...

11 views

தாத்தா மிட்டாய் கடை
அந்த ஆரம்பப் பள்ளிக்கு வெளியே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் கீழே அமர்ந்து மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார் ஒரு வயதானவர்.

அவரிடம் நிறைய வண்ணங்களில் மிட்டாய், பர்பி மற்றும் வித விதமான ரொட்டி துண்டுகள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அவருடைய அந்த கடைதான் அங்குள்ள மாணவர்களுக்கு மிக பெரிய கடை.
அந்த பெரியவரை அனைவரும் தாத்தா என்று அன்போடு அழைப்பார்கள். அதனாலே அந்த கடையை அனைவரும் தாத்தா மிட்டாய் கடை என்றே அழைத்தனர்.

சிறுவர்களுக்கு மிட்டாய் என்றாலே பிரியம், அதுவும் அதனை சுவைப்பதிலே அலாதி பிரியம்.

அந்த பள்ளியில் படிக்கும் எல்லா சிறுவர்களும் தங்களுக்கு தேவையான வண்ண மிட்டாய்களை தாத்தா மிட்டாய் கடையிலே வாங்குவார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணங்களில் மிட்டாய்களை வாங்கி கொண்டு, அதை தன் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டு சாப்பிடுவதை காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது.

இந்த குழந்தைகளுக்காகவே அவர் தினமும் அந்த கடையை வைப்பார். ஏனென்றால் அவருக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம்.

அதனாலேயே அவர் இந்த கடையை பள்ளி அருகே வைத்துள்ளார். அவர்களின் குறும்பும், பேச்சும் மற்றும் விளையாட்டுத்தனத்தையும் ரசித்து கொண்டிருப்பார் அவர்.

இவ்வாறாக அவரின் ஒவ்வொரு நாளும் குழந்தைகளுடன் கழிந்து கொண்டிருக்கிறது.

அவர் இருக்கும் வரை அந்த தாத்தா மிட்டாய் கடை இருக்கும் அந்த ஊரில்.....


© Megaththenral