...

7 views

மாயை பேசுதடா 4
அதற்கு குட் மார்னிங் மனைவி, "பக்கத்து போா்சனில் ஒரே ஒரு  ஆள் தான் இருந்தார். இப்போ தான், நீங்கள் வரதுக்கு  பதினைந்து நாளுக்கு முன் வீட்டை காலி செய்து விட்டு போனார். காலி செய்யும் போது கூட ஏதோ  பிரெண்ட்ஸ்னு  சொல்லிட்டு இரண்டு பேரு  மட்டும் வந்து அவர் பொருளை எடுத்துட்டு போனாங்க." என்றாள்.

"ஏன் அவருக்கு  என்னாச்சு?.." என்றாள் ஜானு.

"இப்போ கோமாவில் இருக்கார். எப்போ நினைவு வரும்னு  சொல்ல முடியாது என்று டாக்டர் சொல்லிட்டார்னு.. ஹவுஸ் ஓனர் மனைவி தான் சொன்னாங்க. அவருக்கு கல்யாணம் ஆகல. சொந்தம்னு சொல்லிட்டு இதுவரை யாரும் வந்ததேயில்லை பாவம்... " என்று கூறினாள் குட் மார்னிங் மனைவி.

"ஏய் செல்லம், இதெல்லாம் எடுக்க கூடாது. ஆன்டி திட்டுவாங்க. அவங்களோட ஸ்டிக் இது. கொடுத்து விடு மா... " என்று ஜானு அவள் குழந்தை எடுத்த ஸ்டிக்கை  வாங்கி குட் மார்னிங் மனைவியிடம் கொடுத்தாள்.

"இது எங்களோடது இல்லை. பக்கத்து வீடு காலி செய்யும் போது ஒரு சில பொருட்களை வேண்டாம்னு விட்டுட்டு போயிட்டாங்க. அதை ஹவுஸ் ஓனர் சுத்தம் செஞ்சி கொண்டு இருந்தாங்க. எங்க வீட்ல இருக்கிற இரண்டு வாலுங்க  இது அழகாய் இருக்கு வேண்டும்னு கேட்டு வாங்கிட்டு வந்தாச்சு. சும்மா கையில் வச்சு விளையாடுவாங்க.  நீங்க குழந்தைட்ட  கொடுங்கள். நீ வச்சுக்கோ செல்லம்... " என்று ஆசையாக கொடுத்தாள் குட் மார்னிங் மனைவி.

மீண்டும் ஜானு,  தான் இப்போது இருக்கும் வீட்டை  பற்றி விசாரிப்பதிலேயே இருந்தாள்.

" கோமாவில் இருந்தவர் இப்போ எப்படி இருக்கார்ன்னு  தெரியுமா?.." என்றாள் ஜானகி.

" அதெல்லாம் தெரியாதுங்க. உங்க கூட இப்போ தான் பேசுறேன். எவ்வளவு நல்லா பழகிட்டோம். ஆனால், அங்கே லேடீஸ் யாரும் இல்லையா... அதிலும் முதலில் இருந்தவர் ராத்திரி மட்டும் தான் வருவார். பகலில் இருக்க மாட்டார். நாங்க அவரை பார்ககிறதே அதிசயம்" என்று கூறினாள் குட் மார்னிங் மனைவி.

"ஏன், அவர் என்ன வேலை பார்த்தாரு... " என்றாள் ஜானகி.

" அவர் ஏதோ வால் பெயிண்டிங், சர்க்கஸ், மேஜிக் என்று சுற்றி கொண்டேயிருப்பாா்.  பாா்த்து பேசியதெல்லாம் கிடையாது... " என்றாள் குட் மார்னிங் மனைவி.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது குழந்தை  தூங்கி விட்டது.
"சரிங்க, குழந்தை தூங்கி விட்டது. நான் கொஞ்ச நேரம் கழித்து வரேன்" என்று குழந்தையை தூக்கி கொண்டே வீட்டிற்குள் வந்தாள்.

"ஆன்ட்டி, ஆன்ட்டி...  பாப்பா இந்த ஸ்டிக் ஆசையா வச்சு விளையாடியது. அதான், அம்மா பாப்பாவிடம் கொடுக்க சொன்னாங்க.. " என்று பக்கத்து போர்ஸன் குழந்தைகள் கொடுத்து சென்றனர்.

அதை, குழந்தை விளையாடும் பொருட்களில் வைத்து விட்டாள்.

ராத்திரி வந்து விட்டது.

"வீட்டிற்கு போகனும், ஜானு எப்படி இருக்காளோ  தெரியலையே. அவள்  எப்படி இருக்கானு  பாா்த்து விட்டு நடந்தது சொல்லிடலாமா, ரொம்ப நாள் மறைக்க முடியாது. அவளுக்கு உண்மை தெரிந்து இருக்கும் அதான் கோவிலுக்கு போயிருக்கனும். ஆனால், அவள் ஏன் நடந்ததை மறைக்கிறாள்.. சரி, ராத்திரி வந்து விட்டது இப்போ எப்படி இருக்கிறாளென்று பாா்த்து விட்டு சொல்லிடலாம்."  என்று யோசித்து கொண்டே வீட்டிற்குள் செல்கிறான் பூபதி.

அங்கே, குழந்தை அந்த ஸ்டிக் வைத்து விளையாடுகிறது. இதை பார்த்தவன், " ஜானு, குழந்தை என்ன ஏதோ புதுசா கையில் வச்சுருக்கு. "  என்று கூறி கொண்டே குழந்தையை தூக்கினான்.

" பக்கத்து வீட்டில் குழந்தை விளையாட கொடுத்தாங்க... " என்று ஜானு கூறினாள்.

"பக்கத்து வீட்டிலா.., அதுக்குள்ள பேசி பழகிட்டியா.. " என்று ஆர்வமாக கேட்டான் பூபதி.

"ஆமாங்க. சரி, அதெல்லாம் இருக்கட்டும். சீக்கிரமா குளித்து விட்டு சாப்பிட வாங்க.  உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்." என்று கூறினாள்.

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. "நான் இவளிடம் முக்கியமான விஷயம் பேசனும்னு நினைத்தால் இவள் என்னிடம் ஒரு விஷயம் சொல்லனும்னு சொல்றாளே...பேய் சஸ்பென்ஸ விட இவள் சஸ்பென்ஸ் தான் பயங்கரமா இருக்கிறது" என்று யோசித்தான்.
 
"சரி ஜானு சொல்லு, என்ன முக்கியமான விஷயம் பேசனும்.. " என்று கேட்டான் பூபதி.

அதற்கு ஜானு, " இந்த வீட்டில் நேற்று ராத்திரி ஒரு சில உருவங்களை பார்த்தேன். கருப்பு  உருவங்கள் அங்குமிங்கும் ஓடுது. கிச்சன்ல ஏதோ ஒரு உருவம் சமையல் செய்து கொண்டிருக்கு. இன்னொரு குட்டி உருவம் நேற்று நைட்  கதவை திறக்கிறேன் பெட்ரூம் வாசலில் படுத்திருக்கு. இங்கே பேய் தான் இருக்கனும். " என்று பதற்றமாக கூறினாள்.

ஜானு, "பயப்படாதே நான் இந்த வீட்டிற்கு வந்த ஒரு நாளிலேயே எனக்கு  இங்கே ஏதோ இருக்குதுன்னு தெரிஞ்சு போச்சு. கேமரா வச்செல்லாம் பார்த்தேன். ஒரு நாள் வீடு அலங்கோலமா இருக்கும். ஒரு நாள் சுத்தமா இருக்கும். இதுக்கு முன்னாள் இந்த வீட்டில் யார் இருந்தாங்கன்னு தெரியனும்... ஆனால், இதை யாரிடமும் சொன்னாலும் நம்பமாட்டார்கள்... "என்று பூபதி கூறினான்.

" ஆனால், பக்கத்து வீட்டில் அந்த அம்மா நல்லா பேசினாங்க. நான் அவர்களிடம் கேட்டேன். இந்த வீட்டில் நமக்கு முன்னாள் ஒரே ஒரு ஆள் தான் இருந்தாராம்... அவர் இப்ப ஆக்ஸிடன்ட் ஆகி கோமாவில் இருக்காராம்.  அவரை ராத்திரி மட்டும் தான் பார்க்க முடியுமாம் பகலில் வீட்டிலே இருக்கமாட்டாராம்."  என்றாள் ஜானு.

"ஏன், என்ன வேலை பார்த்தாராம்? ".. என கேட்டான் பூபதி.


‌"அவர் வால்  பெயிண்டிங்,  சர்கஸ்.... " என்று கூறியவளை "கொஞ்சம் பொறு... குழந்தை எங்கே?... வெளியில் யாரோ பேசுற குரல் கேட்குது.... "  என்று அவர்கள் வெளியே மெதுவாக வந்து பார்த்தவர்கள் திகிலடைந்து  நின்றார்கள்.


சற்றே பயத்துடன், "பூட்டிய வீட்டிற்குள்  எப்படி... அய்யோ.... என் பிள்ளை..." என்று
கை நடுக்கத்துடன் குழந்தையை தூக்கச் சென்றாள் ஜானு.


மாயை தொடரும் ✍✍


© Ramyakathiravan