...

1 views

கதிர் என்னும் நண்பன்
அத்தியாயம் 4
தூத்துக்குடி மாவட்டம்,




பழைய துறைமுகம்,




கதிர் யாரோ ஒருவருக்கு காத்து கொண்டு இருந்தான் அவன் காதுக்கும் வர்மா யாரோ ஒருவரால் சிறை பிடிக்கப் பட்ட விஷயம் தெரிய வர அவன் என்ன செய்ய என்று யோசனை செய்து வந்து இருந்தன்




கதிர்க்கு சில சந்தேகம் இருக்க கண்டிப்பா வர்மா தெரிஞ்சு தான் அவங்க கிட்ட மாடி இருப்பான் எனக்குத் தெரிஞ்சு ஜாக் இதுக்கு எதுனா ஒரு விஷயம் எனக்கு அனுப்பி இருக்கும் நினைக்கிறேன். உடனே நம்ம வீட்டுக்குப் போகலாமெனக் கூறி தான் நண்பன் சிவா விடம கூறினான்,




கதிர் பாஸ் ஏயான இப்படி செஞ்சி இருக்காரு, அவருக்கு இருக்கிற திறமை க்கு அவனுங்க எல்லோரும் ஒரு ஆள் இல்லையேயெனக் கேட்கச் சும்மா இரு சிவா வர்மா இப்படியொரு விஷயம் செய்கிறான் என்றால் அதுல ஏதாவது ஒரு மர்மம் இருக்கும கண்டிப்பா ஜாக் கிட்ட இருந்து எதுனா தகவல் வந்து இருக்கும் எனக் கூறி கொண்டு தான் வீட்டுக்கு வந்தான். அவன் வந்தவுடன் ஜூலி என்னும் ஒரு ரோபோட் கதிர் முன் வந்து அவனுக்கு ஒரு மெயில் வந்தது இருப்பதாகவும் அதில் ஜாக் தான் அனுப்பி இருக்கிறான் எனவும் கூறியது அதில்,




ஆபரேஷன் destruction எனக் கூறி இருக்க கதிர் முகத்திள் ஒரு சிரிப்புபின் ஒரு தயக்கம் குழப்பம் அதை ஆரமிக்க இன்னும் 4 வருஷம் இருக்கு அதுக்குள்ள இப்போவே இதை எதுக்கு செஞ்சானெனப் பல கேள்விகள் இருக்க, அது மட்டுமில்லாமல் ஜாக் மற்றும் ஒரு தகவல் கூறினானென ஜூலி கூற அது ஆடியோ வடிவில் இருக்க அதை ஜூலி வட விட்டது அதில் வர்மா பேசிய சிலது இருக்க அதை நன்றாகக் கேட்டான் கதிர்,




கதிர் எனக்குத் தெரிஞ்சு நம்ம போட்டு வச்ச திட்டம நடக்க சரியான சமயம் இதான் எல்லாத்துக்கும் தயார் ஆக இரு உனக்கு இந்தத் தகவல் கிடைக்கும் பொது நான் ஒரு மிஷன் ல இருப்பேன் சரியா உனக்குத் தெரிஞ்ச உடனே என்னோட வீட்டுக்கு நீ ஜூலியா கூட்டிட்டு வந்துரு கூடவே சிவா வக்கூட்டிட்டு வா உனக்குத் துணையா என வீட்டுல மூணு பேர் இல்லன நாள் பேர் இருப்பாங்க எனக் கூறி இருந்தான் உனக்கு இன்னொரு முக்கியமான வேலை இருக்கு எங்க சதீஷ் சுரேஷ் ரம்யா மூணு பெரும் என்னோட நண்பர்கள் அவங்களும் நம்ம கூடத் தான் வேலை பார்க்கப் போறாங்க நம்மளை பத்தி இப்போதைக்கு கொஞ்சம் தெரிஞ்சா போதும் என்னோட குடும்பம் பத்தி தெரிய வேணாம் நீயென அப்பா ராஜா ஆதித்தன் கக்கு நம்ம திட்டம் பத்தி தெரியும் நீ இது ஆரம்பம் ஆகிட்டு' நு சொல்லிடு.




எனக் கூறி அந்த ஆடியோ முடிந்தது அதில் ஜூலியையும் கூட்டிட்டு வா எனக் கூறியதை கேட்டு ஜூலி என்னும் ரோபோ சற்று கோபம் கொண்டது காரணாம் ஜாக் அதன் அண்ணன் ரெண்டும் எலியும் பூனையும் போல் அதனால் அதைக் கண்ட கதிர் சிரித்து விட்டான் சரி வா ஜூலி உன் அண்ணன் ஆகப் பாக்க போகலாமெனக் கூறினான் உடனே தனது வருத்ததை ஒரு சோக சத்தம் கொடுத்து வெளி படுத்தியது. ரம்யா கண்டிப்பா நம்ம பாஸ் கட்டிக்க போற பொண்ணா தான் இருக்கணும் சரிதானே கதிர் என ஜூலி கூற உனக்குச் செட்டை அதிகம் ஆகிட்டு ஜூலியெனச் சொல்லி விட்டு ஆமா கண்டிப்பா ரம்யா தான் அவனோட காதலி அப்போ நமக்கு அண்ணி போகும்போது எதுனா பரிசு வாங்கிட்டு போகலாமெனக் கதிர் கூற சிவா ஜூலி சரியெனக் கூறி சென்றனர்.

டேய் பம்பரகட்ட மண்டையா என ஒரு குரல் வீட்டின் வாசலில் கேட்டக்க அங்க இருந்த அனைவரும் திரும்பிப் பார்க்க அங்கே ஜாக் போல் ஒரு ரோபோ நின்று கொண்டு இருந்தது அதன் தலையில் ஒரு ரிப்பன் கட்டி அதன் முக திரையில் கோபம் மற்றும் சந்தோஷம் முக பாவனை மாறி மாறி வந்தது அங்கே வந்த கதிர் சிவாவை பார்த்து ரம்யா சுரேஷ் சதீஷ் பயந்து போய் நின்றனர்.




சில மணி நேரம் முன்.




ஜாக் இவர்கள் மூவரையும் கண்டு ரம்யா முகம் கண்ட வுடன் ஸ்கேன் செய்து வீட்டு மேடம் உங்களை அன்புடன் வரவேற்கிறேன் எனக் கூற ரம்யா திகைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தால் அருகில் இருந்த சதீஷ் யைக்கண்டு மிஸ்டர் சதீஷ் உங்களையும் எனக் கூறி விட்டுச் சுரேஷ் யைப்பார்த்து நீங்கச் சுரேஷ் ஆகத் தான் இருக்கணும் எனக் கூறி விட்டுத் தனது கையைக் கொண்டு சுரேஷ் யின் காலில் அடித்து விட்டு இது என மாஸ்டர் கிட்ட சண்டை போட்டதுக்கு எனக் கூறி விட்டு வாங்க மூணு பேரும் வீட்டுக்குள்ள போகலாமெனக் கூறி ரம்யா வின் கையைப் பிடித்து வாங்க மேடம் எனக் கூடி சென்றது வெளியிலிருந்து பார்க்கப் பழைய வீடுபோல் இருக்க உள்ளே பெரிய மாளிகைபோல் இருக்க மூவரும் திகைத்துப் போனார்கள் என்ன தான் விக்ரமாதித்தியன் பயணம் எதும் கொடுக்காமல் இருந்தாலும் கதிர் மற்றும் வர்மா வின் திட்டதினால் இருவரும் சேர்ந்து பல வழக்குகள் முடித்து அதில் வரும் பயணம் வைத்துத் தூத்துக்குடியில் ஒரு வீடும் திருநெல்வேலியில் ஒரு வீடும் வாங்கி அதில் அவர்கள் வேயாய் மற்றும் வாழந்து வந்தனர் இருவரும் கல்லூரி படித்து வந்தாலும் இருவரும் தான் 10 வயதிலிருந்து இதுபோல் தான் செய்து வருகின்றனர் 10 வயதிலிருந்து பல தற்காப்பு கலைகள் காற்று கொண்டு கடந்த இரண்டு வருடமாகத் தான் துப்பறியும் வேலை செய்து வருகின்றனர்.




ஆத்தியா குடும்பம் என்னும் டார்க் நைட் :




உலக அளவில் பெரிய பெரிய குழுக்களைக் கவனித்து எதும் பெரிய அளவில் தாக்குதல் நடக்காமல் அது மட்டுமில்லாமல் நாட்டில் நடக்கும் சங்கிலி தொடர் குற்றம் கவனித்து அவர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். விக்ரமாதித்யன் பழைய காலத்து ஆள் என நினைத்தாலும் அவர் அப்போதே துப்பறியும் துறையில் பெரிய பதவியில் இருந்தவர் அவருக்கு அமெரிக்காவில் இருக்கும் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் இருந்ததால் பிரபல டி சி காமிக்ஸ் படித்து அதில் வரும் ஒரு காதப்பத்திரம் பிடித்துப் போக அதே போல் தானும் மக்களுக்காக இருக்க வேண்டும் ஆனால் தான் யார் என்று யாருக்கும் தெரிய கூடாது என முடிவு எடுத்து இவை செய்து வருகிறார் என்ன தான் பெரிய பணக்காரன் பல தொழில் நடத்தி வந்தாலும் இதில் இருக்கும் ஆர்வம் ஒருபக்கம் தான் சந்ததி இரவில் ஒரு வாழ்க்கை யும் பகலில் ஒரு வாழ்க்கையும் வாழ வேண்டும் என இப்படி செய்து இருந்தார...




(டேய் நிறுத்து டா அது என்ன எல்லோரும் ஒரு விதமா கதை எழுதினா எல்லோரும் இப்படி பட்ட கதையில தான் யார் என்று சொல்லவே மாட்டாங்க நீ என்ன எடுத்து 5 6 அத்தியாயம் லக்கூட இருக்கிற எல்லோருக்கும் சொல்ற இது ரொம்ப வீசிதரமா இருக்கு டா என எங்கோ ஒரு குரல் இக்கதையைப் படிக்கும் ஒருவரின் குரலாக ஏன் உங்கள் மனதில் கூடச் சந்தேகம் வரலாம் ஆனால் என்ன செய்வது எல்லோரும் இப்டி சாதாரண கதை எழுதி அதில் அங்கே அங்கே சுவாரசியம் வைக்கிறனர் ஆனால் நான் இப்படி ஒன்று நடக்கவே வாய்ப்பு இல்லை என்ற ஒரு மனநிலையில் தான் இப்படியொரு படைப்பு உருவாக்க நினைத்தேன் இது வரும் எல்லாமே எனது ஆள் மனதில் உருவான ஒரு கதைக்களம் தான் உங்கள் கருத்து மற்றும் உங்கள் அன்பை இந்தக் கதைக்குக் கொடுக்குமாறு தாளமையுடன் கேட்டுக் கொள்கிறேன்)




ஜாக் மூவரையும் பார்த்து உங்களுக்குப் பல சந்தேகம் இருக்கும் அது பதில் எல்லாம் இங்கே கிடைக்கும் ஆனா கொஞ்ச நேரம் நீங்க வெயிட் பண்ணனும் சரியா எனக் கூற




ரம்யா இங்கே நடப்பதை கண்டு திகைத்து நின்று கொண்டு இருந்தால் சதீஷ் இங்கே என்ன தான் நடக்குது நாம எதும் சரக்கு குடித்து விட்டு ஆழந்த தூக்கத்துல இருக்கவமா அதைவிடச் சுரேஷ் நாம என்ன கஞ்சா இழுத்த மாதிரி இருக்கிறோமா என நினைத்துக் கொண்டு தலையில் கை வைத்து நிற்க ஜாக் நீங்க ரொம்ப குழப்பம் ல இருக்கீங்க வர்மா சார் பத்தி நீங்கக் கவலை படாதீங்க சார் சீக்கிரம் வந்துருவாறு எனக் கூறி விட்டு அந்த ஜாக் என்னும் ரோபோ சிரித்தது இதைக் கேட்டு ரம்யா திகைப்போடு யார் இந்த வர்மா எனக் கேட்க




ரம்யாவின் கேள்விக்குப் பதில் கிடைக்குமா வர்மா வின் உண்மை முகம் தெரிய வருமா இங்கே இருக்கும் மூவருக்கும் அடுத்து அடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி என்ன என்ன அடுத்த அத்தியாயதில் தொடரும்....

( சில கேள்விகள் என்னுள் ( வர்மா )

நமக்குத் தோன்றும் அந்தக் கேள்விகள் எதற்க்கு தோன்றுகிறது எனப் புரியாமல் பல குழப்பம் நமக்கு வருகின்றன இங்கே நடக்கும் காலம் அதில் வாழும் நாமும் இங்கே இருக்கிறோம் இதே போல் இன்னொரு உலகம் இருக்குமா அந்த உலகத்திலும் நம்மளை போல் யாரேனும் இருக்க முடியுமா அந்த உலகத்தில் இங்கே இருப்பது போல் தான் இருப்போமா இல்லை நமக்கென்ன பல அடையாளம் மாறி வேறு போல் இருக்க கூடுமா, அப்படியொரு உலகம் இருந்தால் அந்த உலகத்தில் நான் எப்படி இருப்பேன் அந்த உலகத்தில் இருக்கும் நான் இங்கே இருக்கும் என்னுடன் பேச ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா, குவாண்டம் பிசிக்ஸ் வழியே நடக்கும் போர்க்களத்தில் கருந்துளை ஒன்று உருவாகி இந்தப் பிரபஞ்சம் பிறந்து சில நொடியில் பிறந்த மற்றும்ஒரு உலகம் பிறந்து பல கால நிலை மாற்றம் கண்டு இந்த உலகத்திற்கும் அந்த உலகத்திருக்கும் ஏதாவது தொடர்பு உண்டாகுமாயின் அது எதன் அடிப்படையில் நடக்கும், இங்கே மறுபடியும் உருவாக்க நினைக்கும் கடவுள் துகள் என்னும் மாயை இந்த உலகத்தின் மறு உருவாக்கம் பிறக்க வைக்கும் எனப் பல அறிவியல் அறிஞர்கள் விவாதித்து கொண்டு இருக்க, எங்கோ இருக்கும் உலகத்திலிருந்து இங்கே வரத் துடித்துக் கொண்டு இருக்கும் ஒரு ஜீவன்) 
© அருள்மொழி வேந்தன்