாட்டிக் கொண்டு, ஜன்னல் வழியே ஸ்மார்ட் சிட்டி என்று மாறி வரும் கோவையை கண்டாள்..

ஞாயிறு என்பதால் அனைத்து இடங்களிலும் கூட்டம்... கொரோனா பயம் இன்றி மக்கள் சுதந்திரமாக இருப்பதை பார்த்தவள் தன் தந்தை சாப்பிடும் போது கூட மாஸ்கை கலட்டாததை எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டாள்..

வேடிக்கை பார்த்தவள் .. காற்று தென்றலாய் வீச, அப்படியே ஜன்னல் கம்பியில் சாய்ந்து தூங்கி போனாள்...

பஸ்ஸில் ஏறியவுடன் தூங்கும் ரகம் அவளும் அவளின் தந்தையும்...

❤️❤️❤️❤️❤️❤️

வினய் க்கு ஜீவி சென்றது மிகவும் வருத்தமாக இருந்தது .. இதுவரை பிரிவு என்பதே வந்ததில்லை இருவருக்கும்.

முதல் பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை அவனால்.. அவளை பஸ் ஏற்றி விட்டு வந்து தன் பைக்கில் அமர்ந்தவன் அப்படியே இருந்தான்.. வீட்டிற்கு சென்றால் ஜீவி இருக்க மாட்டாள் என்ற எண்ணம் அவனை கொன்றது..

இத்தனை நாள் உடன் இருந்த போது வெளியில் தெரியாத ஒன்று இப்போது அவனை சுழற்றி அடித்தது...

அவனின் உதடுகள், ஐ மிஸ் யூ ஜீவி என்றது

அதே நேரம் ஜீவியும், மிஸ் யூ டா வினு என்றாள்..

இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் தேடினர்...

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

"அம்மா பிளீஸ் போதும் இதுக்கு மேல சாப்பிட்டா என் வயிறு வெடிச்சிரும் ", என்ற மகனை ஆதுரமாய் நோக்கிய சாரதா..

"வாரத்துக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வர அப்பவும் நல்லா சப்பிடலைனா எப்படி டா ", என்றார் வருத்தம் நிறைந்த குரலில்..

"வேலைக்கு போக இங்க இருந்து ரொம்ப தூரம் மா,. அதான் பக்கத்துலயே ரூம் பாத்து தங்கி இருக்கேன்", என்றான் நிரஞ்சன்...

சாப்பிட்டு முடித்த வுடன்," நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு நைட் கிளம்புறேன் ", என்றவன் தனது அறைக்கு சென்றான்..

அவன் தம்பி அங்கு சுவரை நோக்கி நின்று இருக்க, "சித்து", என்று அழைத்தான் நிரஞ்சன்..

"அண்ணா", என்று ஒரு கோப்பை அவனிடம் நீட்ட அவனும் அதை பார்த்து விட்டு, "ஒன்னும் இல்லைடா விடு பாத்துக்கலாம்", என்றவன் தன்னவளை நினைத்துக் கொண்டு படுக்கையில் விழுந்தான்...

நிரஞ்சனின் தம்பி சித்ரஞ்சன் தான் அழுகையை அடக்க படதா பாடு பட்டான்... பின் நிரஞ்சனை கட்டிக் கொண்டு அவனுடன் தூங்கி போனான்...

மாலை வரை தூங்கியவர்கள், எழுந்து ரெஃபிரஷ் ஆகி வர, வரும் போதே நிரஞ்சன் தன் தம்பியிடம் அப்பா அம்மா கிட்ட எதுவும் சொல்ல கூடாது என அறிவுறுத்தி அழைத்து வந்தான்..

பின் கொஞ்ச நேரம் பேசியவன்.. தம்பியிடம் கண்களால் சமிக்ஞை காட்ட, அவனும் புரிந்து கொண்டான்.. சரி என்றவன் தன் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்றான்..

சித்து தான் அவனின் அறையில் கண்களில் கண்ணீர் வழிய தொண்டை அடைக்க அமர்ந்து இருந்தான்..