...

8 views

காதல் பயணம்-6
காதல் பயணம்-6

சந்தியா அந்த கடிதத்தை பிரித்து படித்தாள். சந்தியாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. சந்தியா அன்று முழுவதும் அந்த கடிதத்தை பற்றியே ரம்யாவிடம் பேசி கொண்டிருந்தாள். அஸ்வின் அந்த கடிதத்தை அவள் படிப்பாளா? அவளுக்கு பிடிக்குமா? என்று நினைத்து கொண்டு இருந்தான்.அன்று மாலை சந்தியா நடன பயிற்சிக்கு சென்றதால் யார் கடிதத்தை எழுதியது என்று அவளால் காண இயலவில்லை.

அன்று சென்று நடந்த அனைத்தையும் அம்மாவிடம் அஸ்வின் கூறினான்.அதற்கு சிரித்த படி அம்மா உனக்கு தான் காதல் மீது நம்பிக்கை இல்லை என்று கூறுவியே என்றார். ஆம் அம்மா ஆனால் அவள் கண்களை பார்த்ததும் அனைத்தும் மாறி விட்டது என்றான்.

நாளை காலை அவளிடம் எவ்வாறு பேச போகிறேன் என்று தெரியவில்லை பயமாக உள்ளது என்றான். அம்மா தைரியத்தை வரவழைத்து பேசு ஒன்றும் ஆகாது என்றார். அன்று இரவு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தான். அங்கு, சந்தியா கடிதத்தை பற்றி எண்ணி கொண்டிருந்தாள்.அவளுக்கும் தூக்கம் வரவில்லை.

மறுநாள் காலையில் சந்தியா இந்த கடிதத்தை யார் எழுதியிருப்பார் என்று தேடி கொண்டிருந்தாள். அஸ்வின் தைரியத்தை வரவழைத்து சந்தியாவிடம் பேச சென்றான். கடிதத்தை எழுதியது அஸ்வின் தான் என்று தெரியாமல் அவனை அடித்து விட்டாள்.அஸ்வின் எதுவும் பேசாமல் சென்று விட்டான்.

பின், இருவரும் அவரவர் கல்லூரிக்கு சென்று விட்டனர். ராகுல்(அஸ்வினை சீண்டி கொண்டிருப்பவன்) இனி நீ சந்தியாவை பார்க்கவோ? பேசவோகூடாது என்று கூறினான்....

ஏன் ராகுல் சந்தியாவை பார்க்க கூடாது என்று கூறினான் என்று அடுத்த பகுதியில் காண்போம்!........



© மனதின்_காதலி