...

12 views

நான் பிறந்த கதை...
History of my birth...

எல்லா மனுசங்க பொறக்குறதும் ஒரு அதிஷ்டம் தான்...

யாரும் அதிஷ்டம் இல்லாதவங்க இல்ல...

அப்டி அதிஷ்டம் இல்லன்னு சொல்றவங்கல முட்டாள்னுதான் சொல்லனும்...

பிறப்பு ஒரு சாதாரண விஷயமே கெடையாது...

நான் கொஞ்சம் ரொம்ப அதிஷ்டக்காரன்...

ஏன்னா...என்னோட பிறப்பு எல்லாரு மாதிரியும் சாதாரணமா இல்லை...

என்னோட அக்கா பொறந்து நாலு வருஷத்துக்கு அப்றம் தான் நான் பொறந்துருக்கேன்...

அதுனால அம்மாவ அன்றைய சமூகம் ரொம்பவே ஏளனமா பேசிருக்கு...

அப்பா வெளியூர்ல வேல பாத்துட்டு இருந்துருக்காங்க...

அதனால வீட்ல எந்த ஆறுதலும் இல்ல அம்மாவுக்கு...

எல்லா சினிமா அப்றம் நடகத்துல எல்லாம் வர்ற மாதிரி நெறைய கொடுமைகள அம்மா அனுபவச்சுருக்காங்க...

அந்த கொடுமைகள் பத்தாதுன்னு உடம்பு சரி இல்லாம மூனு ஆப்ரேஷன்...

(அந்த ஆப்ரேஷன் பட்டத்துக்கு அப்றமும் அவுங்களுக்கு எந்த ஒரு அக்கரையும் கெடைக்கல...)

நான் பொறந்ததோட சேத்து நாலு...

நான் சுகப்பிரசவம் கெடயாது...

சிசேரியன்...

என்னோட பாட்டி எங்க அப்பாவ உனக்கு இனிமே புள்ளயே பொறக்காதுன்னு வாழ்த்திருக்காங்க...

இதுமாதிரி பெத்த அம்மா கிட்ட இருந்து வாழ்த்து கெடக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்...

இதுக்கு மத்தில தான் நான் பொறந்துருக்கேன்...

அப்றம் நான் பொறக்குறத்துக்காக நிறைய கோவிலுக்கு போய் வேண்டிட்டு வந்துருக்காங்க...

என்னோட அக்கா நான் பொறக்க ரொம்ப வேண்டிக்குச்சாம்...

கோவிலுக்கு போகும் போது கருவறைல உள்ள சாமிய கும்பிட்ட அப்றம் வெளிய உள்ள சாமியெல்லாம் போய் விழுந்து விழுந்து கும்பிட்டு வருமாம்...

என்ன வேண்டிக்கிட்ட அப்டின்னு கேட்ட "எனக்கு தம்பி பொறக்கனும்னு வேண்டிக்கிட்டேன்"னு சொல்லுமாம்...

நான் உருவானத்துக்கு அப்றம் அவுங்களோட சந்தோஷத்துக்கு அளவே இல்ல.....

பொறக்குற சமயத்துல சொல்லிட்டாங்க... சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பு இல்ல அப்டின்னு...

அதுனால எனக்காக என்னோட மாமா லோன் வாங்கி செலவு பண்ணிருக்காங்க...

என்னோட அம்மாச்சி மாமா கிட்ட கேட்ருக்காங்க "ஏம்பா இவ்ளோ காசு செலவு பண்ணனுமா" அப்டின்னு...

அதுக்கு என்னோட மாமா "என்னமா இப்டி சொல்லிட்ட... என் தங்கச்சிக்கு பையன் பொறக்கப்போறான்னு இருக்கேன். நீ காச பத்தி பேசிக்கிட்டு இருக்க" அப்டின்னு...

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைல சேக்குறதா திட்டம்...

அங்க நான் பொறக்குறத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால ஒரு கொழந்த பொறந்து காணாம போச்சாம்...

அதுனால தனியார்
(Rohini hospitals, Thanjavur)மருத்துவமனைல பாத்துருக்காங்க...

அப்துல்கலாம் பொறந்த நாள்ல 1999ல இரவு 10:30 க்கு
பொறந்துருக்கேன்...

ரொம்ப அதிஷ்டக்காரன்தான் நான்...

◉‿◉

#secret #birthmystory #mom #amma #pudukkottai #thanjavur #caesar # caesarian #JuliusCaesar #momlove #birthsecret #sister #god ##

© murugs