...

1 views

நடைப் பிணங்கள்
வருடம் இருபது
கடந்துவிட்டிருந்தது.
தாயகம் வரவேற்றது,பல மனப் புழுக்கங்களுடன்.
என்னை சுமந்து வந்த கார் காவிரிக் கரையோரம் இறக்கிவிட்டு சிறிது ஓய்வெடுத்துச் சென்றது.பரந்துபட்ட மருத நிலத்தில் பல கோயில்களின் வரலாற்றை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது திருக்குடந்தை என்னும் கும்பகோணம் மாநகரம்.ஜெர்மனியிலிருந்து தாய்,தந்தையருடன் வந்திருக்கிறேன் வீட்டை என் பெயரில் பத்திரம் எழுதி ரிஜிஸ்டர் செய்வதற்காக.அந்த இரண்டு நாள் அவ்வளவாகக்கண்டு
கொள்ளவில்லை.
நான் பிறந்து வளர்ந்து கல்லூரிவரை பயின்றது இங்குதான் என்றாலும் வேலை நிமித்தம் என்னை சிந்திக்க விடவில்லை.பெற்றோரின் நினைவுகளுடன் இப்பொழுது காவிரிக்கரை இடத்தை விற்பதற்காக மட்டுமல்லாமல் ஒரு மாதம் மனைவி, மகன்,மகள் என குடும்பத்தோடு தங்கி உறவுகளையும் சந்தித்துவிட்டு செல்வதற்காக வந்தவன்.
காவிரிக் கரையோரம் நாங்கள் இருந்த வீடு பாதி இடிந்து புற்களும் மரங்களும் அடர்ந்திருந்தது.தங்குவதற்கு உறவுகளை நாடிச் செல்லவேண்டிய கட்டாயம்.கரையிலிருந்து நடை தூரத்தில் பெரியப்பா வீடு இருந்தது.
அங்கு சென்று தங்குவதென முடிவெடுத்து தலைவாசல் அழைப்பு மணியை அழுத்தினேன்.
அழைப்பொலி கேட்டுவந்த பெரியப்பா மூக்குக் கண்ணாடியைத் துடைத்தபடியே,
யாரது,அட நம்ம மகாதேவனா,
வாப்பா என சொல்லிவிட்டு அலமேலு
யார் வந்துருக்கா பாரு என்று மகிழ்ச்சியுடன் கூறிவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.நாங்கள் குளித்துவிட்டு டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்தோம்.இப்பவாவது எங்கள பாக்கணும்னு தோணித்தே என்றார் பெரியம்மா.சந்தோசத்துடன் பக்கத்து ஊர்களிலுள்ள சொந்தபந்தங்களைப் பற்றி அளவளாவினாள்.
சாப்பிட்ட சில மணித்துளிகள் கழித்து நடைப் பயிற்சி செய்வது வழக்கம்.
இருமணித் துளிகள்தான் காவிரிக்கரை வந்தடைந்தேன்.
மறுமுறை வீட்டைப் பார்த்துவிட்டு கரையின் மேற்படிக்கட்டிலிருந்து பார்த்தேன்.நீண்ட ஏழு படிக்குக்கீழ் உடைந்த படிங்கட்டுகள் மணற்திட்டுக்கள் தெரிய வாய்க்கால் போல ஆற்றுத் தண்ணீர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு செல்வது போல் இருந்தது.ஆற்றில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் குப்பைக் கூளங்கள்,கிழிந்து நைந்த ஆடைகள்,உடைந்த மது பாட்டில்கள்,இரவில் யாரோ விட்டுச் சென்ற காண்டக் கழிவுகள்,மாட்டுச்...