...

4 views

இதுவும் கதை தான்!
சந்தை வெளியில் ஒரு சண்டை.

சண்டைக்குக் காரணம் வியாபாரப் போட்டி .

போட்டியிருக்கலாம்.
அடுத்தவர் ஃபோட்டி எடுக்குமளவு இருக்கக் கூடாது.

கூடாது என்றான் வெண்டைக்காய் கடைகாரன்.
ஏன் கூடாது என எதிர் வினா கேட்டாள் கத்தரிக்காய் கடைக்காரி.

அப்புறம்,

ஆரம்பத்திலேயே சண்டையைத் தடுத்து

நிறுத்த வந்த,

முட்டைக்கோஸ்
கடைக்காரியின் நடத்தையை

சுண்டைக்காய் கடைக்காரன் விமர்சித்து,
'வம்பிழுத்ததால் ,
சண்டை வலுத்து
கும்பல் கூடிவிட்டது.

சண்டை வேண்டாமென்ற , முள்ளங்கிக் கடைக்காரன்
அன்புவின்

சமாதானக் கொடி பறக்கவிட்ட அடுத்த நொடியே நாறு நாறாய் கிழிந்து நாளாப்பக்கமும் சிதறி நாசமாய் போனது.

போனதுபோகட்டும் என விட்டுவிடப் பார்த்தேன்.

ஆனால் ,

நீங்கள் சமாதானமாகவில்லை.

இதனால் ,

இந்த சந்தை ,

சண்டை மைதானமாகி விடும்.

ஆகவே,

சண்டையை நிறுத்துங்கள்,

அல்லது,

கடையை மூடி கொண்டு கிளம்புங்கள்.
என மூர்க்கமாக சொன்னான் முருங்கைக்காய் கடைக்காரன் குணா.

குணாவின் கருத்தை வெங்காயக் கடைக்காரனும்,

பீட்ரூட் கடைக்காரியும்

ஆமோதித்து,

கேரட் கடைக்காரனோடு சேர்ந்து,

ஆமாம்,

அப்படித்தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் பயம் வரும்,
சந்தைக்கு வந்தால்,

வியாபாரத்தை மட்டும்,
பார்ப்பார்கள் !

கோவைக்காய் கடைக்காரரே- சுரைக்காய்-

பீர்க்கங்காய் கடைகாரர்களே,

நீங்கள் எல்லாம் என்ன சொல்கிறீர்கள் என ,

மற்ற கடைக்காரர்களைப் பார்த்து கேட்டார்கள்.

கேட்டால் தான் சொல்வோம் என்பது போல ,

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த,

பரங்கிக்காய்க் கடைக்காரரும்,

புடலங்காய்க் கடைக்காரியும் ,

அப்படியெல்லாம் செய்ய முடியாது.
அது நல்லது இல்லை.
வேண்டுமென்றால் அபராதம் போடலாம் என்றார்கள்.

என்றாவது வாயை திறந்து பேசுபவர்களே சொன்ன சொல்லுக்கு மறுப்பில்லை. அப்படியே செய்வோம்.

என,

பாவக்காய்க் கடைகாரியைக் கலந்து கொள்ளாமலே,

வாழைத்தண்டு கடைக்காரனுக்குப் பக்கத்தில்

இருந்த ,

கீரைக் கடைக்காரியைக் கேட்டு,

தீர்மானமாக முடிவுக்கு வந்தாள் கருவேப்பிலைக் கடைக்காரி.

சந்தையை முடித்துக்கொண்டு,
வீட்டுக்கு வந்தப்,
பிறகுதான் ,
தக்காளியை மறந்து விட்டது

என்,
நினைவுக்கு வந்தது.





© s lucas