...

5 views

சில தொலை மைல்கள்
எண்ணத்தின் கனவலைகளில் நான்
தொடரும் சில தொலை மைல்கள்

சுடும் வெயிலில் சுகமான தென்றல் வீச
சுதந்திரமாய் சுயவடிவில் நான் பேச

சுழன்று கொண்டிருக்கிறது
காலத்தின் சக்கரம்

அடைக்கல அமர்தற்குச் சிறிய வீடு
அமிர்தமாய் அன்று மதிய சோறு

அதன் வழியே அழகான
ஆழ்ந்த உறக்கம்

ஆம், உறக்கத்தின் ஊடே ஊடுருவிய
கனவுகளே நான் தொட்ட மைல்கள்

பனித்துளி பதுங்கிய புல்வெளி
பாலாடை கட்டிய பகலவன்
பருவம் எய்திய பவள பாதை
பாற்கடலில் பங்குச் சந்தை
பழகிப் பார்க்கப் பளிங்கு மங்கை

அடைமழையில் ஆனந்த குளியல் அவலம்
இல்லாத அங்கம் மறைக்கும் தங்க ஆடை

தெருவோரப் பூச்செடி பூவின் இதழோரம்
புன்னகைக்கும் பொற்காசு

சிட்டுக்குருவி சிறகை விரித்து சிட்டாக வந்து
மெட்டோடு பேசும் அதிசயம் அங்கே

மலர்களின் மதமே மணக்கிறது அங்கே
புன்னகையின் புகழே புரளுகிறது அங்கே

மிதக்கும் மின்னல்கள் மேகத்தில் ஜொலிக்கிறது வண்ணமாய் ஜன்னல்கள் வானத்தில் திறக்கிறது

நதிகளின் நளினம் நடனமாடுகிறது அங்கே
ஸ்ருதிகளின் சுவையோ சுவனமாகிறது அங்கே

வெள்ளை அருவி வேர்வை சிந்துகிறது
கொள்ளை அழகு விண்ணை மிஞ்சுகிறது

சோகங்கள் இல்லாத சோலையாக
சொர்கம் கண்டேன் சொப்பனத்தில்

தாகங்கள் கோரவே தடுமாறி எழுந்தேன்
தண்ணீர் தண்ணீர் என்று

பருகிய தண்ணீர் உருகியே
உடல்வழி சென்றதும்

உறக்கம் தொடரவே உண்டானதோ
உற்சாக உலகம்

ஆம், அது உற்சாக
உலகமே

உழைப்பால் உயர்ந்த உன்னத
மக்கள் மட்டுமே அங்கே

மதம் காண உலகான அங்கே மரம்
செடி கொடிகளே மனிதம் காக்கிறது

தெருவோர மரமோ தேர்வெழுதும்
பள்ளி சாலையாக அங்கே

தென்றல் காற்றோடும் அறிவு பாட்டோடும்
கூடிய கல்விக் கூடம்

அங்கே கைப்பேசி கனைக்கவில்லை
மானுடம் பொய் பேசி திரியவில்லை

அரசியல் இல்லாத உலகான அங்கே
ஆண்டவன் மட்டுமே ஆளுகிறான்

விருந்தோம்பல் விரிந்து கிடக்கிறது அங்கே
நல் விதிகளில் நாள் கடக்கிறது

மாதாவை மதிக்கிறார்கள் அங்கே
பிறந்த மண்ணை துதிக்கிறார்கள்

நெறியோடு வாழ்கிறார்கள் அங்கே
நோவினை தவிர்க்கிறார்கள்

காதல் மட்டுமே விதைக்கப்படுவதால் என்னவோ
காமம் அங்கே காணாமல் போய்நிக்கிறது

வான் புகை கக்கும் வாகனம் இல்லை அங்கே
வாழ்வாதாரம் தரும் வயல்வெளி அங்கே

இயந்திர வாழ்க்கை இல்லவே இல்லை அங்கே
இயற்கையோடு மட்டுமே இயங்கி
வாழ்கிறார்கள் இன்பமாய்

துன்பம் காணாத தூய உலகில்
துள்ளிக்குதித்து என் மனம்
தூறலாய் வீசுகிறது என் குணம்

துயில் களைந்தேன் தூரம் நின்றேன்
இயல்புநிலை வந்தேன்
தேடிச் சென்ற கனவு களைந்து
வாடி நின்றேன்

வராதா கனவில் கண்டக்காட்சி
தராதா இயல் இன்ப மீட்சி
என்ற ஏக்கத்தோடு கனவலையின் பால்
தொடர்ந்தது என் நினைவலைகள்


© ஆறாம் விரல் ​✍🏾

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamil