...

9 views

யார் அவர்கள்....2
தொலைக்காட்சியில் காட்டிய புகைப்படம் என்னை தீவிரமாக சிந்திக்க வைத்தது, இறந்தவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்? ஒரு வேளை பேய் என்பது நிஜம்தானோ? அந்நேரம் பார்த்து வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவே எழுந்து சென்று பார்த்தால், பக்கத்து வீட்டு பரமசிவம், உள்ளே வாங்க என அழைக்கவும், வந்தவர் உடனேயே தம்பி, இன்னைக்கு காலையிலே ஒரு செய்தி பார்த்தீங்களா? என கேட்கவும் என்னிடம் ஒரு எண்ணம், நேற்று நடந்த விஷயத்தை கூறவா? வேண்டாமா? என, ஆனால் அவரே அதிர்ச்சி அடைந்து மேலும் தொடர்ந்தார், தம்பி இப்போ நீங்க குடியிருக்குற இந்த வீட்ல மூணு வருஷம் முன்னாடி ஒரு குடும்பம் குடியிருந்தது, நல்லாதான் வாழ்ந்துட்டு இருந்தாங்க என்ன பிரச்சனைனு தெரியலா? ஒரு நாள் மூணு பேரும் தூக்கு மாட்டிக்கிட்டு செத்து போய்ட்டாங்க, சொந்தம் னு சொல்லி யாருமே பார்க்க கூட வரல, நாங்க அக்கம் பக்கத்தில இருக்குறவங்க சேர்ந்துதான் இறுதி காரியம் செஞ்சு முடிச்சோம், அதற்கு பிறகு ஒரு வருஷம் இந்த வீடு பூட்டியே கிடந்தது, அதற்கு அப்புறம் உங்க வீட்டோட முதலாளி பூஜை எல்லாம் பண்ணி வாடகைக்கு விட்டாரு அப்புறம் தான் நீங்க வந்தீங்க, இத உங்க கிட்ட சொல்லிக்க வேண்டாம்னு எங்க எல்லார் கிட்டயும் கேட்டுக்கிட்டாரு, அதான் நாங்களும் இத பத்தி எதுவும் சொல்லிக்கல, ஆனா எப்படி இறந்து போன ஒரு குடும்பமே மறுபடியும் விபத்துல மாட்டி இறந்து போக முடியும்? எனக்கு என்ன பன்றதுனே தெரியல தம்பி அதான், உங்கள பார்த்து இத சொல்லீட்டு போலானு வந்தேன், தம்பி எதற்கும் கொஞ்ச நாள் வேற பக்கம் இருங்க, இல்லன வேற வீடு பார்த்து போய்டுங்க, என கூறியவாறே சென்று விட்டார்! எனக்கு பைத்தியமே பிடிப்பது போல ஒரு உணர்வு! எப்படி இறந்த ஒரு குடும்பம் மீண்டும் இறக்க முடியும்? புரியாமல் யோசித்து கொண்டிருந்த அந்த வேளையில்......
(தொடரும்)

- சிவ ப்ரகாஷ்

#யார்அவர்கள் #சிவப்ரகாஷ்
© சிவ ப்ரகாஷ்