...

2 views

வேலி காத்தான்

அத்தியாயம் : 122

காரிருள் விண்ணை கவ்விக் கொண்டிருந்த நேரம். நிலவு பயத்தில் மேக கூட்டங்களின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தது. நிசப்தம் குடி கொண்டிருந்த அந்த வேளையில் வீரகேசர நாட்டின் தளபதி உதிரனின் மாளிகை வெளிச்சத்தில் விழித்திருந்தது. எடுபிடி இரு கைகளையும் கட்டிக் கொண்டு பவ்வியமாக நின்று கொண்டிருந்தான். உதிரன் குறுக்கும் நெடுக்குமாக கோபா வேஷத்துடன் நடந்து கொண்டிருந்தான். அவன் முகம் கொதித்துப் போயிருந்தது. கண்கள் எரிமலைக் குழம்புகளாய் சிவந்து போயிருந்தன. எடுபிடி பயம் கலந்த தொனியில்...