...

7 views

10) வஞ்சம் தீர்க்க வருகிறாள்.
( 10 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள் .


" நிலா குட்டி . " வினு .

" சொல்லு டி குட்டி . " நிலா .

" நா ஒன்னு சொல்லுவேன் . நீ கோவ பட கூடாது . " வனு .

" என்ன மேடம் பெரிய டைலாக்லாம் பேசுறிங்க .  என்ன ஆச்சு . " நிலா .

" எனக்கு என்னமோ ...... " என்று இழுத்தாள் வினு .


" உனக்கு என்னமோ ஆகிருச்சா . பைத்தியம் எதுவும் பிடிச்சுருச்சா என்ன . " நிலா .

" இல்ல டா . எனக்கு என்னமோ சூர்யா உன்ன லவ் பண்ற மாதிரி தெரியுது . " வினு .

" என்ன . " நிலா சற்றே அதிர்ந்து தான் போனாள் .

" ஆமா டி . உன்ன அவன் ரொம்ப கேர் பண்ணிக்குரான்னு தோனுது . " வினு .

" என்ன டி . லூசு மாதிரி பேசுற . கன்ஃபார்ம் . உனக்கு பைத்தியம் முத்திருச்சு . டைம் மிஷின் செய்ர வேலைய பாக்கலாம்னா , நீ லவ் பண்றான்னு சொல்லிட்டு திரியுர . பைத்தியம் . போய் வேற வேல இருந்தா பாரு போ . " என்று திட்டினாள் நிலா .

அப்போது தான் உள்ளே நுழைந்த ஜெனிக்கு கடைசியாக நிலா அவளை திட்டியது மட்டும் தான் தெரிந்தது . " என்ன டி ஆச்சு . எதுக்கு சண்ட போடுறிங்க . " ஜெனி .

" சண்டலாம் இல்ல டி . மேடம சூர்யா லவ் பண்றான்னு சொன்னா நம்ப மாட்ரா டி . " வினு .

" அடி பக்கியே . " ஜெனி .

" என்ன டி . " வினு .

" எனக்கும் அப்டி தான் தெரிஞ்சுது . பட் நீ இத இவ்ளோ சீக்கிரம் கேப்பன்னு நா நெனச்சு கூட பாக்கல . " ஜெனி .

" என்ன " நிலா அதிர்ச்சியுடன் கேட்டாள் .


" பாரு டா . மேடம் அதிர்ச்சியானா , இது இல்லன்னு ஆகிருமா . " ஜெனி .

" போங்க டி . " என்று கத்தி விட்டு நிலா தன் வேலையை தொடர்ந்தாள் .

மற்றவர்களும் சிரித்து கொண்டு தங்கள் வேலையை தொடர்ந்தனர் .


★★★★★

இங்கு நம் நாயகர்கள் மூவரும் அமர்ந்து இருந்தனர் . " டேய் . நீ நெனச்சது நடக்குமா டா . " ஜான் .

" தெரியல . " சூர்யா .

சிறிது நேரத்திற்கு முன் நடந்ததை  ஒரு முறை அனைவரும் யோசித்து பார்த்தனர் .

" எனக்கு எங்க அம்மா அப்பா யார்னு தெரியாது . சின்ன வயசுல இருந்தே அது கணவுல வரும் நிலா , இதோ  நம்ம இருக்குற காடு . எல்லாமே வரும் . நிலாவும் நானும் இந்த காட்டுக்கு வர்ர மாதிரி வரும் . அப்போ அதுக்கு மீனிங் தெரில . ஆனா இப்போ தெரியுது . நிலாவ நா இந்த காட்டுக்கு கூட்டிட்டு வரனும்னு தான் மீனிங் . அதுக்கு என்னோட கண் முன்னாடி நிலா சாகனும் .  " சூர்யா .

" ஓகே . இப்போ என்ன பன்னலாம்னு சொல்லு . " விஷ்வா .

" எப்டியாவது நிலாவ காப்பாத்தனும் . சென்டிமென்டா அட்டாக் பண்ண வேண்டியது தான் . நா மட்டும் தான் அதோட வீக்னெஸ்ன்றது எனக்கு முன்னாடியே தெருஞ்சுது . " சூர்யா .

" ம்ம்ம்ம . " விஷ்வா .

அனைவனும் பழைய நினைவுகளில் இருந்து மீண்டனர் .


அன்று இரவு :

அன்று நிலா அவள் அறையில் தனியாக படுத்து இருந்தாள் .  மனதினுள் கொஞ்சம் பயத்துடன் தான் படுத்திருந்தாள் . அப்போது அவளின் காலை யாரோ இழுப்பது போல் தோன்ற அவள் அதிர்ந்தாள் . பயந்து கொண்டே போர்வையை இழுத்து போர்த்த , இம்முறை அவளது போர்வையை யாரோ இழுப்பது போல் இருந்தது . பயந்து போனாள் . எங்கே கண் விழித்தால் அந்த உருவம் மீண்டும் வருமோ என்று அஞ்சி கண் விழிக்காமல் படுத்து இருந்தாள் நிலா . இப்போது அவள் மேல் ஏதோ தண்ணீர் சொட்டுவது போல் இருக்க கண் விழித்து மேலே பார்த்தவள் " அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ " என்று கத்தினாள் . மேலே ஒரு உருவம் தொங்கி கொண்டிருந்தது . அதன் வாயில் இருந்து வந்த உதிரம் தான் நிலாவின் மேல் பட்டிருந்தது .

" ரொம்ப கத்தாத . யாருக்கும் கேக்காது . " அந்த உருவம் .

" யாரு நீ . " நிலா பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு கேட்டாள் .

அதை கேட்டு சிரித்த அந்த உரவம் " நா யாருன்னு கேக்குறியா . அது எதுக்கு உனக்கு . எனக்கு தேவ உன்னோட உயிர் தான் . அது எனக்கு வேணும் . குடு , நான் போறேன் . இல்லன்னா உன்ன மட்டுமில்லாம உன்னோட ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிட்டு சுத்துறாங்கல்ல  , அவங்களையும் கொண்றுவேன் . தேவையா அவங்களுக்கு . " என்று கூறிவாறு முன்னே வந்ததது அந்த உருவம் .


" ப்ளீஸ் என்ன விட்ரு . நா உனக்கு என்ன பண்ணேன் . " நிலா கெஞ்சியவாறு பின்னால் சென்றாள் .




அவள் கூறுவதை எல்லாம் கேட்காமல் அவளை நோக்கி அடி எடுத்து வைத்து கொண்டிருந்தது . " ப்ளீஸ் வேணாம் . " என்று கூறியவாறு பின்னே செல்ல செவுரு இடித்து நின்றாள் நிலா . 


அப்படியே அவளின் கழுத்தை அந்த உருவம் நெரிக்க தொடங்கியது . நிலா மூச்சு காற்றுக்காக தனற ஆரம்பிக்கும் போது தான்  அந்த  இடத்திற்கு வந்து சேர்ந்தனர் சூர்யாவும் அவன் நண்பர்களும் .


சூர்யாவிற்கோ கணவில் நிலாவை அந்த உருவம் ஏதோ செய்வது போல் வந்தது . பதறி எழுந்தவன் , தன்னறுகில் துயில் கொண்டிருக்கும் இருவரையும் பிடித்து எழுப்பினான் .

" என்ன டா . எதுக்கு எழுப்புற . " ஜான் தூக்க கலக்கத்தில் கேட்டான் .


நிலாவ அது ஏதோ பண்ற மாதிரி கணவு வந்துச்சு டா . " சூர்யா .

" வா போலாம் . " என்ற இருவரும் எழுந்து விட்டனர் .

மூவரும் இப்படி தான் நிலாவின் அறைக்குள் நுழைந்து இருந்தனர் .

" நிலா . பயப்படாத , நாங்க இருக்கோம் . " என்று கூறியவன் ,  அவள் அருகில் செல்ல நினைத்தான் . ஆனால் அவனை அந்த உருவம் தூக்கி அடிக்க , அவன் சென்று அந்த அறைக்கு பின்னால் விழுந்தான் .


" உன்ன இப்போவே கொல்லுவன்னு நெனைக்குறியா . மாட்டேன் , உன்ன துடிக்க வச்சு , அத என்னோட கண் குளிர ரசிச்சு ரசிச்சு தான் கொல்லுவேன் . " என்ற அந்த உருவம் எங்கே சென்றது என்று கனிக்க முடியாமல் மறைந்தது .


அந்த உருவம் சென்றதும் மற்றவர்கள் நிலாவின் அருகில் வந்தனர் . உயிர் பயத்தை கண்டிருக்கிறாள் அல்லவா . உடல் நடுங்கி கொண்டிருந்தது . சூர்யா நிலாவின் அருகில் சென்று , அவளின் நெள்றியை தொட்டு பார்த்தான் . உடல் கொதித்து கொண்டிருந்தது . அதிர்ந்தவனாக கையை எடுத்து கொண்டான் .

" என்ன ஆச்சு டா . " ஜான் .

" தெரியல டா . உடம்பு சுடுது . " சூர்யா .

" என்னது சுடுதா . அது எப்டி டா சுடும் . ஒரு வேல புது நோய் எதாவது வந்துருச்சோ . " என்று வினவினான் ஜான் .( அடப்பாவிகளா . சாதாரன ஃபீபர் டா அது . ஆண்டவா , என்ன இருந்தாலும் என்ன இப்டி சோதிக்க கூடாது . அவங்களுக்கு ஃபீவர்னா என்னன்னு கூட தெரியாது மக்களே . நல்லா வருவீங்க டா நீங்க .  )


" தெரியல . வேணா ஒன்னு பண்ணுவோமா , இவள கொண்டு போய் ஃப்ரீசர்ல வச்சுருவோம் . " விஷ்வா . ( ஃப்ரீசர்லையா ....... வெளங்கிடும் . )

( விஷ்வா : இப்போ உனக்கு என்ன ப்ரெச்சன . சும்மா நொய்யி நொய்யின்னு . எங்குளுக்கு தான் தெரியல . மேடம்க்கு நல்லா தெரியும்ல சொல்ல வேண்டியது தான .

மீ : அப்புரம் எதுக்கு டா ஹீரோஸ் னு நீங்க மூனு பேர் இருக்கிங்க .

ஜான் : என்னது ஹீரோஸா . அப்புடியே ஓடி போய்டு . ஹீரோஸ் மாதிரி எங்கள காமிச்சியா நீ . வந்துட்டா பேச .


விஷ்வா : ஆமா . போ , நிலாவ நாங்க பாத்துக்குறோம் .


மீ : என்னமோ பண்ணுங்க . அப்ரம் , ஒரு ஈர துனிய அவளோட நெத்தில வச்சா ஃபீவர் கொரஞ்சுடும் . நா கெளம்புரேன் .

விஷ்வா :  ஓய் . நில்லு , உங்கிட்ட நாங்க கேட்டோமா . எதுக்கு சொன்ன .

மீ : என்னோட ஹீரோயின்ஸ நான் தான் காப்பாத்தனும் . பாய் பாய் . )


" அது தான் அவளே சொல்லிட்டால்ல , போய் ஒரு ஈரத் துனிய கொண்டு வாங்க . " சூர்யா .


" போரோம் . " என்று கூறிய ஜான் , விஷ்வாவையும் சேர்த்து இழுத்து கொண்டு சென்று விட்டான் .


அவர்கள் இருவரும் சென்றதும் சூர்யா நிலாவை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான் .


★★★★★★★★

" அவள காப்பாத்த நீ வர்ரியா . பாக்குறேன் எந்த அளவுக்கு காப்பாத்துறன்னு . " அந்த உருவம் .

●●●●●●●●


© Ashwini