...

0 views

உருவமில்லா நிழல்

சொர்க்கம்

சித்தர் ஒரு பக்கம் இருக்க . பள்ளியில் படிப்பது கொஞ்சம் மீதி நேரம்
மயில் இரகை குட்டி போடுவது,
பட்டாசு செடி எச்சை தொட்டு வெடிப்பது,
பென்சில் குப்பையில் ரப்பர் செய்வது,
ஜீபூம்பா பென்சில் ,
ரேடியம் பாலை பையில் வைத்து பார்ப்பது,
சக்திமான் , மாயா மச்சிந்திரா மற்றும் கார்டுன் நெட்வ்னர்க் (இது மட்டும் இப்பொழுது வரை பார்ப்பேன்.)
என பல இருந்தது ஐந்தாம் வகுப்பு வரை.

ஆறாம் வகுப்பிலிருந்து தான்


Parle-G shaktiman sticker பீரோவில் , பரிட்சை அட்டையிலும் இருக்கும்,
கீழ் உள்ள கரம் போட்டு விளையாடுவது

ஏரோப்ளேன்
ஐஸ்பாய்
WWE cards .... ,
Gems மிட்டாய்க்கு WWE sticker.

எட்டாம் வகுப்பின் போது
பாட்டுபுத்தகம் ,
பென்ஃபைட் ,
புக் கிரிக்கெட்,
ஹேன்ட் கிரிக்கெட் மற்றும் பல...
சொர்க்கத்தில் இருந்த நாட்கள்.

இவை அனைத்தும் என் மனதில் இருக்கும் அந்த பயத்தை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.

சொர்க்கத்திலிருந்து வெளிய வந்தநாள் எட்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் , எனது ஆயா ஊருக்கு சென்றிருந்தேன். பூங்காடு அருகில் கடையூர் என்ற கிராமம். எனது தாத்தா அவர் வயலுக்கு குப்பையை (இயற்க்கை உரம் )எடுக்க மாட்டு வண்டியில் அதிகாலை ஐந்து மணிக்கு சென்றார் நானும் அவருடன் சென்றேன். நான் செய்த பெரிய தவறு அதுதான். குப்பையை எடுக்க ஏரியை கடந்து தான் போகனும், அங்கே தான் இடுகாடு உள்ளது. இடுகாடு ஒட்டி ஒரு ஐம்பது அடியில்தான் பேரமணர் மலை பின்புறம் . எனது தாத்தா குப்பையை எடுக்க கீழ் இறங்கி கூடையில் சானியை அல்ல ஆரம்பித்தார். நான் வண்டியிலேயே அமர்ந்தபடி சுற்றி பார்த்தேன் . இடுகாட்டில் கல்லரை மீது ஒரு உருவம் கண்கள் சிமிட்டிய படி அமர்ந்து இருந்தது . அந்த இருட்டிலும் கண்கள் நிலாவைப்போல் பளிச்சென்று இருந்தது. நான் பார்த்த பின்பு கண்கள் சிமிட்டாமல் என்னை உற்று பார்த்த படி அமர்ந்து இருந்தது. மாடும் கத்த ஆரம்பித்தது, நான் பயத்தில் தாத்தா என்று கத்தி வண்டியிலிருந்து கீழே விழுந்தேன். தாத்தாவையும் காணவில்லை மாட்டு வண்டியையும் காணவில்லை. கண்ணீருடன் கத்திக்கொண்டு ஒடினேன். ஆனால் ஒவ்வொரு அடி வைக்கும்போது அந்த உருவம்தான் என் அருகில் வந்துகொண்டிருந்தது. பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு கண்ணீருடன் ஓட ....
ஒரு கட்டத்தில் கண்ணை திறந்தேன் அந்த உருவம் கண் முன்னே இருந்தது. பயத்தில் உயிரே போகி விட்டது , நான் கண்ணை இருக்க மூடிக்கொண்டேன்.

அந்த உருவம் என் கண்ணை தொட்ட பிறகு பூமி இரண்டாக பிளக்கும் சத்தம் நான் உணர்ந்தேன். நான் கத்திக்கொண்டே கீழே போக...

அந்த நிழல் கூரியது "நீ தான், நீயே தான் யாரிடமும் சொல்லாதே" .

நான் கத்தியபடி கண்ணை திறந்தால் ஆயா வீட்டில் திண்ணையில் படுத்திருந்தேன் . மேலே பாம்பு , ஆயா அதை பார்த்து விட்டு டேய் தம்பி அது சாமி பாம்பு கத்தாதே என்று சாதாரணமாக சொல்லிவிட்டு வரக்காப்பியை வைத்துச்சென்றார். ஆனால் ஆயா போன பிறகு அந்த பாம்பும் மறைந்தது.

படபடவென இருந்தது.
காதில் நீ தான் என்று கேட்டுக்கொண்டிருந்தது ,
என்ன செய்வது தெரியாமல் ஓடி , ஆயா மடியில் போய் படுத்துக்கொண்டேன். பருப்பு புடைக்கும் சத்தம் கூட பயமாக இருந்தது. ஆயாவிடம் , தாத்தா எங்கே என்றேன். காட்டுக்கு குப்பை எடுக்க போயிருக்காருடா. அப்போ நானும் போனேனா? இல்ல இது கனவா? கருக் என்று இருந்தது. யாரிடமும் சொல்லாதே என்றும் சொல்லியது அந்த நிழல் .

காதில் தொடங்கியது நீ தான் என்ற ஓலம்.

....தொடரும்...

Keep supporting
Thank you ,
Encourage me by following.
"தமிழ் வாழ்க."
நினைத்தை எழுதுபவன் ,நல்லதை நினைப்பவன்.
உருவமில்லா நிழல்
comment your feed back .

© hmkpadi