...

1 views

நகைச்சுவை இலக்கியம்
நகைச்சுவை என்பது தனி உரையாடலாக நிமிடக் கதை வடிவில் இருந்ததில்லை.இலக்கியம் மற்றும் விளம்பர இதழ்களில் நகைச்சுவை துணுக்கு என்னும் பெயரில் படத்துடன் வெளிவருகிறது.மேலும் சிறுகதை, நாவல் ஊடாகவே நகைச்சுவை கதாபாத்திரங்கள் இழையோடும்.நாடகங்களில் வரும் கட்டியங்காரன் சர்க்கஸில் வரும் பபூன் போன்றோர் சினிமாவில் பிரதான கதையோடு பெரும்பாலும் ஒட்டியோ அல்லது தனித்தோ நகைச்சுவை மாந்தர்கள் படைக்கப்பட்டிருப்பர்.
உணர்வுப்பூர்வமான நுணுக்கமான செய்திகளை மனதில் பதிய வைத்து சிந்திக்கத் தூண்டும் இந்நகைச்சுவை மாந்தர்களை வாசிப்பாளர்களும் சில இலக்கியவாதிகளும் கேலிப்பொருளான சித்தரிப்பிலேயே கண்டு பழகிவிட்டனர் என்பதே உண்மை.
மாப்பிள்ளை சோக்கு:
----------------------------------------------
இரண்டு வருடங்கள்
கழித்து கிராமத்திலிருந்து பட்டணத்திற்கு தன் மகள் விசாலாட்சியையும் மாப்பிள்ளை சுந்தரத்தையும் பார்க்க சந்தியா கிராமம் சம்பந்தம் வருகிறார்.
தன் மகளை எப்போதும் தாய்,குழந்தை என அழைத்தே பழக்கப்பட்டவர்.
சம்பந்தம்:
அம்மா,குழந்தை என அழைத்தபடியே வருவதை கண்ணுற்ற மகள்...
விசாலாட்சி:
வாப்பா.எப்படி இருக்கீங்க.அம்மாவையும் உங்களையும் பார்த்து இரண்டு வருஷமாச்சு.இப்பதான் வர்றீங்க.போன்ல பேசறதோட சரி.
சம்பந்தம்:
அது சரி.இப்பதாம்மா நான் தாத்தாங்கற அந்தஸ்தை குடுத்துருக்க.அது போகட்டும்,உனக்கு கூடமாட ஒத்தாசைக்கு அம்மா வரன்னேன்னுருக்கா.ஆமா மாப்பிள்ளை எப்படி இப்பவும் அப்படியேதான் இருக்காரா
விசாலாட்சி:
ம்...ஏதோ இருக்காருப்பா.வேலையிலேயும் சரி எதனாச்சும் வாங்கப் போனாலும் சரி ஏமாந்துதான் நிக்கிறாரு.என்னத்தச் சொல்ல,எல்லாம் நீங்க கட்டிவச்ச மாப்பிள்ளையாச்சே.இதோ அவரே வராரு.நீங்களே தெரிஞ்சிக்கோங்க
சுந்தரம்:
வாங்க மாமா.கிராமத்துல எல்லாரும் சௌக்யந்தானே.அத்தை வரலியா.விசாலம் அப்பாவுக்கு காப்பி போட்டு கொடுத்தியா என்றான் ஒரே மூச்சில்.
விசாலம்:
அதெல்லாம் ஆச்சு.உங்கள புளி வாங்கியாரச் சொன்னேனே.ஒழுங்கா பாத்து வாங்கினீங்களா.
சுந்தரம்:
நீ சொன்னது நல்லதா போச்சு.அரை கிலோ புளி அறுபது ரூபா.ஒரு கிலோ நூத்தி இருபது ரூபான்னான் கடைக்காரன்.நான் ஏமாறுவேனா,நீ சொல்லி அனுப்பிச்ச மாதிரியே இரண்டு அரைக்கிலோதான் வேணும்,நூத்தி இருபது ரூபாதான் தருவேன்னு கறாரா சொல்லி வாங்கியாந்தேன்.எப்படி இப்பவாவது ஒத்துக்க.நான் ஒருபோதும் ஏமாறமாட்டேன்னு என்றதுதான் தாமதம்.
சம்பந்தமும் விசாலமும் தலையில் கை வைத்தபடியே இருக்க வீடு தனக்குள் மவுனமாய் சிரித்துக்கொண்டிருந்தது.
அசட்டுச் சிரிப்புடன் சுந்தரம் தலையை சொரிந்துகொண்டான்.
( இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் கற்பனையே.யாரையும் குறிப்பிடுவன அல்ல என்னையும் சேர்த்து😂)
© MASILAMANI(Mass)(yamee)