...

24 views

விதவை

© நாவல்

[#விதவை part 8 climax கதையின் முடிவு

ஆண்களை போலவே பெண்களுக்கும் சம உரிமை குடுக்கிறோம் என்று அந்த நபர் கூறிய வார்த்தைக்கு பதில் கூறினாள் லட்சுமி.

நான் கல்லூரியில் படிக்கும் போது என் தோழியை பார்த்து ஒரு பையன் கேட்டான் வியர்வை காலத்தில் நான் சட்டையை கழற்றி விட்டு ரோட்டில் நடப்பேன் உன்னால் முடியுமா என்று கேட்டான்.

அந்த பையன் கேட்ட கேள்விக்கு அந்த பொண்ணுடைய இடத்தில் இருந்து நான் இப்போது பதில் கூறுகிறேன்.

இந்த இடத்தில் நான் என்னுடைய ஜாக்கெட் கழற்றி விட்டு நடக்கிறேன்
அதேபோல எந்த ஆணாவது அவனுடைய பேண்ட்டை கழற்றிட்டு நடப்பானா என்று மிகவும் ஆக்ரோஷமாக அந்த நபரை பார்த்து கேட்டாள் லட்சுமி.

உங்களால் பதில் சொல்ல முடியாது ஏனென்றால் மானம் என்பது ஒரு ஆணுக்கு இடுப்பிற்கு கீழே இருக்கிறது.

ஆனால் ஒரு பெண்ணின் மானம் என்பது அவளுடைய கழுத்திற்கு கீழே தொடங்குகிறது.
அப்படி பட்ட மானத்தை தான் பெண்கள் நாங்கள் எல்லோரும் எவ்வளவு வியர்வை வந்தாலும் துணியால் மூடி வைத்துக்கொள்கிறோம் ஆனால் அதை திறந்து காட்ட முடியுமா என்று எங்களிடம் சவால் விடுவது தான் ஆண்கள் நீங்கள் எங்களுக்கு தரும் சம உரிமையா என்று அந்த கூட்டத்தில் பல ஆண்களை பார்த்து கேட்டாள் லட்சுமி.

ஒரு ஆண் குடி போதையில் ஒரு பெண்ணை கற்பழிக்கிறான் ஏன் இப்படி பன்னனு கேட்டா போதையில் பன்னேனு சொல்கிறான்.
ஆனால் அதேபோல இன்றைய காலகட்டத்தில் சில பெண்களும் மது குடிக்கிறார்கள் ஆனால் தனியாக சென்ற எந்தவொரு ஆண்னையும் ஒரு பெண் குடி போதையில் கற்பழித்ததாக ஏன் எந்த செய்தியிலும் வரவில்லை??

தன்னுடைய காம பசிக்கு ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு ஏதோ குடி போதையில் தெரியாமல் செய்து விட்டேன் என்று கூற ஒரு ஆணுக்கு தேவைப்படும் அல்ப்ப காரணம் தான் குடி போதை
இதனால்தான் எந்தவொரு பெண்ணையும் தனியாக வெளியே அனுப்ப அன்றிலிருந்து இன்றுவரை அனைத்து பெற்றோர்களும் பயப்படுகிறார்கள்.
இதில் எங்கே சார் இருக்கிறது பெண்களுக்கு ஆண்கள் குடுக்கும் சம உரிமை.

ஒரு பொண்ணு சமுதாயத்தில் எதிர்ப்பார்ப்பது சம உரிமையை இல்லை நம்பிக்கையை மட்டும் தான்,
அந்த நம்பிக்கை இன்று வரை எந்தவொரு பெண்ணுக்கும் கிடைத்ததில்லை என்ற சொல்லி முடித்தாள் லட்சுமி.

நான் எப்போது சிரிக்க வேண்டும் எப்படி சிரிக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது.

கணவனை இழந்த நான் இப்போது உங்க எல்லாரு முன்னாடியும் வளையல் போடுறேன்,
அய்யய்யோ இந்த பொண்ணு சமுதாய வரைமுறைய மீறி நடக்கிறானு யாருக்கெல்லாம் தோணுதோ தயவுசெய்து நீங்க அப்படிப்பட்ட எல்லோரும் செத்துருங்க என்று சொல்லி விட்டு தன்னுடைய கைகளில் வளையல்களை மாட்டிக்கொண்டு அந்த வளைகாப்பு மேடையில் இருந்து கீழே இறங்கினாள் லட்சுமி.

லட்சுமியின் மாற்றத்தை பார்த்து அங்கிருந்த பல பேர் தன்னை மறந்து கைகளை தட்டினரார்கள்.

இன்று லட்சுமி வாழ்க்கையில் எடுத்த முடிவை இனிவரும் காலத்தில் எல்லா பெண்களும் எடுக்க வேண்டும்.

பெண்ணின் முடிவு ஒரு போதும் தவறாக போனதில்லை


தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் ஒரு உயிரை பெற்று எடுக்கும் புனிதமான இனம் தான் பெண்.

அப்படிப்பட்ட பெண்களை சந்தனம்,குங்குமம் என்று அலங்கரிக்கா விட்டாலும்,
வெள்ளை புடவை கட்டி விதவை என்ற பட்டத்தை குடுத்து அவர்களின் உணர்களை உயிரோடு இருக்கும் போதே நாம் கொன்று விட வேண்டாம்.

விதவை என்ற சொல்லை உலகை விட்டு விரட்டுவோம்.

(மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தொடங்கட்டும்)

சுபம்.

கதையின் முடிவு சரியா என்று உங்கள் கருத்துக்களை கமென்டில் சொல்லுங்கள் நண்பர்களே
நன்றி.
அன்புடன்
மு.சதாம் உசேன்