...

5 views

கதை சிறிது !
காலை

சுத்தமாகக் குளித்து விட்டு

கடவுள் வணக்கம்

முடிந்த பிறகு ,

வத்தலை உலர்த்த

மொட்டைமாடிக்குப்

போனேன் !


அந்த நேரத்தில் அங்கு

வழக்கமாக வரும்,

பக்கத்து வீட்டுப்

பெண்ணைப்

பார்த்துப் ,

பைத்தியமானேன் !


அவளை,

சத்தமில்லாமல் நித்தம்

தொடரும் நிழலாகத்

தொடர்ந்தேன் !


பித்தம் ஏறித்தான்

தொடர்கிறே- னென

யெண்ணி,

மத்தியானம் போய்

மருத்துவரைப்

பார்த்தேன் !


அவரோ,

இது காதல் ! திருமணத்தில்

தான் குணமாகும்

என ,

சத்தியம் செய்து சொல்லி

விட்டார் !


இந்த காதல் வேண்டாமென

எத்தனை தரஞ் -

சொன்னாலும்

கேட்க்காத புத்திக்கு ,

ராத்திரி 10 மணி வரை புத்தி

சொல்லி விட்டு,

பட்டினியோடுப்

படுத்து விட்டேன் !


சுத்தமாகத் தூக்கம்

வரவில்லை -யென-வேக்

கத்தி ஆர்பாட்டம் பண்ணி

அரற்றும் மனதை ,

அழுது ஆற்றிய பின் ,


சுற்றும் மின்விசிறியை

நிறுத்தி விட்டு ,

போர்வையை இழுத்துப்

போர்த்திக் கொண்டு ,

மீண்டும் படுக்கப் போனேன் !


களைத்துப் போயிருந்த

மனம்

செத்தது போல் ,

தூக்கத்தில் ஆழ்ந்து விட்டது !


மறுநாள் காலைத் தட்டப் -

பட்டக் கதவைத் திறந்தேன் !

பக்கத்து வீட்டுப் - பெண்

நின்றிருந்தாள் !


நேற்று நடந்ததை முகத்தில்

காட்டிக் கொள்ளாமல் ,

என்ன? என வினவினேன் !


உனக்கு நம்பிக்கை யில்லை

யென்றால் ,

நாளைக்கு கூட நமது

திருமணத்தை முடித்துக்

கொள்ளலா - மென்றாள் !


உளராதே ! அப்படி -யெல்லாம்

ஒன்றுமில்லை - யென

முணகினேன் !


அப்படியா?
உன்னை பரிசோதித்த

மருத்துவர் எனது தாய் மாமா


என்றாலே ,

அந்த நொடி அழுவதா ?

சிரிப்பதா ?

என,
எனக்குத் தெரியவில்லை !

...................................................

மருத்துவரிடம்

உண்மையை

முகவரியோடு

சொல்வது

சரியா?

தவறா?
.................................................

© s lucas